அச்சுத ரகுநாதம்மா என்கிற தஞ்சை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ஒரு அழகான பெண்ணால் பிற்காலத்தில் அந்த நாயக வம்சமே முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது எப்படி என்பதனை விளக்கிச் சொல்ல இந்த பதிவு.
விஜயநகர பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் ஆண்டு வந்த காலத்தில் பாண்டிய நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது பாண்டிய நாடும் விஜயநகர பேரரசின் ஆட்சியில் இருந்தது. அந்த குழப்பத்தினை அடக்குவதற்காக வேண்டி தனது படைத்தளபதி நாகம நாயகன் என்பவரை மதுரைக்கு அனுப்பி வைத்தார். அவரும் அங்கு நிறைவு குழப்பத்தை அடக்கி விட்டு மதுரை அரசனை கைப்பற்றி அதற்கு தானே மன்னன் என்று பிரகடனம் செய்து விட்டார்.
இதனைக் கேள்வியுற்ற கிருஷ்ணதேவராயருக்கு தாங்க முடியாத கோபம் ஏற்பட்டது. தனக்கு கீழ் வேலை பார்த்தவர் தன்னையே மதிக்காமல் அவ்வளவு திமிராக அறிவித்திருக்கிறார் என்ற ஆச்சர்யம் அவருக்குள் அளவு கடந்து சென்றது. உடனே அவர் தனது படைத்தவர்களை அழைத்து மதுரையில் இருக்கும் நாகமனநாயக்கனை வென்று அவனை உயிரோடு கொண்டு வருபவர்களுக்கு அவர்கள் கேட்கும் பரிசை அளிக்கிறேன் என்று சொன்னாராம். நாகம நாயக்கரின் வீரத்திற்கு முன்னால் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று பயந்து அவர்கள் அதனை செய்யவில்லை. அப்போது நாகம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயகன் கிருஷ்ணதேவராயரிடம் பணி புரிந்து வந்தான். அவன் தான் படையெடுத்துச் சென்று நாக நாயகனை கைது செய்து வருவதாக சொல்லி அதே போன்று போரில் வெற்றியும் பெற்று தனது தந்தையை கைது செய்து அழைத்து வந்தான்.
இதனால் மகிழ்ச்சியடைந்த கிருஷ்ணதேவராயர் அவனது கோரிக்கையை ஏற்று நாகம நாயக்கரையும் விடுதலை செய்து, மதுரையை ஆளும் பொறுப்பினையும் விஸ்வநாத நாயக்கரிடம் அளித்தார்..
விஸ்வநாத நாயகன் மதுரை பகுதியை ஆள் தொடங்கிய பொழுது தஞ்சை பகுதியும் அவருடைய ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் மறைவிற்குப் பிறகு அவரது தம்பி அச்சுத்தராயர் என்பவர் பட்டத்துக்கு வந்தார். அவருடைய மனைவியின் பெயர் திருமலாம்பாள். அவளுக்கு ஒரு தங்கை இருந்தால் அவள் பெயர் மூர்த்திமாம்பாள். அவளை விஜயநகரப் பேரரசின் மன்னர் தனது உறவினனாகிய சிவப்ப நாயகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்து தஞ்சை பகுதியை சிவப்ப நாயக்கனுக்கு வழங்கினார். சிவப்ப நாயக்கனுக்கு பின்னர், ரகுநாத நாயகன் அதன் பின்னர் விஜயன் என்பவர்கள் ஆண்டு வந்தார்கள். மதுரையை விஸ்வநாதன் நாயகன் வாரிசுகளும், தஞ்சையை சிவப்ப நாயகன் வாரிசுகளும் ஆண்டு வந்தனர்.

