பஞ்ச கேதார ஸ்தலங்கள்

பஞ்ச கேதார ஸ்தலங்கள் என்பவை இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் சிவாலிக் மலையில் அமைந்துள்ள கேதார்நாத் துங்கநாத் ருத்ரநாத் மத்திய மகேஸ்வர் மற்றும் கல்பேஸ்வர் ஆகியவையாகும். இந்த சிவஸ்தலங்களில் சிவபெருமானின் உடல் பாகங்கள் தோன்றியதாக சைவர்கள் நம்புகிறார்கள்.

கேதார்நாத் கோயில்

இந்தியாவின் 12 ஜோதிலிங்க சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் மந்தாகினி ஆற்றங்கரை அருகில் உள்ள சிவாரிமலை தொடரில் அமைந்துள்ளது இந்த ஸ்தலம். இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இந்த கோயில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் அதாவது அட்சய திருதியை நாள் முதல் தீபாவளி திருநாள் வரையே திறந்திருக்கும். குளிர்காலங்களில் கோயில் உள்ள விக்கிரகங்கள் குப்த காசியின் ஆகியத் மடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இந்தக் கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார்.

இந்த கோயிலுக்கு நேரடியாக சாலை வழியாக செல்ல முடியாது. கௌரி குண்டு என்னும் இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவு மலை மீது ஏறியே கோயிலுக்கு செல்ல முடியும். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத் ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இது சம்பந்தராலும் சுந்தரராலும் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் வடநாட்டு ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கி தவம் இருந்ததாகவும் அவர்களே இந்த கோவிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது

இந்தக் கோயில் ஆதிசங்கரரின் வருகைக்கு பிறகு புனரமமைக்கப்பட்டது.. வடக்கு இமயமலை தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்தக் கோயில் கங்கையின் கிளை நதிகளில் ஒன்றான மருந்தாகினி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ரிஷிகேஷில் இருந்து 223 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து 3583 மீட்டர் அதாவது 11, 755 அடி உயரத்தில் உள்ளது.

மகாபாரதப் போரில் தங்கள் உறவினர்களையே கொன்றதனால் ஏற்பட்ட பாவத்தை போக்கிக் கொள்ள பாண்டவர்கள் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். ஆனால் சிவபெருமான் கைலாயத்தில் இருப்பதனை அறிந்து அங்கு சென்றனர். கைலாய நோக்கி பிரயாணம் செய்ய தொடங்கிய போது ஹரித்துவார் வழியாக எமயுதத்தை அடைந்தபோது தொலைவில் சிவபெருமானை கண்டனர். ஆனால் சிவபெருமான் அங்கிருந்து மறைந்து விட்டார்.. அந்த இடம் தற்போது குப்த காசி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது..

சிவபெருமானின் தரிசிக்காமல் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் பாண்டவர்கள் குப்த காசியில் இருந்து இமாலய பள்ளத்தாக்கில் இருக்கும் கௌரி குண்டு என்ற இடத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் சிவபெருமானை தேடி அலைகையில் நகலுடன் சகாதேவனும் ஒரு வித்தியாசமான ஆண் காட்டெருமையை கண்டனர். பீமன் தனது கதாயுதத்தை கொண்டு அதனை தாக்க முயன்றான். ஆனால் அது சாதுரியமாக அவனது பிடியில் இருந்து தப்பிவிட்டது. இருப்பினும் பீமனின் கதாயுதம் அதன் முகத்தில் தாக்கியது. அந்தக் காட்டெருமை தனது முகத்தை நிலத்திலிருந்த ஒரு பிளவு ஒன்றில் மறுத்துக் கொண்டது. பீமன் அதன் வாலை பிடித்து இழுக்க முயன்றான். அப்போது நிலத்தில் இருந்த பிளவு நேபாளம் வரை நீண்டது. அந்த இடம் தற்போது நேபாளத்தில் தோலேஷ்வர் மகாதேவ் என்று வழங்கப்படுகிறது. அந்த காட்டெருமையின் உடற்பகுதி கேதார் நாத்தில் இருந்தது.

காட்டெருமையின் உடற்பகுதி இருந்த இடத்தில் ஒரு ஜோதிர் லிங்கம் உண்டானது. அதன் ஒளியில் இருந்து சிவபெருமான் பாண்டவர்களுக்கு காட்சியளித்து அவர்களின் பாவத்தை போக்கினார். அந்த முக்கோண வடிவ ஜோதிடர் லிங்கம் கேதார்நாத் கோயிலின் கருவறையில் உள்ளது. கோயிலை சுற்றி பாண்டவர்களின் பல அடையாளங்கள் உள்ளன.

பாண்டுகேஷ்வர் என்னும் இடத்தில் ராஜா பாண்டு உயிர் நீத்தார். இங்கிருக்கும் பழங்குடியினர் ‘பாண்டவர் ந்ருத்தியம்’ என்ற நடனத்தை ஆடுகின்றனர். பாண்டவர்கள் சுவர்க்கத்திற்கு சென்ற இடமான சுவர்க்கரோகினி என்ற மலை உச்சி பத்ரிநாத்திற்கு சற்று தொலைவில் உள்ளது. பீமன் காட்டெருமை உருவத்திலிருந்த சிவபெருமானோடு சண்டையிட்ட போது சண்டையின் முடிவில் காட்சி அளித்த சிவபெருமானுக்கு பீமன் நெய்யால் அபிஷேகம் செய்தான். அதன் நினைவாக இன்றும் கேதார் நாத்தில் இருக்கும் ஜோதிர் லிங்கத்திற்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது. நீரும் வில்வமும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன.

கோயிலுக்குள் நுழைந்ததும் பாண்டவர்கள், கிருஷ்ணர், சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர், வீரபத்திரர், திரௌபதி போன்றோரின் சிலைகளை காணலாம். கோயில் கருவறையினுள் முக்கோண வடிவத்தில் ஜோதிர்லிங்கம் இந்தக் கோயிலின் முகப்பு மேற்சுவரில் ஒரு மனிதனின் தலை செதுக்கப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் கேதார்நாத்தில் மகா சமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த இடம் கோவிலின் பின்புறம் அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் வீர சைவ ஜங்கம் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த கோயிலின் தலைமை அர்ச்சகராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் பூஜைகளை அவர் செய்வதில்லை. அவரது வழிகாட்டலின் படி அவரது உதவியாளர்கள் பூஜைகளை செய்கின்றார்கள். குளிர்காலத்தில் விக்ரகத்தோடு தலைமை அர்சகரும் உகிமத் மடத்திற்கு செல்வார். இந்தக் கோயிலில் ஐந்து முக்கிய அர்ச்சகர்கள் உள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரும் ஓராண்டுக்கு தலைமை அற்றகராக இருப்பார்கள். பூஜைகளின் போது கன்னட மொழியிலேயே மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாக தொடர்கிறது.

“கேதாரம் மேவினானை” என்றும்”கேதாரம் மாமேருவும்”என்றும் திருநாவுக்கரசர் பாடி இருக்கின்றார்.”வட கையிலை வணங்கி பாடிச் செங்கமல மலர் வாவித் திருக்கேதாரம் தொழுது..”என்றும் பாடியுள்ளார்கள்.

மற்ற ஸ்தலங்களைப் பற்றி அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: