கைலாயநாதனும், உமையொருபாகன் அம்மானே அந்த பரமேஸ்வரனுக்கு பல மூர்த்த நிலைகள் உள்ளன.. அவைகள் அறுபத்தி நான்கு வகைப்படும்.. அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக நான் பதிவு செய்து வருகிறேன்.. சில தவிர்க்க முடியாத காரணங்களினால் நடுவில் இந்தப் பதிவு தொடர இயலாமல் போனது.. அதற்காக நான் மன்னிப்பு கோருவதுடன் எனது ஆழ்ந்த வருத்தத்தினை வாசக நண்பர்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன்..
இந்தப் பதிவில் நாம் பார்க்க இருப்பது சிவ வடிவங்களில் ஒன்றான சந்திரசேகர மூர்த்தி..
இதன் உருவத்திருமேனி மகேசுவர மூர்த்தம்.. அதாவது சந்திரனைத் தலையில் சூடிய சிவபெருமான்.. சேகரன் என்பதற்கு காப்பவன் என்ற பொருளும் வருகின்றது.. முழுவதுமாய் தேய்ந்து விடாமல் அந்த சந்திரனை காத்து அருளியதால் இந்த திருப்பெயர் ஏற்பட்டது என்று கொள்ளலாம்..
இவருக்கு வேறு பல பெயர்கள் உள்ளன.. அவைகளாவன:-
1. பிறையோன் 2. பிறைசூடிய பெம்மான் 3. தூவெண் மதிசூடி 4. பிறையன் 5. மதிசெஞ்சடையோன் 6. இந்து சேகரன் (சந்திரனுக்கு இந்து என்று ஒரு பெயர் உண்டு) 7. பிறைசூடி 8. மா மதி சூடி..
பிறைசூடி இருக்கும் சிவபெருமானின் சந்திரசேகரர் வடிவம் மூன்று நிலைகள் இருப்பதாக சுப்ர பேத ஆகமம் கூறுகிறது.
1. கேவல சந்திரசேகர்:-கேவல என்றால் தனித்து நின்றலாகும்.. இந்தக் கேவல சந்திரசேகரர் நிலையில் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி தனித்து நிற்கிறார்..
2. உமா சந்திரசேகரர்-இந்த வடிவில் உமையுடன் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி நிற்கிறார்..
3. ஆலிங்கன சந்திரசேகரர்-இந்த வடிவில் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி உமையைத் தழுவிய நிலையில் காட்சி தருகிறார்..

சந்திரன் தட்சனின் குமாரிகள் ஆன 27 பேரை மணந்த போதிலும் அவர்களில் ஒருவராகிய ரோகிணியிடம் மட்டும் அதிகம் பிரியமாய் இருந்தான்.. அதனால் கோபம் கொண்ட தட்சன் சந்திரனின் அழகு குறைந்து மங்கிப் போக சாபம் கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன..
தனது சாபம் நீங்க சந்திரன் ஈசனை வழிபட்டான்.. அவனின் கலை முழுவதும் தேய ஆரம்பித்தது.. இன்னும் இரண்டு நாட்களில் முற்றிலும் காணாமல் போகக்கூடிய நிலைமை தோன்றிய போது ஈசன் அவனிடம் இரக்கம் கொண்டு அவனைக் காப்பாற்றுகிறார்.. மூன்றாம் பிறை என்று தெரிந்திருந்த சந்திரனை சேகரம் செய்து தன் முடியில் சூடிய தால் பெருமானுக்கு”சந்திரசேகரர்”என்ற பெயர் ஏற்பட்டது..
“நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!!”
தொடரும்…