
ருத்ரமா என்கிற ருத்ரமாதேவி கிபி 1259 முதல் 1295 வரை தக்காணத்தில் வாரங்கலை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட காகதீய அரசி ஆவார். காக தீயர்கள் ஆந்திரா அரச வம்சத்த வர்கள்.. அவர்கள் அதிகப்படியான ஆந்திர நிலங்களை கி.பி. 1083 முதல் 1323 வரை ஆண்டு வந்தவர்கள். அவர்களின் தலைநகரமாய் ஓரு கல்லு என்னும் நகரம் விளங்கியது. பிற்காலத்தில் அது வாரங்கல் என்று அழைக்கப்பட்டது. காகதீயர்கள் ஆரம்ப காலங்களில் சமண மதத்தை பின்பற்றியதாகவும் பின்பு காலப்போக்கில் இந்து மதத்தினை அங்கமான சைவ சமயத்திற்கு மாறியதாகவும் வரலாறு கூறுகிறது. டெல்லி சுல்தான்களின் படையெடுப்பிற்கு முன்பு வரை நிலையான ஆட்சி தந்தது பல அரச வம்சங்கள். அவற்றில் காகத்திய அரசும் ஒன்றாகும்.
வாரங்கல் நகரத்தினை தலைநகரமாக கொண்டு ஆண்டு வந்த கணபதி தேவரின் மகளான ருத்ரம்மா அவரது மறைவிற்குப் பிறகு அரசியாக முடி சுற்றிக்கொண்டார்.. கிழக்கு சாளுக்கியத்தில் நைதவோலுவின் இளவரசன் ஆன வீரபத்திரன் என்பவரை இவர் மணந்து கொண்டார். தொடக்க கால ஆட்சியில் சிற்றரசர்கள் பலர் தொல்லை கொடுத்து வந்தனர். அரசிக்கு உறுதுணையாக இருந்த அம்ப தேவர் உதவியுடன் தொல்லைகளை அடக்கினார் ருத்ரம்மா.
யாதவத் தலைவர் மகாதேவர் இவரை எதிர்த்து போர் செய்து தோல்வி அடைந்தார். இந்தப் போர்களில் ருத்ரமாதேவியின் பேரன் பிரதாப ருத்ரன் வெற்றிவாகை சூடினான். கிபி 1280 ஆம் ஆண்டு ருத்ரமாதேவி தனது பேரன் பிரதாப ருத்ர தேவரை இளவரசராக நியமித்தார்.
8 ஆண்டுகளுக்குப் பின் அம்ப தேவர், ஹொய்சொளர், யாதவர் ஆகியோரை துணை சேர்த்துக்கொண்டு ருத்ரமாதேவிக்கு எதிராக போர் தொடுத்தார். கி.பி.1291ல் பிரதாப ருத்திரர் அதனை அடக்கி வெற்றி வாகை சூடினார். கிபி 1295இல் ருத்ரமாதேவி காலமான பிறகு பிரதாப ருத்ரன் இரண்டாம் பிரதாப ருத்ரன் என்ற பெயருடன் முடிச்சூ ட்டிக்கொண்டார்.