அன்பு நிறைந்த நண்பர்களே! சர்வ வியாபியான அந்த சர்வோத்தமன் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பெயர்களின் பெருமையினை இந்தத் தொடரில் பதிவு செய்து வருகின்றேன்..
விஷ்ணு சகஸ்ரநாமத்தில் பகவான் விஷ்ணுவிற்கு ஆயிரம் நாமங்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது.. சென்ற பதிவுகளில் 1) விஸ்வம் 2) விஷ்ணு 3) வஷட்கார: ஆகிய மூன்று திருப்பெயர்களின் மகிமையைப் பற்றி பார்த்தோம்..

இந்தப் பதிவில்“பூத பவ்ய பவத் பிரபு:”என்ற திருப்பெயரின் பெருமையைப் பற்றிப் பார்ப்போம்..
இதன் பொருள் ஸ்ரீமன் நாராயணன் மூன்று உலகங்களுக்கும் எஜமானனாக உள்ளான் என்பதாகும்.. பிரபு என்றால் சுவாமி மற்றும் சேஷி என்று சொல்லலாம்.. அஷ்டத்யாயி என்கிற இலக்கண நூலில்- விப்ரஸம்பயோ டு அஸங்ஞாயாம் என்று சொல்லப்பட்டுள்ளது.. அதாவது பூ, முதலான தாதுக்களில் வி,ப்ர முதலான பிரயோகங்கள் முன்னே அல்லது பின்னே வருமாயின் டு என்பது சேர்க்கப்படவேண்டும்.. எனவே இங்கு டு என்பது பூ+த சேர்க்கப்பட்டது..
தைத்ரிய நாராயணவல்லி என்கிற நூலில்-பதிம் விச்வஸ்ய அதாவது உலகின் நாயகன் என்று இந்தப்பதத்திற்கு பொருள் சொல்லப்பட்டுள்ளது.. ச்வேதாஸ்வதா உபநிஷத்தில்- பதிம் பதீநாம்-ஏதாவது நாயகர்களின் நாயகன் விஷ்ணு என்று சொல்லப்பட்டுள்ளது..
தைத்திரீய சம்ஹிதையில்-பூதஸ்ய ஜாத:பிரேக் ஆஸீத்-அதாவது அனைத்து உயிர்களின் ஒரே எஜமானன் என்று பொருள் சொல்லப்படுகிறது..
புருஷ ஸூக்தத்தில்-:தத் புருஷஸ்ய விச்வம் என்று சொல்லப்படும் போது இந்த உலகம் அந்த புருஷன் உடையது என்று விஷ்ணுவை குறிப்பிடுகிறது..
தைத்திரீய சம்ஹிதை அனைத்து திசைகளும் பாகங்களும் அவனுடையதே ஹீரோ பொருளைத்தரும் – யஸ்யேமா: ப்ரதிச என்று கூறுகிறது..
மகாபாரதம் சபா பருவத்தில்-கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதம் இதம் விச்வம் சராசரம் என்கிற பொருள்படும்படி அசையும் அசையாப் பொருள் களைக் கொண்ட இந்த உலகம் கிருஷ்ணனுக்காகவே உள்ளது என்று கூறப்பட்டுள்ளது..
மேலும் பூதபவ்ய பவந்நாத: கேசவ: கேசிஸூதன: என்று அதே பருவத்தில் சொல்லப்படும்போது கேசி என்ற அரக்கனை அழித்த கேசவனே மூன்று காலங்களுக்கும் எஜமானன் என்று சொல்லப்படுகிறது..
ஜகந்நாதஸ்ய பூபதே சகஸ்ரநாமத்தில் சொல்லும்போது அரசனே! அவனே உலகின் எஜமானன்..
மேற்கூறிய அனைத்தையும் நாம் பார்க்கும் காலத்தில் அந்த பரம்பொருளான விஷ்ணுவே எல்லாவற்றிற்கும் நாயகனாகவும் எஜமானனாக மிதந்து தனது காக்கும் அருளினால் இந்த உலகத்தை ரட்சிக்கின்றான் என்பது புலனாகிறது.. படைக்கும் தொழில் மட்டுமே செய்யும் பிரம்மன், படைத்த பின்னர் அவரது படைப்புக்களை காத்து ரட்சிக்க வேண்டும் என்பதனால் விஷ்ணு அந்த பொறுப்பினை ஏற்றுக்கொண்டு இந்த உலகத்தில் சொல்லப்போனால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் காத்து ரட்சித்து வருகின்றார்..
ஓம் நமோ நாராயணாய!!
தொடரும்..