
சிவாலயங்கள் என்பவை சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை மூல முதல்வராகக் கொண்டு அமைந்துள்ள கோயில்களாகும். இந்தியாவில் மிக அதிக அளவில் சிவாலயங்கள் அமைந்திருந்தாலும் இலங்கை, நேபாளம், கம்போடியா என பல உலக நாடுகளிலும் சிவாலயங்கள் அமைந்துள்ளன.. பெரும்பாலான சிவாலயங்களில் மூலவராக சிவலிங்கமும் பிரகாரங்களில் பிற தெய்வ சன்னதிகளும் உள்ளன.
சிவாலயம்-சிவ+ஆலயம்
சிவப்பதிகள்-சிவ+பதிகள்
சிவ தலங்கள் மற்றும் சிவன் கோயில்கள்.
இறைவனின் இடம் என்று பொருள் தரும் பலவகை பெயர்கள் சிவாலயங்களுக்கு வழங்கப்படுகின்றன. அவை தேவகிருதம், தேவாகாரம், தேவாய தனம், தேவாலயம், தேவகுலம், தேவ மந்திரம், தேவ பவனம், தேவஸ்தானம், தேவவேஸ்மம், சைத்தியம் மற்றும் க்ஷேத்திரம் என்பன.
பொதுவாக சிவாலய அமைப்பு எப்படி இருக்கும் என்பதனை பார்க்கலாம்.
விநாயகப் பெருமானை வணங்கிய பின்பு, நந்தி தேவரிடம் சென்று, மூலவரை தரிசிக்க அனுமதி தர வேண்ட வேண்டும்.. அதன் பிறகு, மூலவரையும் அம்பாளையும் வணங்க வேண்டும். பின்பு கோஷ்டத்தில் உள்ள நடராஜர், திருமால், பிரம்மா போன்றோரை வணங்க வேண்டும். கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை வணங்கும்போது சண்டிகேஸ்வரரை சிவாலயத்தில் எவ்வித பொருட்களையும் எடுத்துச் செல்லவில்லை என கூறி வணங்க வேண்டும்.
பின்பு பரிவார தேவதைகளான வள்ளி தெய்வானை சமேதராக முருகன், நடராஜன் மற்றும் இதர தெய்வங்களையும் வணங்கி, நவக்கிரகங்களையும் வணங்கலாம். சிவாலயங்களில் அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பின்பு சிறிது நேரம் அவனது செல்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
பொதுவாக சிவாலயத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்பு அவர் பக்தர்களின் துணைக்காக சிவகணங்களை உடன் அனுப்புவதாகும். இவ்வாறு அமர்ந்து செல்லும்போது சிவ கணங்கள் மீண்டும் சிவாலயத்திற்கு சென்று விடுகின்றன என்பதும் நம்பிக்கை ஆகும். மற்றொரு சாரார் சிவன் சொத்து குலநாசம் என்று சொல்லப்படுவதனால் ஆலயத்தில் இருந்து எதுவும் எடுத்துச் செல்லவில்லை அதனை அங்கேயே அமர்ந்து விட்டு செல்கின்றோம் என்பதனை உறுதிப்படுத்த அமர்ந்து செல்ல வேண்டும் என்று சொல்வதும் உண்டு.
நீ அடுத்து வரும் பதிவுகளில், சிவாலயங்கள் பற்றி பார்க்கலாம்..
தொடரும்..