அன்பு நிறைந்த நண்பர்களே!! பாற்கடலில் பள்ளிகொண்ட அந்த பரந்தாமனின் திவ்ய நாம ரூபங்களை, அந்த நாமங்களில் பொருள்களை, அதற்கான பெயர் காரணங்களை நாம் ஒவ்வொன்றாக பார்த்து வருகின்றோம்.. அந்த வகையில் இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது அவனது இரண்டு திருநாமங்கள்..
1) விஷ்ணு
2) வஷட்கார:
முதலாவதாக விஷ்ணு என்ற திருநாமத்தின் பொருள் என்ன என்று பார்ப்போம்..
விஷ்ணு தன்னுடைய விபூதிகள் அனைத்திலும் பிரவேசிப்பவன்; சித் மற்றும் அசித் என்று உள்ள தன்னுடைய பொதிகளில் பிரவேசிப்பவன் என்று பொருள்..
தைத்ரிய நாராயணவல்லீ- விவேச பூதாநி சரசராணி-அதாவது அசையக் கூடியவை, அசையாமல் உள்ளவை என்று அனைத்திலும் அவன் பிரவேசிப்பான்.
தைத்திரீய ஆரண்யகம்- ததேவானுப்ராவிசதா- அதற்குள்ளே பிரவேசித்தான்.
வ்யாப்ய ஸர்வாந் இமான் லோகாந் ஸ்தித: ஸர்வத்ர கேசவ: ததச்ச விஷ்ணு நாமா அஸி விசேர்த்தாதோ: ப்ரவேசநாத்- அனைத்திலும் கேசவன் பிரவேசித்ததால் அவன் எங்கும் உள்ளான்; ஆகவே அவனது திருநாமம் விஷ்ணு என்பதாகும்..
விஷ்ணு என்பது பிரவேசித்தல் என்பதைக் கூறும் மூலக்கூறான விச் என்பதிலிருந்து வருகிறது.. விஷ்ணு என்ற பதம், விச் என்கிற தாது உடன் க்னு என்பதைச் சேர்த்து வெளிப்படுகிறது. இதன்மூலம் பிரவேசித்தல் என்பது இவனுக்கு எப்போதும் உள்ளதை தெரிவிக்கிறது.. இந்த மேன்மை இவனுக்கு இயல்பாகவே உள்ளது. முதல் திருநாமமாகிய விச்வம் என்பது பூரணத்துவத்தையும் இரண்டாவது திருநாமம் பிரவேசித்து தலையும் விளக்குவதால் இது இன்னொருத்தி எண்ணம் கூறியது கூறல் என்ற தோஷம் இல்லை..
2) வஷட்கார:
ஆகாயம் எங்கும் பிரவேசித்து இருப்பது போன்று அல்லாமல் இவன் எங்கும் பிரவேசித்து இருப்பதன் பயன் கூறப்படுகிறது.. அனைத்தையும் தன் வசமாக்கிக் கொள்கிறவன் என்பதனால் வஷட்கார என்று வந்தது.. இதன் மூலக்கூறு வஸ் என்பது தேஜஸை குறிக்கும்.. இதனுடன் அட் என்பது சேர்க்கப்பட்டுள்ளது.. இந்த உலகம் அவனது கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கு இதுவே பொருளாகும்..
அவர் எங்கும் நிறைந்திருப்பவன் என்பதற்கு ஆதாரம் நரசிம்ம அவதாரம் ஆகும்.. பிரகலாதனிடம் அவரது தந்தை இரணியகசிபு ” உன் ஹரி எங்கே உள்ளான்?” என்று கேட்டபோது பிரகலாதன்,”அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் நீ சொன்ன சொல்லிலும் இருப்பார்”என்று பதிலளிக்கிறான்.. அதனை உறுதிப்படுத்தும் வண்ணமாக இரண்யகசிபு தூணிணை தன்னுடைய கதாயுதத்தால் தாக்க, அந்தத் தூண் பிளந்து அங்கேயே நரசிம்ம அவதாரமாக விஷ்ணு தோன்றினார்..

இதைவிட வேறு ஆதாரம் நமக்கு தேவை இல்லை என்பது இதுவே விளக்குகிறது..
தொடரும்..