அன்பு நண்பர்களே வணக்கம்!
எனது வலை பக்கத்திற்கு ஏறக்குறைய 13000 நண்பர்கள் பார்வையிட்டு உள்ளார்கள்.. இது எனக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி.. இதற்கிடையே உங்கள் அனைவரிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்..
எனது ஆன்மீகப் பயணத்தில் பல சிறு கோயில்களை கண்டு தரிசித்து வருகின்றேன்.. சிறு சிறு கிராமங்களில் உள்ள பல கோயில்களில் நிலைமை நிதி வசதி இல்லாமல் மிகவும் மோசமாக உள்ளது.. அவற்றில் சிலவற்றில் சாமிக்கு விளக்கேற்ற கூட எண்ணெய் வசதி இல்லாமல் இருளடைந்து இருக்கின்றது.. கோவில் அர்ச்சர்களின் வருமானம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.. இது மிகவும் ஒரு வருத்தமான நிலை.. இதனை கருத்தில் கொண்டு அப்படிப்பட்ட கோயில்களை சென்று தரிசித்து கோயில்களை வீடியோ பதிவு செய்து, அர்ச்சகர்களின் நிலைகளைப் பற்றி அறிந்து எனது”தெய்வீகப் பயணம்”என்கிற youtube சேனலில் வெளியிட்டு வருகிறேன்.. இதுவரை சுமார் 330 சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.. இது போதாது.. என்னுடைய இந்த முயற்சி பலரை சென்றடைய வேண்டும் என்பது எனது நோக்கம்.. ஆகவே நண்பர்களே, எனது தெய்வீகப் பயணம் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து மேலும் அந்த கிராமங்களில் உள்ள நிதிநிலை சற்று உயர ஏதுவாக பொருள் உதவி செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.. எனது தெய்வீக பயணம் youtube சேனலின் லிங்க்:
https://youtube.com/channel/UCgt_hY13jnU_yByFJ_Pr0QA
மேற் கூறப்பட்ட சேனல் தவிர, நமது இயற்கை வளம் நிறைந்த புண்ணிய பூமியின் பல காட்சிகளை வீடியோ பதிவு செய்து எனது புதிய youtube சேனல்”எழிலார் பூமி”என்கிற சேனலில் வெளியிட துவக்கி உள்ளேன்.. முதல் முயற்சியாக தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் திருச்சூருக்கு அருகே உள்ள”அதரப்பள்ளி நீர்வீழ்ச்சி”பற்றிய வீடியோ பதிவு செய்துள்ளேன்.. கண்டு களியுங்கள்.. இந்த சேனலின் லிங்க்
https://youtube.com/channel/UCwcl_MkY2DO4g6hbFZSbYeA
அன்பு நண்பர்களே! எனது இந்த சிறு முயற்சிகளுக்கு தங்களின் பேராதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்கின்றேன்..
மிக்க நன்றி.. வணக்கம்..