துர்தரா

நந்த வம்சத்தின் கடைசி இளவரசியும் மௌரிய வம்சத்தின் முதல் ராணியும் ஆன துர்தரா ஒரு படிப்பினை ஆகும்.

அகங்காரத்தினாலும் ஆணவத்தினாலும் ஏற்படக்கூடிய விளைவுகளை சித்தரிக்கும் இவளது வாழ்க்கை.

அத்தியூர் என்று அழைக்கப்படுகின்ற காஞ்சிபுரத்தில் காஞ்சன குப்தர் மற்றும் சானேஸ்வரிக்கு மகனாகப் பிறந்த விஷ்ணுகுப்தர் இயற்கையிலேயே மிகவும் புத்தி மானாக திகழ்ந்தார். தனது தந்தையே குருவாகக் கொண்டு பல கலைகளையும் வேதங்களையும் உபநிடதங்களையும் கற்றுத் தேர்ந்தார். ஒருமுறை இவரது வீட்டிற்கு வந்த ஒரு ஜோதிடர் இவரது பல்வரிசையைப் பார்த்துவிட்டு சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய இவர் பிற்காலத்தில் அரசனாக திகழ்வார் என்று ஜோதிடம் சொன்னார். அதனை கேள்விப்பட்ட அவரது தாயார் மகன் தன்னை விட்டுப் போய் விடுவானோ என்று வருத்தப்பட்டார். அவரது வருத்தத்தை நீக்க இந்த பல்வரிசைதானே எனக்கு எதிரி என்று கருதி தான் பல்வரிசையை சிதைத்துக் கொண்டார். அதனால் அவர் முகத்தில் ஒரு விகாரம் தோன்றியது..

காலம் சென்றது ‌. ஒரு நாள் உட்பகை காரணமாக காஞ்சன குப்தரின் பங்காளிகள் சிலர் இரவு நேரத்தில் அவர்கள் இருந்த குடிசைக்கு தீ வைத்தனர். அந்த நேரம் அதிர்ஷ்டவசமாக விஷ்ணு குப்தர் வெளியே வேகவதி ஆற்றின் அருகே நின்று கொண்டிருந்தார். திரும்ப வந்து தன் வீட்டில் பார்த்தபோது தனது பெற்றோர்கள் தீட்டில் மாண்டு போனதை அறிந்து மிகவும் வருத்தப்பட்டு தான் வேகவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆற்றில் விழுந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு தேவ உடும்பரம் என்று சொல்லப்படுகின்ற அத்தி மரத்தின் ஒரு பகுதி கையில் கிடைக்கிறது. அதனுடைய மகத்துவம் பற்றி தன்னுடைய தந்தையிடம் முன்னரே அவர் தெரிந்து கொண்டுள்ளார். அந்த மரத்தினை கைப்பற்றி கரையறிய அவர், இந்த மரத்தின் ஒரு துளி பகுதியை வெட்டி கல்லில் குழைத்து அந்த சாந்தனை தனது வெட்டு காயங்களில் பூச அது உடனே குணமாக்கியது. அத்திமரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று அவருக்கு தெரியும். பின்னர் அதனையும் எடுத்துக்கொண்டு கால் போனபோக்கில் நடந்தார்.. இறுதியில் வடக்கு மகதநாட்டு எல்லைக்கு வந்து அடைந்தார்..

மகத நாட்டை ஆண்டு கொண்டிருந்த தனா நந்தன் என்ற அரசன் அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும் என்று எண்ணி, அதற்காக தேவ உடும்பர மரத்தின் சமித்துக்களை தேடிக் கொண்டிருந்தான். அதனைக் கொண்டு வருவோருக்கு சிறப்பான பரிசு அளிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.. இதனை கேள்வியுற்ற விஷ்ணுகுப்தன் அரண்மனை நோக்கி செல்ல, அங்கே நந்தவனத்தில் இளவரசன் பிரபா நந்தனும், இளவரசி துர்தராவும் இருந்தனர். விஷ்ணுகுப்தனைப் பார்த்து துர்தரா, அவனது விகார முகத்தினை கண்டு கேலி பேசினாள். இதனால் ஆத்திரம் அடைந்த விஷ்ணுகுப்தன் அவளை பழிவாங்க வேண்டும் என்று மனதிற்குள் சபதம் எடுத்துக் கொண்டார்.

அரசரை அரச சபையில் சந்தித்து தன்னிடம் தேவ உடும்பர மரம் உள்ளதாகவும் அதனை தந்தால் தனக்கு ராஜகுரு என்கின்ற உயர் பதவியை தர வேண்டும் என்று நிபந்தனை தெரிவித்து தனநந்தனிடம் வாதிட்டார் விஷ்ணுகுப்தன். சிறு பையனாக இருந்த அவனை அவர் கேலி பேசி அரண்மனையை விட்டு வெளியே துரத்த உத்தரவிட்டார். அதன்படி அவன் தலைநகரமான ராஜ கிரகத்திற்கு வெளியே விரிஞ்சி காட்டிற்குள் கொண்டு விடப்பட்டார்..

அங்கே சுற்றித்திரிந்தபோது சந்தா என்கிற காட்டுவாசி சிறுவனை கண்டான். அவன் அந்த காட்டின் அரசனுக்கு மகன். அவனிடத்தில் ராஜகளை இருந்ததை கண்டு, நந்த அரசனை அரியணை விட்டு வீழ்த்தி இந்த காட்டுவாசியை அரசனாக்க வேண்டும் என்று சபதம் ஏற்று அதற்காக தன்னுடைய முயற்சியை மேற்கொண்டார். முதலில் பிரபா நந்தனை சந்தித்து தனது வசமாக்கி கொண்டான்.. பிறகு காட்டுவாசிகளை சந்தாவின் தலைமையில் படை திரட்டி கொண்டு பிரபா நந்தனையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு தன நந்தனுடன் போரிட்டார்.. போரின் முடிவில் தன நந்தனும் அவனது துர்தராவும் கைது செய்யப்பட்டனர்.. துர்தரா சங்கிலியால் பிணைக்கப்பட்டு தனி அறையில் சிறை வைக்கப்பட்டாள். ஆனால் சந்தாவோ அவளை கண்டதும் காதல் கொண்டான்.. ஆனால் அவரால் தனது குருவான விஷ்ணுகுப்தரை எதிர்த்து செயல்பட இயலவில்லை. விஷ்ணுகுப்தர் தற்போது கௌடிலியர் என்று அழைக்கப்பட்டார்.. காலம் சென்றது..

துர்தராவின் குணத்தில் மாறுதல் ஏதுமில்லை.. நாளாக நாளாக அவளது அகங்காரமும் ஆணவமும் பெருகி மூர்க்கத்தனம் அதிகமாகியது.. தனது குருவின் அறிவுரைப்படி அவளை அங்கே இருந்த விரிஞ்சி ஆற்றிற்கு நடுவே இருந்தவர்கள் தீவில் குடில் அமைத்து அவளை தனிமை சிறை செய்தான்.. அப்போதும் அவளிடத்தில் அவனுக்கு ஈர்ப்பு இருந்தது..

கௌடிலியர் தென்னகம் நோக்கி யாத்திரை மேற்கொண்டார்.. அந்த நேரத்தில் பெருமழை ராஜ கிருகத்தில் பெய்ய, விரிஞ்சி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.. அங்கே துர்தாராவின் நிலை என்னவோ என்று அச்சப்பட்டு அவளை அங்கிருந்து காப்பாற்றி கொண்டு வந்த தனது அரண்மனையில் வைத்துக் கொண்டான் சந்தா என்கிற சந்திரகுப்தன்.. குரு இல்லாத நேரத்தில் அவர்களது நெருக்கம் அதிகமாகி, அவளையே அவன் திருமணம் செய்து கொண்டான்..

கௌடில்யர் திரும்பிய பிறகு நடந்தவற்றை கேள்வியுற்று அரண்மனை செல்வதை தவிர்த்து வந்தார்.. துர்தரா தான் மனம் மாறிவிட்டதாகவும் கௌடிலியரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரை அரண்மனைக்கு விருந்துக்கு அழைக்குமாறும் சந்திரகுப்தரிடம் வேண்டினாள்.. ஆனால் அது சதி திட்டமாகும்.. தனது தோழியிடம் உணவில் விஷம் கலந்து கௌடில்யரைக் கொல்ல வேண்டும் என்று எண்ணினாள்.. கௌடில்யர் விவரத்தை அறிந்து கொண்டார்.. சந்திரகுப்தனின் வேண்டுகோளுக்கிணங்க அரண்மனைக்கு விருந்துக்கு வந்தார்..

வந்தவரை உபசரித்து துர்தரா அவரிடம் மன்னிப்பு கோரி விருந்து உண்ண அழைத்தாள்.. ஆனால் அவர் தன்னை கொல்ல அவள் திட்டம் தீட்டி இருக்கிறாள்.. ஆகவே அந்த விஷம் கலந்த பழரசத்தைப் பருக மாட்டேன் என்று மறுத்தார்.. ஆத்திரமடைந்த துர்தரா அந்தப் பழரசத்தை தானே பருகி அதில் விஷம் இல்லை என்று தெரிவிக்க எண்ணி அதனை அவள் பருகினாள்.. ஆனால் அதில் விஷம் கலந்திருந்தது.. முதலில் விஷம் கலக்க வேண்டும் என்று எண்ணிய அவள் பிறகு மனம் மாறி அதனை செய்யவில்லை.. ஆனால் அதில் விஷம் கலந்தது சந்திரகுப்தன்.. தனக்கும் அவளுக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்ற காரணமாக இருந்த தனது குருவையை கொல்ல எண்ணி அவன் அதில் விஷம் கலந்து இருந்தான்.. விஷம் அருந்திய துர்தரா துடித்தாள்.. அப்போது அவரை கர்ப்பிணி.. கழுத்தில் நின்றிருந்த விஷத்தினை கீழே சென்றால் குழந்தைக்கு ஆபத்து என்று சுசுருதி என்கிற மருத்துவர் அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தை எடுத்து ஒரு ஆட்டின் வயிற்றில் வைத்து பராமரித்து வந்தார்..

முதல் முதலாக வந்த இன்குபேட்டர் இதுதான் என்று தோன்றுகிறது.. ஆட்டின் வயிற்றில் வளர்ந்த அந்த குழந்தை பிம்பி சாரன் என்ற பெயரில் அடுத்த வாரிசாக அரசனாகியது..

துர்தரா தான் கொண்டிருந்த அகங்காரத்தினாலும் ஆணவத்தினாலும் அழிந்து போனாள்.. மௌரிய வம்சத்தின் முதல் அரசி தன்னுடைய நிலை உணராமல் தன்னை மாய்த்துக் கொண்டாள்.

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: