சென்ற பதிவில் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள இஸ்கான் கோயில் பற்றி பதிவு செய்திருந்தேன்.. அந்த தரிசனத்திற்கு பிறகு நாங்கள் புறப்பட்ட சென்ற இடம் சுவாமிநாராயண் கோயில் ஆகும்.. இந்த திருக்கோயில் நாங்கள் முதலில் தரிசனம் செய்த இஸ்கான் கோயிலில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது..

இந்த ஸ்ரீ சுவாமி நாராயண் திருக்கோயில் அகமதாபாத் நகரில் கலுபூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.. இது சுவாமிநாராயண் சம்பிரதாயின் முதல் கோயிலாகும்.. இந்த முதல் சன்னதியை கட்டுவதற்கான நிலம் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.. ஒரு பிரிட்டிஷ் அதிகாரி டன்லப் என்பவர், சுவாமிநாராயண் மற்றும் அவரது சீடர்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இந்த நிலத்தை அந்த திருக்கோயில் அமைய கொடுத்தார்.. இதன் பரப்பளவு சுமார் 5000 ஏக்கர். கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அவர் கோயிலுக்கு நூற்றி ஒரு துப்பாக்கி வணக்கம் செய்து மரியாதை செலுத்தினார்..

இந்த திருக்கோயிலை அமைத்த ஸ்ரீ சுவாமி நாராயண் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சப்பையா என்ற ஊரில் 1781 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி பிறந்தார்.. இவரது இயற்பெயர் கன்ஷயம் பாண்டே.. 1792 இல் இவரது பதினோராவது வயதில் இந்தியாவின் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய யாத்திரை ஒன்றை ஆரம்பித்தார்.. ஏழாண்டுகள் கடந்த பின்னர் இவர் யாத்திரையின்போது நீலகண்டன் என்னும் பெயரை பெற்றார்.. இந்த யாத்திரையின் போது பல்வேறு சமுதாய நலனுக்காக செயற்பாடுகளில் இவர் ஈடுபட்டார்.. 1800 ரியல் இவரது குருவான சுவாமி ராமானந்தர் என்பவரால் உத்தவ சம்பிரதாயம் என்னும் அமைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.. அங்கே அவருக்கு சகச நாதசுவாமி என்ற பெயர் வழங்கப்பட்டது.. இவர் ஒரு கூட்டத்தினை கூட்டி சுவாமி நாராயண மந்திரத்தை கற்பித்தார்.. அதிலிருந்து இவருக்கு சுவாமிநாராயண் என்ற பெயர் வரப்பெற்றது..

இந்த திருக்கோவிலில் புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கப்படவில்லை.. அந்த விரிந்த இந்த திருக்கோயிலில் உள்ளே நடந்து சென்றபோது ஐந்து கட்டங்களில் வெவ்வேறு விதமான கலாசார நிகழ்வுகளை பார்க்க நேரிட்டது.. இதற்கு ரூபாய் 20 கட்டண தொகையாக செலுத்த வேண்டியயுள்ளது.. இவற்றில் சுவாமிநாராயண் பற்றிய வரலாறு பொருட்காட்சி, ஒலி ஒளி காட்சி மற்றும் இந்த பிரபஞ்சம் உருவானதற்கான நிகழ்வுகள் அதைப்பற்றிய விளக்கங்கள் அங்கே அளிக்கப்பட்டன.. ஸ்வாமி நாராயண் பற்றிய ஒரு வரலாற்று படம் பார்த்தேன்.. அதில் சுவாமிநாராயண் சிறுவயதில் எப்படி இருந்தார் என்பதனை விளக்கும் வண்ணமாக ஏறக்குறைய அதே தோற்றத்தில் இருந்த ஒரு சிறுவன் அந்த வேடத்தை ஏற்று நடித்து இருந்தது வியப்பை அளித்தது.. சுவாமிநாதனின் வரலாறுகளைத் தெரிந்து கொண்டு, அந்த திருக்கோவிலின் தெய்வங்களின் சந்ததிகளை சென்று தரிசனம் செய்தேன்..
கோவிலின் முதன்மை தெய்வங்கள் நர நாராயணர், ராதாகிருஷ்ணன் தர்ம பக்தி மாதா மற்றும் ஹரி கிருஷ்ண மகராஜ் ஆகியோரது படங்கள் அங்கே வைக்கப்பட்டு இருந்தது.. இவை தவிர பால் ஸ்வரூப் கன்சியாம் மகராஜ், ரங் மோகல் கன்சியாம் மகராஜ் ஆகியோருக்கும் படங்கள் வைக்கப்பட்டிருந்தன..

