பஞ்ச கிருஷ்ண ஸ்தலங்கள் என்று சொல்லப்படுகின்ற திருக்கண்ணங்குடி திருக்கண்ணபுரம் திருக்கோவிலூர் திருக்கண்ணமங்கை மற்றும் கபிஸ்தலம் ஆகியவற்றில் சென்ற பதிவில் திருக்கண்ணங்குடி மற்றும் கபிஸ்தலம் ஆகிய ஸ்தலங்களில் அருளிக் கொண்டிருக்கின்ற ஸ்ரீமன் நாராயணனை பற்றி பார்த்தோம்.. எஞ்சியுள்ள மூன்று ஸ்தலங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்..
திருக்கண்ணமங்கை பக்தவச்சலப் பெருமாள்


இந்த ஸ்தலம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்தலமாகும். சோழநாட்டு திவ்ய தேசங்களில் பதினாறாவது திவ்ய ஸ்தலம். நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவரான திருக்கண்ணமங்கை ஆண்டான், பெருமாளை வழிபட்டு வாழ்ந்த தளம் இந்த ஊர் என்பதனால் இவ்வூர் அவரது பெயரால் வழங்கப்படுகிறது..
மகாலட்சுமி தவம் செய்து பக்தவச்சல பெருமாளை கை பிடித்த ஸ்தலம் என்பதால் இந்த இடம் லட்சுமி வனம் என்று அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கு அமைந்த புஷ்கரணியில் நீராடி சாப விமோசனம் பெற்றான் என்பது தொன்மையான நம்பிக்கையாகும். இங்கே பகவானின் திருமண கோலத்தைக் தினசரி காண, முனிவர்கள் தேனி வடிவத்தில் உள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. அதேபோன்று கருவறையில் தேனி கூடு ஒன்றும் உள்ளது. மூலவரின் ஒரு பெயரான பத்தராவி(பக்தர்+ஆவி) என்பது பக்தர்களுக்கு வேகமாக வந்த அருளுவதால் அமைந்தது.
இந்த திருக்கோயில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 25 மைல் தொலைவிலும், திருவாரூரில் இருந்து நான்கு மயில் தொலைவிலும் உள்ளது.
ஐந்து அடுக்கு ராஜகோபுரம், அதனைத் தொடர்ந்து பலிபீடம் கொடிமரம் ஆகியவை உள்ளன.. பிரகாரத்தில் ஆழ்வார்கள் சன்னதி, அபிஷேகவல்லி தாயார் சன்னதி, வசந்த மண்டபம், ஆண்டாள் சன்னதி, ஹயக்ரீவ பெருமாள் சன்னதி, மணவாள மாமுனிகள் சன்னதி ஆகியவையும், மூலவர் சொன்னதுக்கு எதிரி பக்ஷி ராஜன் சன்னதியும் உள்ளது.
மூலவர் பக்தவச்சலப் பெருமாள் இங்கு நின்ற குலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் திருநாமம் அபிஷேகவல்லித் தாயார். உட்பல விமானத்துடன், மகிழ மரத்தினை தலவிருட்சமாக கொண்டு, தர்ஷண புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றுடன் இந்த ஸ்தலம் விளங்குகின்றது.
திருமங்கையாழ்வார் 14 பாசுரங்களில் இந்த ஸ்தலத்தினை மங்களாசாசனம் செய்துள்ளார். இங்குள்ள விமானம், மண்டபம், வனம், ஆறு, கோவில் அமைவிடம், ஊர், மற்றும் புஷ்கரணி ஆகிய ஏழும் மரணம் இல்லா வாழ்வை தரும் என்ற அமிர்தத்தின் சிறப்பினை கொண்டு அமைந்துள்ளதனால் இந்த தரம் சப்த அமிர்த ஸ்தலம் என்றும் அழைக்கப்படுகிறது
சௌரிராஜ பெருமாள் திருக்கண்ணபுரம்



சௌரிராஜன் பெருமாள் என்றும், நீலமேகப் பெருமாள் என்றும் அழைக்கப்படும் இந்தத் திருத்தலம் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்கண்ணபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. நன்னிலம் காரைக்கால் செல்லும் சாலையில் இருக்கிறது.