தஞ்சையில் இருக்கும் நாயக்கர் பரம்பரை விஜயநகர பேரரசின் உறவினர் வகையைச் சேர்ந்தது. மதுரை நாயக்கரின் பரம்பரை பேரரசின் படைத்தளபதியின் வார்த்தைகளால் உருவானது என்பதனால் தஞ்சை நாயகர்கள் மன்னர் வம்சம் என்றும் மதுரை நாயகர்கள் வேலைக்காரர்கள் பரம்பரை என்றும் ஒரு தவறான கருத்து நிலவியது. அதனால் இருவருக்கிடையே சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டன. முடிவில் விஜய் நகரத்தில் ஏற்பட்ட வாரிசு போட்டியில் தஞ்சை மதுரையும் இரு கட்சிகளாகப் பிரிந்து தோப்பூரில் பெரும் போரே ஏற்பட்டது. அதற்குப் பிறகு இரு அரசர்களும் ஒருவரை ஒருவர் விரோதிகளாக எண்ண ஆரம்பித்தனர். இது வம்சா வழியாக தொடர்ந்தது.
பிறகு திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டு கொண்டிருந்தபோது தஞ்சையை ஆண்டு வந்த ரகுநாத நாயகன் இரு வம்சங்களுக்கு இடையே உள்ள மனக்கசப்பை போக்க சிந்தித்து இரண்டு வல்லரசுகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் அதன் மூலம் முஸ்லிம் அரசர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் இருக்க வேண்டும் சமாதானமாக போக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தனது தங்கை அச்சுதரகுநாதம்மா என்கிற அழகிய பெண்ணை திருமலை நாயகருக்கு மணமுடித்து வைத்தார். அச்சுத ரகுநாத ம்மாவுக்கு தனது அழகில் மிகவும் கர்வம் உண்டு.
அதன் காரணமாக கர்வம் தலைக்கேறி யாரையும் மதிக்க மாட்டாள். திருமலை மன்னன் அவள் அழகைப் பார்த்து சொக்கிப் போய் அவளுக்காக எதையும் செய்து வந்தார். ஆனால் அவ்வளவு அவரை மதிக்க மாட்டாள். உயர்ந்தது என்றும் தன்னை போய் வலுக்கட்டாயமாக ஒரு தரம் தாழ்ந்து மணமுடித்து விட்டார்களே என்று திருமலை மன்னர் இடமே சீறிப்பாய்வாளாம். மன்னர் அவள் விரும்பியது எல்லாம் வாங்கித் தந்தாராம். பிணம் அவரை இலக்கணமாக பேசுவாள். அப்போது தஞ்சை அரண்மனை மதுரை அரண்மனையை விட பெரியது. அவ்வளவு பெரிய அரண்மனையில் இருந்த என்னை இப்படி ஒரு இடத்தில் தள்ளிவிட்டார்கள் என்று அடிக்கடி புலம்புவாளாம். அதன் காரணமாக திருமலை மன்னர் அயல் நாட்டு கட்டட கவிஞர்களை அழைத்து வந்து கோடிக்கணக்கான பணத்தை அரசின் கருவூலத்தில் இருந்து செலவழித்து ஒரு அழகான அரண்மனையை தஞ்சை அரண்மனையும் விட பெரிதாக சிறப்பாக கட்டி முடித்தாராம். அந்த அரண்மனை தான் தற்போது நாம் மதுரையில் காணும் “திருமலை நாயக்கர் மஹால்”.
அரண்மனையை கட்டி முடித்த பின்னர் தனது மனைவி அச்சுத ரகுநாதம்மாவை கூட்டி வந்து அதனை சுற்றி காண்பித்து “உனக்காக நான் கட்டிய அரண்மனை.. எப்படி இருக்கிறது?”என்று ஆர்வத்துடன் கேட்டாராம். அதற்கு அவள் திமிருடன்,”அரண்மனையா இது? எங்கள் தஞ்சை அரண்மனையில் உள்ள ஜலதாரை(சாக்கடை)க்குக் கூட ஈடாகாதே”இன்று குத்தலாக பதில் அளித்திருக்கிறார். அதனால் ஆத்திரம் அடைந்த திருமலை மன்னர் தன் இடுப்பிலிருந்து குற்றவாளி உருவி அவளை குத்தி கொலை செய்து விட்டார் அந்த இடத்திலேயே.

இந்த நிகழ்விற்கு பிறகு தஞ்சைக்கும் மதுரைக்கும் உள்ள பகை மேலும் முற்றிவிட்டது. இருவர்களும் ஒருவரை ஒருவர் அழிக்கும் எண்ணத்தில் ஊறிப் போய் இருந்தார்கள்.
நாட்கள் கடந்தன.. ஆண்டுகளும் கடந்தன.. வம்சங்கள் தொடர்ந்தன.. திருமலை நாயகரின் பேரன் சொக்கநாதர் நாயகன் மதுரையை ஆட்சி செய்து வந்தான்.
அதேபோல ரகுநாத நாயகனின் வம்சத்தைச் சேர்ந்த விஜயராகவன் நாயகன் தஞ்சையை ஆட்சி செய்து வந்தார். விஜயராகவ நாயகனுக்கு அழகான ஒரு பெண் இருந்தாள். முதலில் சொக்கநாத நாயகருக்கு தஞ்சை என்றாலே வெறுப்பும், அதேபோன்று விஜயராகவா நாயகனின் மகளுக்கு மதுரை என்றாலே வெறுப்பும் ஊறி இருந்தது.. ஆனால் ஒரு காலகட்டத்தில் இருவரும் சந்திக்க நேர்ந்த போது, ஒருவரை ஒருவர் இன்னார் என்று அறியாமலேயே, அவர்களுடைய காதல் மலர்ந்து அது வலுவாக வளர்ந்து விட்டது.

சொக்கநாத நாயகன், விஜயராகவ நாயகனிடம் பெண் கேட்டு, தூது அனுப்ப அவர் மறுத்ததோடு அல்லாமல் அவமானமும் செய்து அனுப்பி உள்ளார்.. இதனால் கோபம் அடைந்த சொக்கநாத நாயகன் மதுரை மீது படையெடுத்தான்.. போரில் தோற்று தன் பெண்ணை சொக்கநாதனுக்கு திருமணம் செய்து கொடுக்க அப்போதும் மனம் இல்லாத விஜயராகவ நாயகன், தனது அந்தப்புரத்தினையே வெடிவைத்து தகர்த்து விட்டான். அதில் அவனது மகளும் சொக்கநாத நாயகனின் காதலியுமான பெண்ணும் மாண்டு போனாள்.. இறுதியில் விஜயராகவ நாயகன் போரில் கொல்லப்பட்டான்.. அவனுடன் தஞ்சை நாயக வம்சம் முற்றுப்பெற்றது..
சொக்கநாத நாயகன் சந்திரகிரியைச் சேர்ந்த மங்கா என்கிற பெண்ணை மணந்து அவர்களுக்கு ரங்ககிருஷ்ணன் என்கிற மகன் பிறந்தான். சொக்கநாத நாயகன் மறைவிற்குப் பிறகு பாலகனாய் இருந்த தனது மகனை ஆதரவுடன் வளர்த்தாள் மங்கா என்கிற ராணி மங்கம்மாள். சரித்திரத்திலும் இடம் பெற்றாள்.
அச்சுதரகுநாதம்மா என்கிற பெண், தனது அழகு என்கின்ற ஆணவத்தின் காரணமாக தனது வம்சத்தையே அழிக்க அடிகோலி விட்டார்.. மதுரை நாயக வம்சத்தை நினைவு கொள்ள திருமலை நாயக்கர் மஹால் உள்ளது. ஆனால் தஞ்சை நாயக வம்சத்தை நினைவு கொள்ள ஏதுமில்லை.