
பஞ்ச கேதார ஸ்தலங்களில் சென்ற பதிவில் கேதார்நாத் பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் மற்ற ஸ்தலங்களைப் பற்றி பார்க்கலாம்.
துங்கநாத் கோயில்
இந்தக் கோயில் உலகத்தின் உயரமான இடத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரப்ப்ரயாக் மாவட்டத்தில் சிவாலிக் மலையில் 3680 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. துங்கநாத் என்பதற்கு, கொடுமுடிகளின் நாதர் என்று பொருள்படும். இந்தக் கோயில் பஞ்சபாண்டவர்களுடன் அதிக தொடர்பு கொண்டது.
ருத்ரநாத் கோயில்
இந்தக் கோயிலும் சிவாலிக் மலையில் கார்வால் கோட்டத்தில், சமோலி மற்றும் ருத்ரப்பிரயாக் மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலின் மூலவர்”நீல்கண்ட் மகாதேவ்“என்பவர் ஆவார். இந்தக் கோயில் கடல் மட்டத்திலிருந்து 3600 மீட்டர் உயரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.
ரிஷிகேஷ் நகரத்தில் இருந்து 241 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோபேஷ்வர் எனுமிடம் வரை பேருந்தில் செல்ல வேண்டும். அதன் பிறகு கோபேஷ்வரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாகர் என்ற கிராமத்திற்கு சிற்றுந்தில் சென்று, அதன் பிறகு கால்நடையாக இருவது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ருத்ரநாத் கோவிலை அடையலாம்.
மத்திய மகேஷ்வர்
இந்தக் கோயில், உத்தரகாண்டின் இமயமலை பகுதியில் 3497 மேட்டர் வேகத்தில் கார்வால் கோட்டத்தில், ருத்ரப்ராயாக் மாவட்டத்தின் மன்சூனா கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். நந்தி இந்த இடத்தில் சிவபெருமானாக காட்சியளிப்பதாக கருதுகின்றனர். இந்த கோயிலை பாண்டவர்கள் கட்டியதாக கருதப்படுகிறது.
கோடைகாலத்தில் மட்டுமே இன்று கோவில் திறந்திருக்கும். குளிர்காலத்தில் இந்த மூலவரான சிவலிங்கத்தை உகிமத் என்ற மடத்தில் வைத்து பூஜை செய்கின்றனர்.
கல்பேஷ்வர்
இன்று திருக்கோயில் உத்தரகண்ட் மாநிலத்தில் கார்வால் கோட்டத்தில், சமாதி மாவட்டத்தில் சிவாலிக் மலையில் மத்திய மகேஸ்வரர் கோயில் அருகே அமைந்துள்ள பண்டைய சிவன் கோயில் ஆகும்.
ரிஷிகேஷ் பத்ரிநாத் செல்லும் சாலையில் 253 கிலோ மீட்டர் தொலைவில் ஊர்கம் கிராமத்திற்கு சென்று பின்னர் 10 கிலோ மீட்டர் மலைப்பாதையில் கால்நடையாக அல்லது குதிரையில் சென்று இந்த கோயிலை வழிபடலாம்.
பஞ்ச கேதார ஸ்தலங்களை சாலை வழியாக சுற்றி வருவதற்கு 17 கிலோமீட்டர்கள் ஆகும்.. இதற்கு பதினாறு நாட்கள் ஆகும். குப்த காசியில் இருந்து, காளி மடத்திற்குச் செல்லும் கேதார்நாத் கோவிலை இனைக்கும் சாலையில் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மகேஸ்வரர் கோயில்.