
புகழ்பெற்ற சண்டேல் மகாராஜா கீரட் ராயின் மகளாக 1524 ஆம் ஆண்டு பிறந்தவர் ராணி துர்காவதி. சண்டேல் வம்சம் இந்தியாவின் புகழ்பெற்ற வம்சமாக இருந்திருக்கிறது. இவர்களில் பலர் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தினை பிடித்திருக்கின்றார்கள். இவர்கள் சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்களாகவும், சிற்பம் பிடிப்பதில் தனித்தன்மை வாய்ந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இவர்களது காலத்தில்தான் கஜுராஹ சிற்பக் கூடம் மற்றும் கலஞ்சார் கோட்டை கட்டப்பட்டது. கலைகள் மட்டுமல்லாது வீரத்திலும் சிறந்தவர்களாக இருக்க கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
கிபி 1542 ஆம் ஆண்டு ராணி துர்காவதி கொந்த் அரச வம்சத்தை சேர்ந்த மன்னர் சங்கர் மஸ்ஹாவின் மூத்த மகன் டல் பாட்ஸாவை மணந்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பிறகு சண்டேல் மற்றும் கொந்த் வம்சத்தினரிடையே நட்பு வளர்ந்தது. இவர்களுக்கு 1545 ஆம் ஆண்டு வீர் நாராயணன் என்ற இளவரசர் பிறந்தார். இளவரசர் பிறந்த ஐந்து ஆண்டுகளில் ராணி துர்காவதியின் கணவர் டல் பாட்ஸா காலமானார்.. இளவரசர் ஐந்து வயதே நிரம்பிய குழந்தை என்பதால் கொந்த் சாம்ராஜ்யத்தை காக்கும் பொறுப்பு துர்காவதியிடம் வந்தது.. அதன் அதன் அரிசியாக பதவி ஏற்றார். பதவிக்கு வந்த சில காலத்தில் தலைநகரை சாவுரஹாவிற்கு மாற்றினார். இந்த இடம் சத்புரா மலைப் பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. இங்கே எதிரிகள் நுழைய முடியாத அளவுக்கு பாதுகாப்பானவுடன் ஒரு கோட்டையை கட்டினார்.
ஷெர்ஷாவின் மறைவை தொடர்ந்து மால்வா பகுதியை சுஜத் கான் கைப்பற்றினார்.. சுஜத் கானை தொடர்ந்து, அவரது மகன் பஜ்பாகாதூர் 1556 ஆம் ஆண்டு மாள்வா பகுதியின் அரசராக அரியணை ஏறுகிறார்.. அவர் பதவியேற்ற உடன் பக்கத்து நாட்டு அரசியல் இருந்த துர்காவதி போரிட்டு வெல்ல முயன்று தோல்வியடைந்தார்.. இதன் காரணமாக ராணி துர்காவதியின் பெயரும் புகழும் மிக வேகமாக நாடு முழுவதும் பரவியது.
1562 ஆம் ஆண்டு பேரரசர் அக்பர், மால்வா அரசனான பஜ்பாகாதூரை வென்றார். மால்வா முகலாய பேரரசின் கீழ் வந்தது. அதன் எல்லையில் இருந்த ராணியை துர்காவதினுடைய ராஜ்யத்தை வெல்ல எண்ணினார். இந்த முறை முகலாய பேரரசின் அனுமதி பெற்று, ரேவா நாட்டின் அரசரான அப்துல் மஜீத் கான் என்பவன் படையெடுத்து வந்தார்.
விஷயம் இருந்த ராணி துர்காவதி தன்னுடைய நிலைமை எண்ணி யோசனை செய்தார். வென்றால் ரேவா நாட்டு மன்னனிடம் வெற்றி கொள்ள வேண்டும். அப்படி என்றாலும் அடுத்தபடியாக அக்பரின் பெரிய படை வந்து தன்னை தோற்கடிக்கும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. தோற்றாலும் இறந்தாலும் போரில் ஈடுபட்டு, வீர வண்ணம் அடைவது தான் பெருமை என்று நினைத்தார். போரில் இரண்டு பக்கமும் பயங்கரமான இழப்பு. ரேவா மன்னரை வெற்றி கொண்டார். ராணி துர்காவதியின் மகன் வீர் நாராயணனும் போரிட்டார்..
மறுநாள் யாரும் எதிர்பாராத விதமாக முகலாய அரசின் பக்கத்திலிருந்து அசாஃப்கான் பெரிய பீரங்கிகளை கொண்டு வந்து நின்றார். ராணி யானைபதியுடன் நின்றார். போரில் காயம் ஏற்பட்ட இளவரசர் பாதுகாப்பான இடத்திற்கு சென்றார்.
இந்த நிலையில் போரிட்டுக் கொண்டு இருந்த ராணி துர்காவதியின் கழுத்தைக் குறிவைத்து வீசப்பட்ட அம்பு சற்று விலகி கழுத்தின் இடது பக்கம் தாக்கியது. அதனால் சுயநினைவு இழந்த ராணி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுயநினைவு இழந்து விட்டால் தான் தோற்றவளாக கருதப்படுவார் என்கிற எண்ணம் மேலிட லேசான சுயநினைவதற்கு திரும்பிய ராணி துர்காவதி அவர்களுடன் செல்ல மறுத்து விட்டார். மீண்டும் போர்க்களத்தில் போரிட முயன்றார்.
இனிய உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்ற கட்டம் வந்தபோது எதிரியின் கையில் இறப்பதை விட தானே இறந்து விடுவது அல்லது என்று தன்னுடைய குத்துவாளை எடுத்து தற்கொலை செய்து கொண்டார் ராணி துர்காவதி. இது நடந்தது ஜூன் 24, 1564.. என்றாலும் இந்த நாளை போற்றுகிறார்கள் மக்கள். போர்க்களத்தில் நின்று இறுதிவரை போராடி மரணத்தை தழுவிய ராணி துர்காவதி போற்றதற்குரியவர்.