இந்தக் கோயிலின் மைய வாசல் மிகவும் கலைநயத்துடன் இருந்தது.. மராத்தி மற்றும் ராஜஸ்தானி நாட்டுப்புற கலாச்சாரங்கள் மற்றும் உடைகள் நுழைவாயில் சிற்பங்களிலா தெளிவாக இருந்தன.. மையப் பகுதியில் அமைந்துள்ள நர நாராயணர் கோவிலில் பர்மா தேக்கு மரத்தில் நுணுக்கமான செதுக்கலுடன் வேத விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது.. மத்தியில் அமைந்துள்ள நர நாராயணன் மற்றும் ராதாகிருஷ்ணன் படங்களுக்கான ஆடைகள் ஒரு நாளைக்கு ஏழு முறை மாற்றப்படுகின்றன.. ஒரு முறை உபயோகப்படுத்தப் பட்ட உடை மீண்டும் செய்யப்படுவதில்லை..
ஆமதாபாத் நகரில் ஒரு சிறப்பான திருக்கோயிலை தரிசனம் செய்த மகிழ்ச்சியுடன் அவ்விடத்தில் இருந்து வெளியே வந்தோம்.. அங்கே ஒரு கடையின் அருகே அவர்களது அனுமதியுடன் எங்களுக்கு ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த உணவுகள் பரிமாறப்பட்டன.. உணவு உண்ட பின்னர் பேருந்தில் ஏறி அமர்ந்து எங்களது பயணம் தொடர்ந்தது..
சுமார் 2 மணி நேர பயணத்திற்கு பின்னர் டாகூர் துவாரகா என்கிற ஒரு நகருக்கு சென்றோம்.. அங்கே ஒரு தங்கும் இடத்தில் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது.. ஒரு அறையில் மூன்று அல்லது நான்கு நபர்கள் தங்கும் வசதி இருந்தது.. என்னுடன் சென்னை கூடுவாஞ்சேரியில் இருந்து வந்திருந்த திரு. துரைசாமி தம்பதியினர் உடன் தங்கினர்..
சற்று சிரமபரிகாரம் செய்து கொண்ட பின்னர் மாலை காபி அருந்திவிட்டு, அந்தி சாயும் நேரத்தில் டாகூர் துவாரகாவில் உள்ள கண்ணனின் திருக்கோயிலுக்கு செல்ல புறப்பட்டோம்..
இந்த திருக்கோயிலை பற்றிய ஒரு சுவாரசியமான கதை உண்டு.. போடானா என்கிற ஒரு நபர் தனது தள்ளாத வயதிலும் வருடம் தோறும் துவாரகைக்கு சென்று கண்ணனை தரிசிப்பது வழக்கமாம்.. அடுத்தடுத்த காலங்களில் தன்னால் துவாரகைக்கு செல்ல முடியுமோ முடியாதோ என்கிற அச்சம் அவருக்கு ஏற்பட அவரது கலக்கத்தை தவிர்க்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அந்த போடானா வாழ்ந்துவந்த டாகோருக்கே செல்ல தீர்மானித்தார்.. எருதுகள் பூட்டப்பட்ட போடானாவின் வண்டியில் அமர்ந்து இறைவன் வந்தாராம்.. வண்டியை ஓட்டிய போடானா பாதி வழியிலேயே களைப்படைய கண்ணனே வண்டியை ஓட்டி வந்தாராம்..
மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களுடன் அடுத்த பதிவில் தங்களை சந்திக்கிறேன்..
தொடரும்..