அன்பு நண்பர்களே!
சென்ற பதிவின் முடிவில் அடுத்த பதிவில் ருக்மணி தேவி பூஜித்த கண்ணனைப் பற்றி பதிவு செய்வதாக தெரிவித்து இருந்தேன். அதற்கு முன்பாக கோமதி துவாரகா என்று அழைக்கப்படுகின்ற ஒரு பகுதியை பற்றி தற்போது கூறுகின்றேன்..
வசிஷ்டரின் மகளான கோமதி இங்கே நதியாக பெருக்கெடுத்து ஓடுகின்றாள்.. கோமதி குண்டம் என்று அழைக்கப்படுகின்ற பகுதியில் நாம் ஸ்நானம் செய்யலாம்.. இந்த நதிக்கரையின் பகுதிகளில் சிவன், ராமர் மற்றும் கிருஷ்ணர் ஆகியோருக்கு கோயில்கள் உள்ளன.. இந்த நதியின் இடையே ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணமாக ஒட்டக சவாரி ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இது தவிர நதியில் சுற்றுலா பயணிகளுக்காக படகுப் போக்குவரத்தும் உள்ளது..
நதிக்கரையில் இப்பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்கு செல்ல சுதாமா ஜுலா என்கிற தொங்கு பாலம் உள்ளது.. அக்கரையில் பஞ்சபாண்டவர்கள் தீர்த்தம் என்று 5 கிணறுகள் உள்ளன.. இவற்றில் இருந்து நீர் மொண்டு தலையில் தெளித்துக் கொள்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது..



இந்த துவாரகை மோட்ச துவாரகை என்று அழைக்கப் படுகிறது.. இங்குள்ள பெருமாளை துவாரகநாத் ஜி என்றோம் கல்யாண நாராயணர் என்றும் போற்றுகிறார்கள்.. மூலவர் சங்கு சக்கரதாரியாக நான்கு கரங்களுடன் சேவை சாதிக்கிறார்… காலையில் திருப்பள்ளி எழுச்சி முதல் சயனம் வரை இங்கு சகல நிகழ்ச்சிகளும் நடைபெறும்.. மணிக்கு ஒரு முறை அலங்காரங்கள் மாற்றப்படும்.. பாமா, ருக்மணி மற்றும் ராதை ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன… புராணத்தில் இந்த தளத்தை சுதாம புரி என்று அழைத்தார்கள்.. சுதாமா என்று அழைக்கப்படுகின்ற குசேலருக்கு இங்கே தனி கோயில் உள்ளது.. இது ஐந்து மாடுகளைக் கொண்டது..அறுபது அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இந்த மாடிகளை தாங்குகின்றன..
முக்திநாத் அருகே கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்கிராமக் கற்கள் போல இந்த பகுதி 6 கடையில் கிடைக்கும் சக்கரக்கல் வினைப் பூஜிப்பவர்கள் மோட்சம் அடைகிறார்கள் என்று கூறப்படுகிறது.. ஸ்ரீ கிருஷ்ணர் இந்தக் கல் சுழியின் மீதமர்ந்தே ஆட்சி செய்ததாக ஐதீகம்.. துவாரகையில் கிருஷ்ணர் மக்கள் சங்கடம் போக்கிக்கொள்ள கோமதி சுழியைப் பதித்து கொடுத்துள்ளார் என்ற ஐதீகமும் உண்டு..
இந்த பவித்திரமான கோமதி நதியில் அஷ்ட லட்சுமி குடி கொண்டதால் இந்த துவாரகை நகரமே ஜொலிக்கின்றது.. அஷ்டலட்சுமிக்கு இணையாக பகவானால் உருவாக்கப்பட்ட மேலான செல்வமே இந்த கோமதி சக்கரம் என்றும் இதனை வழிபட்டதனால் தான் துவாரகை மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது..
கோமதி துவாரகையும் பேட் துவாரகையும் சேர்த்து துவாரகாபுரி என அழைக்கப்படும்.. இரண்டிற்கும் நடுவே இன்றைக்கும் கடல் அமைந்துள்ளது.. கோமதி துவாரகையின் மூல மூர்த்தியான கிருஷ்ணரை, டாகோருக்கு,போடானா எடுத்து வந்த பிறகு, ருக்மணிதேவி பூஜித்த மூர்த்தனமானது, லாட்வா கிராமத்தின் குளத்தில் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.. துர்வாச முனிவர் துவாரகைக்கு வந்தபோது காரணமே இல்லாமல் ருக்மிணியை பார்த்து ‘கண்ணனை பிரிவாய்’ என சாபம் கொடுத்தாராம்.. அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் இந்த மூர்த்தத்தில் நான் உறைந்து உள்ளேன்.. இதனை அனு தினமும் பூஜித்து வா என்று ஒரு மூர்த்ததை கொடுத்தாராம்.. அந்த மூர்த்தமே குளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாம்.. அதனை தரையில் இன்றைய நாம் தரிசிக்கலாம்.. இந்த ஆலயத்தை ஸ்ரீகிருஷ்ணரின் கொள்ளுப்பேரன் வஜ்ஜிரநாபன் என்பவர் அமைத்ததாக சொல்வார்கள்.. துர்வாசரின் சாபம் காரணமாக துவாரகையிலிருந்து ஓகா என்ற இடத்திற்கு செல்லும் வழியில் தனிக்கோயிலில் ருக்மணிதேவி காட்சி தருகின்றாள்.. இதனை ருக்மணி துவாரகா என்று அழைக்கின்றார்கள்.. இந்தக் கோவிலின் த்வஜஸ்தம்பம் உலகில் மிகப் பெரியது.. ஒரு காலத்தில் குஸஸ்தலி என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் கண்ணனின் பேரருளால் மோட்ச துவாரகை என்றும் அழைக்கப்படுகிறது..
இங்கே கிருஷ்ணர் சங்கு சக்கரங்களுடன் சதுர்புஜம் தோற்றத்தில் கருமை நிறத்தில் காட்சி தருகிறார்.. இவருக்கு குழந்தை போலவும், அரசன் போடவும் தினசரி அலங்காரங்கள் நடைபெறும்.. ருக்மணி தேவி தான் உற்சவர் ஆவார்..
அடுத்து நான் தரிசித்தது, பேட் துவாரகை.. துவாரகையிலிருந்து சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த துவாரகை..கடலுக்கு நடுவில் தீவு போன்ற விசாலமான இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணனின் ஆலயம் அமைந்துள்ளது.. இதற்கு விசைப்படகில் சுமார் 40 நிமிடங்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது.. நம்மைச் சுற்றிலும் கடற்காக்கைகள் பறந்த வண்ணம் உள்ளன.. படகில் வந்த சுற்றுலா பயணிகள் அந்தக் பறவைகளுக்கு இரை அளிக்க, அவை நம்மோடு பயணிக்க ஆரம்பித்தன.. இது ஒரு வித்யாசமான அனுபவமாக இருந்தது.. படகுச் சவாரிக்கு பின்னர், பேட்துவாரகையை அடைந்தேன்..





முதலில் பிரத்யும்னன் சன்னதி.. நடுவில் கண்ணனின் சன்னதி.. தேவகி மாதவன் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.. நரகாசுரன் இடம் இருந்து 16 ஆயிரம் பெண்களை மீட்டு ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்தது இங்கு தான் என்று சொல்லப்படுகிறது.. இங்கே ரணசோட் சாகர், ரத்ன தலாப், கசாரி தலாப் முதலான குளங்கள் உள்ளன.. கோபி துலாப் என்கிற இடத்தில் புண்ணிய தீர்த்தமாடும் படித்துறையும் இங்கு தான் கிருஷ்ணர் பல கோபி கைகளுக்கு மோட்சம் அளித்தார் என்று இங்கு மண் கோபி சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது..இது தவிர முரளி மனோகர் மற்றும் அனுமனுக்கும் சன்னதிகள் உள்ளன..
அடுத்து நான் சென்றது ஸ்ரீநாத் துவாரகை.. இது பற்றி அடுத்த பதிவில் தெரிவிக்கின்றேன்..
தொடரும்..