இன்று கோவில் தல வரலாறு சொல்லப்பட்டுள்ளது கீழ்க்கண்டவாறு:
இந்த கோவில் அர்ச்சகர் ஒரு நாள் கோயிலுக்கு வந்து அரசனுக்கு சுவாமிக்கு சூடிய மாலையை தர அதில் ஒரு நீண்ட தலை முடி இருந்தது. இதனால் கோபம் கொண்ட அரசனிடம் அர்ச்சகர் அது பெருமாளின் திருமுடி என்று சொல்லிவிட அரசும் தான் நாளை வந்து பார்க்கும்போது பெருமாளுக்கு முடி இல்லையெனில் அர்ச்சகர் தண்டனைக்கு உள்ளாவார் என்று கூறிவிட்டு சென்றான்.. அர்ச்சகர் பெருமாள் இடம் தன்னை காப்பாற்றும்படி வேண்டினார். அவர் மீது இரக்கம் கொண்ட பெருமாள் அவரை காப்பாற்ற திருவுளம் கொண்டார். மறுநாள் அரசன் வந்து பார்த்தபோது உண்மையிலேயே பெருமாள் தலைமுடியில் திருமுடி இருந்தது. நிகழ்வின் காரணமாகவே உற்சவர் சௌரிராஜ பெருமாள் என்ற பெயர் கொண்டுள்ளார் என்பது தொன்மையான நம்பிக்கை. உற்சவர் உலாவில் அம்மாவாசை அன்று மட்டும் திருமுடி தரிசனம் காணலாம்.
இந்த கோவில் ஏழு அடுக்கு ராஜகோபுரம் உடையது. இதன் விமானம் உத்பலாவதக விமானம். திருக்கோயிலை வலம் வரும்போது, இந்த விமானம் கண்ணில் படுவதில்லை என்பது இதுவும் சிறப்பு.
மாசி மாதம் பௌர்ணமியின் போது கடற்கரையில் நடைபெறும் கருடனுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். காரைக்கால் மாவட்டம் திருமலைராயன் பட்டினத்தில் உள்ள கடற்கரை கிராமமான பட்டினச்சேரிக்கு சௌந்தராஜன் பெருமாள் எழுந்தருளி அங்குள்ள வெள்ளை மண்டபத்தில் காட்சி தருவார். அந்த மண்டபத்திற்கு மீனவர்கள் அலங்கரிக்கும் நெற்கதிர்கள் தோரணமாக தொங்கவிடப்பட்டிருக்கும். பவளக் கால் சப்பரத்தில், தங்க கருட வாகனத்தின் மீது அமர்ந்திருப்பார் பெருமாள். மீனா மக்கள் இந்த பெருமாளை “மாப்பிள்ளை பெருமாள்” என்று அழைக்கிறார்கள்.
மூலவர் நீலமேகப் பெருமாள்; உற்சவர் சௌரிராஜ பெருமாள். தாயார் பெயர் கண்ணபுர நாயகி. தீர்த்தம் நித்திய புஷ்கரணி.
இந்த திருத்தலத்தினை பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
இந்த திருக்கோயில் சிறப்பு பிரசாதம் “முனையதரன் பொங்கல்”என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஒரு தனி வரலாறு உண்டு. சோழமண்டல சதகம் எனும் நூலில் 42 வது பாடலில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது:
” புனையும் குழலாள், பரிந்து அளித்த பொங்கலமுதும்,
பொறிக்கறியும் அனைய சௌரி ராஜருக்கே
ஆம் என்று அழுத்தும் ஆதரவின் முனையதரன் பொங்கல் என்று
முகுந்தற்கு ஏறமுது கீர்த்தி வளையும் பெருமை எப்போதும் வழங்கும் சோழமண்டலமே”
இந்த திருத்தலத்து பெருமாள் மறுபிறவி இன்றி வீடு பேறு அளிக்கும் பெருமானாக வழிபடப்படுகின்றார்.
உலகளந்த பெருமாள் திருக்கோவிலூர்


தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பெருமாள் திருஉருவம் ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் உயர்த்தி தூக்கிய படி நிற்கின்றார். கோபுர நுழைவாயில் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயிலாக உள்ளன. இந்த நகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது
இவன் தல வரலாற்றில் சொல்லப்படுவதாவது:
மகாபலி என்னும் அசுர அரசன் தான தர்மத்தில் சிறந்தவன். தன்னைவிட புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்து விடக்கூடாது என்பதற்காக அசுர குருவான சுக்ராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவரது ஆணவத்தை அடக்கும் பொருட்டு மகாவிஷ்ணு வாகன அவதாரம் எடுத்து யாகம் நடத்தும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்த சுக்கராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார். ஆனால் குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக்கொள்கிறான்.
அப்போது மகாவிஷ்ணு விஸ்வரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு, மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். மகாபலி தன் தலையை தாழ்த்தி தன் தலையைத் தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். மிகவும் விடாது மகாபலிம் தலை மீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல, அவ்வாறே செய்ய கெண்டியை எடுத்து அதில் உள்ள நீர் மூலமாக தானமாக தர முயல, சுக்ராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து அந்த கெண்டியின் துவாரத்தை அனைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க, விஷ்ணு தர்பைப் புல்லால் குத்தி விடுகிறார். இதனால் ஒரு கண் குருடாகி சுற்றுலாச்சாரியார் வெளியேறி விடுகிறார்.. ஆகவே தான் ஒருவருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்குமே ஆனால், சுக்கிர தசை என்றும், குருட்டு அதிர்ஷ்டம் என்றும் இன்றளவிலும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்..
மூன்றாவது அடியை தானம் செய்த மண்ணில் மகாபலி புதையொன்று போனார். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின் மகாபலி விஷ்ணு தன்னோடு சேர்த்துக் கொண்டார் இன்று தலைவர் யார் கூறுகிறது. அவ்வாறு மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இந்த கோயில் கருவறையில் மூலவராக வடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கோயில் கீழ் கோடியில் உள்ள கோபுரமானது 11 நிலைகளோடு உயர்ந்திருக்கிறது. ஆனால் பிரதான வாயிலில் ஒரு சிறிய கோபுரமே உள்ளது. கோபுரவாயிலை கடந்து உள்ளே சென்றோம் ஆனால் மங்கை மன்னன் கட்டிய கோபுரம் வரும். அதனையும் கடந்தால் பாண்டியன் மண்டபம், அதன் பின்பு தான் கருவறை உள்ளது. கருவறையில் நிற்கிறார் உலகளந்த திரு விக்ரமன். நல்ல நெடிய திரு உருவம். மூலவர் திரு ஒரு மரத்தால் ஆன வடிவம். இவர் பிற கோயில்களில் இருந்து மாறுபட்டு வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி, காட்சி தருகிறார். இவரது காலடியில், திருவக்கிரமி (திரு விக்ரமன் பத்தினி), மிருகண்டு முனிவர், மகாபலி இருக்கின்றார்கள்.
கோயிலின் முதல் பிரகாரத்தின் முகப்பிலே துர்க்காம்பாள் விக்ரமன் ஆணையின் பேரில் கோவிலுக்கு காவல் இருப்பதாக கூறுவார்கள். பொதுவாக துர்க்கை சிலை விஷ்ணு கோயில்களில் காணப்படுவதில்லை. ஆனால் இங்கே விதிவிலக்கு. பிரகாரத்தில் லஷ்மி நாராயணன், லட்சுமி வராகன், லட்சுமி நரசிம்மன் ஆறியோருக்கு தனி தனி சன்னதி இருக்கின்றது. இது தவிர, ராமர், உடையவர், திருக்கச்சினம்பி, ஆண்டாள், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கும் தனித்தனி சந்ததிகள் உள்ளன. இரண்டாவது பிரகாரம் கல்யாண மண்டபம் கடந்த பின்னர் புஷ்பவல்லி தாயார் சன்னதி உள்ளது. 108 திருப்பதிகளில் இங்கு மட்டும்தான் பெருமாள் சன்னதி அருகே விஷ்ணு துர்க்கை அருள் பாலிக்கிறாள். ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.
மூலவர் திரு விக்ரமன்; உற்சவர் ஆயனார், கோவலன்.
அன்பு நண்பர்களே! தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, அவசியம் இன்று திருத்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டுகிறேன்.