
ஆதிசங்கரரின் சரித்திரத்திலே இப்படி ஒரு விஷயம் உண்டு. அவர் சிறு பிள்ளையாக அதாவது இளம் பிராயத்தில் இருந்த பொழுது ஒரு நாள் ஒரு வீட்டின் வாசலில் நின்று”பவதி பிக்ஷாம் தேஹி”என்ற பிச்சை கேட்கிறார்.

அன்று துவாதசி. அந்த வீட்டில் இருந்தவர் பரம ஏழை. அந்த ஏழை குடும்பத்தில் இருந்த பெண்மணிக்கு என்ன செய்வதே என்றே தெரியவில்லை.. தம் கணவர் துவாதசி பாரணை செய்வதற்காக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்காய் மட்டும் தான் இருந்தது அப்போது அவள் இல்லத்தில்.. வந்திருக்கும் பாலகனுக்கு அதையாவது கொடுப்போம் என்று நினைத்தவள், ஆதிசங்கரருக்கு அதனை அளிக்க, அவருக்கு அந்த குடும்ப நிலை புரிந்து விட்டது. உடனே மகாலட்சுமியை நோக்கி மனதால் தவம் புரிகிறார்.”கணவனும் மனைவியும் மிகவும் பாவம் செய்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த ஏழ்மையை அவர்கள் அனுபவிக்கிறார்கள்”என்று ஆசிரியை கேட்டது. ஆனாலும் ஆதிசங்கரர் விடவில்லை. மகாலஷ்மியிடம் மனம் இறங்கி அந்த குடும்பத்திற்கு அருள் பாலிக்குமாறு ஸ்தோத்திரம் செய்ய, அங்கே தங்க நெல்லிக்காய்களாக மழையாகப் பொழிந்தது. அந்த ஸ்லோகம் தான்”கனகதாரா ஸ்தோத்திரம்”.
இதே போன்ற ஒரு நிகழ்வு சுவாமி தேசிகன் வாழ்விலும் நடந்தது. காஞ்சிபுரத்தில் ஒரு ஏழை பிரம்மச்சாரிக்கு திருமணம் என்பது கைகூடவில்லை. காரணம் அவர் ஒரு ஏழை அவரால் எப்படி ஒரு பெண்ணை வைத்து காப்பாற்ற முடியும் என்கின்ற சூழ்நிலை. அப்போது “ஸ்ரீ ஸ்துதி” என்கின்ற ஸ்தோத்திரத்தினை அருளினார் சுவாமி தேசிகன்.. அங்கும் பொன்மொழி பொழிந்தாள் மகாலட்சுமி என்பது சுவாமி தேசிகன் வரலாறு.
ஸ்ரீ வித்யாரண்யர் சரித்திரத்திலும் இதே மாதிரி ஒரு சம்பவம் உண்டு.
வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம், நல்ல குணம், நல்ல மக்கள், நல்ல உறவுகள், நல்ல இணக்கமான சூழல் ஆகிய எல்லாவற்றையும் அருளக்கூடியவள் மகாலட்சுமியே. அவளைப் போற்றி அவளது பாதத்தில் நம் சிந்தனையை செலுத்தினோமேயானால் நாமம் வாழ்க்கையில் எல்லா வளமும் பெறுவோம் என்பது திண்ணம்.