இறைவனின் அருளை பெற பக்தர்கள் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.. அவர்களது பக்தியை வெளிப்படுத்த பல வழிகளை கையாளுகிறார்கள்.. ஆலயங்களுக்கு செல்லும் போது அர்ச்சனை,அபிஷேகம் பல விதமாக தமது பக்தியை இறைவனிடத்தில் செலுத்துகின்றார்கள்.. சிலரோ நேர்த்திக்கடன் என்கிற பெயரில் தீமிதித்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்றவற்றையும் செய்கிறார்கள்.. அந்த வழியில் பாதயாத்திரையும் ஒன்று.. பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை தலத்திற்கு சென்று அக்னி வடிவமாக காட்சியளிக்கும் அண்ணாமலையாரை கிரிவலம் செய்து வழிபடுவது நாம் எல்லோரும் அறிந்ததே.. திருமலைக்கு பாதயாத்திரை செல்வோர் உண்டு.. ஆஷிட ஏகாதசி அன்று சிம்மாசலத்தில் கிரிவலம் செய்பவர்களும் உண்டு..
தமிழ்நாட்டில் சைவர்களுக்கு சிதம்பரம், வைணவர்களுக்கு ஸ்ரீரங்கம்.. ஆந்திராவில் திருமலை ஸ்ரீசைலம் சிம்மாசலம் பத்ராஜலம் போன்ற திருத்தலங்கள்.. கேரளாவில் குருவாயூர், ஒரிசாவில் பூரி ஜெகன்னாதர்.. பிரசித்தி பெற்ற தலங்கள் இந்த பாரத திருநாட்டில் பல உள்ளன.. அதேபோன்று மகாராஷ்டிராவில் பண்டரிபுரம் ஒரு பிரசித்தி பெற்ற தலமாகும்..

வர்க்காரி என்பது மகராஷ்டிரா மாநிலத்தை மையமாகக் கொண்டு வளர்ந்து நிற்கும் ஒரு வைணவ பக்தி இயக்க வாழ்க்கை முறையாகும்.. வர்க்காரி என்பதற்கு மராத்திய மொழியில்” புனித நடை பயணம் செல்பவர்” என்று பொருள்.. அதாவது பாதயாத்திரீகர் என்பதாகும்.. ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் பண்டரிபுரம் யாத்திரை செல்பவர்கள்.. அதனால் இந்த பெயர் உண்டாயிற்று..
வர்க்காரிகள் கிருஷ்ணராக உள்ள விட்டலரை வணங்குபவர்கள்.. குறிப்பிடத்தக்கவர்கள் ஞானேஸ்வர், நாம தேவர் மற்றும் துக்காராம் போன்றோர்.. வர்க்காரி வாழ்க்கை முறை ஒழுக்கத்தையும் நன்னெறியையும் போதிக்கிறது.. ஏகாதசியில் விரதமிருந்து மது, புகையிலை போன்ற தீய பழக்கங்களை தவிர்த்து சைவ உணவு உட்கொண்டு விரதம் கடைப்பிடிக்கிறார்கள் இந்த வர்க்காரிகள்..


ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விட்டலரின் வர்க்காரி நெறியை போற்றும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனேயில் ஞானேஸ்வர் சமாதிக்கு அருகே உள்ள ஆளந்தி மற்றும் தேகு ஆகிய நகரில் கூடி சுமார் 250 கிலோமீட்டர் தூரம் நடை பயணமாக பண்டரிபுரம் செல்கின்றார்கள்.. இந்த பாதயாத்திரை முடிய சுமார் 20 நாட்களாகும்.. யாத்திரையின் போது ஞானேஸ்வரரின் சிலையை பல்லக்கில் ஏற்றிக்கொண்டு விட்டலரின் மகிமைகளையும், ஞானேஸ்வர் துக்காராம் மற்றும் நாமதேவர் போன்ற விட்டலரின் அருள் பெற்ற ஞானிகளின் பெருமைகளை இசைத்து பாடி ஆடிச் செல்வார்கள்.. பண்டரிபுரம் யாத்திரை ஆடி மாத ஏகாதசியில் நிறைவடையும்..
சரி, யார் அந்த ஞானேஸ்வர்?
இவர் ஞான தேவர் தியானேஸ்வர் என்றும் அழைக்கப்படுகிறார்.. பிபி 1275 இல் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைதான் என்கிற ஊரில் பிறந்தார்.. இறைவனின் பெயர்களைப் பெற வயது ஒரு தடை இல்லை என்பதனை உணர்ச்சிய மகான் ஞானேஸ்வர்..ட தனது சிறு வயதில் வேதத்தையும் மற்ற புராணங்களையும் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உபதேசித்தார்.. பொதுவாக இல்லற வாழ்வை அனுபவித்து முடிப்பவர்கள் துறவற வாழ்க்கையை மேற்கொள்வார்கள்.. இது இயல்பு.. ஆனால் மாறாக துரோகம் மேற்கொண்ட பிறகு இல்லற வாழ்க்கைக்கு திரும்பியவர்கள் அரிது.. ஞானேஸ்வரன் தந்தை விட்டோபா திருமணமான பிறகு காசிக்கு யாத்திரை சென்றார்.. அங்கு ராமானுஜர் என்பவரின் உபதேசத்தால் தான் திருமணம் ஆனவர் என்பதனை மறந்து துறவறம் மேற்கொண்டார்.. பின் நாட்களில் ஒரு முறை ராமானந்தர் விட்டோபாவுடன் யாத்திரை மேற்கொண்டு மகாராஷ்டிரா வந்தார்.. அவரை சந்தித்து விட்டாபாவின் மனைவி ருக்மணி தனது மனக்குறையை ராமானுஜரிடம் முறையிட்டார்.. அதனை ஏற்றுக் கொண்ட ராமானந்தர் விட்டோபாவை கண்டித்தார்.. விட்டோபா மீண்டும் இல்லற வாழ்க்கையை மேற்கொண்டார்.. அதன் பயனாக விட்டாபாவுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.. இரண்டாவது மகனே ஞானேஸ்வர்.. சிறுவயதில் வேதம் புராணங்கள் ஆகிய வெற்றி கற்றுத் தேர்வு கல்வி கேள்வியில் சிறந்து விளங்கினார்..
விட்டோபா துறவறம் மேற்கொண்ட பின்னர், மீண்டும் இல்லற ம் வாழ்க்கையை தொடங்கியதால் ஆச்சாரிய பண்டியர்கள் அனைவரும் அவரை ஒதுக்கி வைத்தார்கள்.. அதனால் மனம் அடைந்து விட்டோபா ருக்மணி தம்பதியினர் தங்கள் குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படக்கூடாது என்று ஊரை விட்டு புனித யாத்திரை மேற்கொண்டனர்.. இந்த சூழல் ஞானேஸ்வர் மற்றும் அவரிடம் பிறந்தவர்களையும் விரட்ட தொடங்கியது.. இதன் காரணமாக சிறு வயதிலேயே பெயருக்கு ஏற்றார் போல அதீத ஞானம் பெற்றார்..
ஒரு நாள் ஞானேஸ்வர் தம்மிடம் வந்து எளிய மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்து ஆச்சரிய பண்டிதர்கள் அவரை தூஷித்து அவரை தடுத்தனர்.. அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.. அங்கு நின்று இருந்து எருமை மீது ஞானேஸ்வர் கை வைத்தார்.. அந்த எருமை வேதம் ஓத தொடங்கியது.. கர்ம வினைகளாலும் நடத்தியாலும்தான் ஒருவன் உயர்ந்தவன் ஆகிறான் என்பதனை வேத பாடலாக வரி பிசகாமல் அந்தப் எருமை பாடியது.. அதனைக் கேட்ட ஆச்சாரியா பண்டிதர்கள் மறுவார்த்தை பேசாமல் ஞானேஸ்வரன் கால்களில் விழுந்து வணங்கினார்கள்..
அதன் பிறகு ஞானேஸ்வர் தனது அண்ணன் நிவ்ருத்திநாத்தை குருவாக ஏற்று அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.. தமது 15வது வயதில் பகவத் கீதையை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்தார்.. அனைவரும் அதனை புரிந்து கொள்ளும்படியாக விளக்கமும் அளித்திருந்தார்.. அந்த காலத்தில் இது மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருந்தது..
சித்த புருஷர் கங்கதேவர் தான் ஞானேஸ்வரி ஞானத்தையும் திறமையும் உலகறிய செய்தார்.. அவர் தனது யோக சக்தியின் மீது ஆர்வம் கொண்டவர்.. ஆயிரம் ஆண்டுகள் போன பின்பும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று மக்கள் நம்பினார்கள்.. தனது யோகத்தின் மூலம் அனைத்து உயிர்களையும் வசப்படுத்தும் வித்தையைக் கற்று வைத்திருந்தார்.. சிறுவனான ஞானேஸ்வரன் புகழைக் கேட்டு அவனை சந்திப்பதற்காக சிறுத்தை ஒன்றின் மீது ஏறி கழுத்தில் பாம்பை சுற்றியபடி சென்றார்..’அனைத்து உயிர்களையும் கட்டுப்படுத்த தெரிந்தவன் தான்’என்கிற அகம்பாவத்தோடு அதனை ஞானேஸ்வர் உணர்த்தும் படி இருந்தது கங்க தேவரின் செயல்.. அவரது செயலைப் பார்த்து யாவரும் மிரண்டு போனார்கள்.. ஆனால் ஞானேஷ்வர் அமைதியாக தனது பீடத்தின் மீது அமர்ந்திருந்தார்.. அப்போதுதான் அந்த அதிசய நிகழ்ந்தது.. ஞானேஸ்வர் அமர்ந்திருந்த பீடம் பின்னால் நகர்ந்தது.. உயிருள்ள பொருட்களை மட்டுமே கட்டுப்படுத்திக் கொண்டிருந்த கங்கதேவர் ஞானேஸ்வர் உயிரற்ற பொருட்களையும் கட்டுப்படுத்துவது கண்டு அவரது யோக திறமையை கண்டார்.. பிறகு சிறுத்தை மீதிருந்து கீழ் இறங்கி ஞானேஸ்வரன் திருவடிகளில் பணிந்து வணங்கி தனது கர்ப்பம் நீங்க பெற்றார்..
சிறுவயதிலேயே பல அற்புதங்களை நிகழ்ச்சிய ஞானேஸ்வர் தனது 21 வது வயதில் கிபி 1296 இல் புனே அருகில் உள்ள ஆளந்தி என்ற நகரில் ஜீவசமாதி அடைந்தார்.. ஞானேஸ்வரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் அதாவது ஆடி மாத ஏகாதசியில்”சாந்த் ஞானேஸ்வர் மகாராஜா பால்கி யாத்திரை”மேற்கொள்ளப்படுகிறது.. இது நூறாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது..