அன்பு நிறைந்த வாசகர்களே!
இந்த புவனம் முழுவதும் ஆளுகின்ற ஜெகத் சொரூபியான அந்த ஆதிபராசக்தி நிறைய பெருமைகளைக் கொண்டு உள்ளார்.. அவற்றைப் பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இந்த தொடர் மூலம் தங்களுக்கு பதிவு செய்து வருகின்றேன்.. சக்தி பீடங்களாக விளங்கும் சில ஸ்தலங்களைப்பற்றி இந்த பதிவில் பதிவிட்டு வருகின்றேன்.. அந்த வகையில் இப்போது நாம் பார்க்க இருப்பது காமாட்சி பீடம் ஆகிய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஆகும்..
“காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி”என்ற சொல்லாடல், இந்த முப்பெரும் சக்தி வடிவங்களை குறிப்பிட்டுச் சொல்லும். அதிலும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சக்திக்கான தனிப்பட்ட கோவில் இதுவே ஆகும்.. இந்தக் கோயிலில் காமாட்சியம்மன் தனது இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லையும், தாமரை மற்றும் பிரிவினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார்.
தந்திர சூடாமணியின் படி சக்தி பீடங்கள் ஆகிய ஐம்பத்தொன்றில் தேவியின் முதுகுஎலும்பு விழுந்த பீடம் இந்த பீடமாகும்.. இந்தக் கோயில் மகா சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காமாட்சி இங்கு”பரப்பிரம்ம ஸ்வரூபிணி”என்று வணங்கப்படுகிறார்.. ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால்”உக்ர ஸ்வரூபிணி”என அழைக்கப்பட்டார்.. ஆதிசங்கரரால் எட்டாம் நூற்றாண்டில் இந்தக் கோயிலில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.. மிகவும் உக்கிரமாக இருந்த காலி அன்னையை சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்..

அயோத்தி மன்னன் தசரதன் சக்கரவர்த்தி இந்த திருக்கோயிலில் தான் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததாக மார்க்கண்டேய புராணத்தில் ஒரு தகவல் உள்ளது.. காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்க்கமாக தரிசிப்பவர்களுக்கு அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதாக ஒரு உணர்வினை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது..
இந்தக் கோயிலின் உள்ளே பிரகாரங்களும் தெப்பக்குளமும் நூறு கால் மண்டபமும் அமைந்துள்ளன.. இந்த திருக்கோயில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.. சிவன் விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் திரித்துவத்தால் சூழப்பட்டுள்ளது.. கருவறையை சுற்றி பங்காரு காமாட்சி, ஆதிசங்கரர் மற்றும் மகா சரஸ்வதி ஆகியோரின் சிறிய ஆலயங்கள் உள்ளன.. வெளிப்பிரகாரத்தில் இருந்து தங்கமே இந்த கோபுர விமானத்தில் கண்டுகளிக்கலாம்.. இந்த திருக்கோவிலின் தல விருட்சம் என்று மாமரம் ஒன்று பன்னெடுங்காலமாக இருக்கிறது..
இந்தக் கோயிலுக்கு இன்னொரு விசேஷம் என்னவென்றால் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கள்வனூர் என்கின்ற திவ்ய தேசம் அம்மனின் கருவறை அருகில் அமைந்துள்ளது.. பத்தாம் நூற்றாண்டில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்பட்ட கோயில் ஒன்று இருந்துள்ளது.. அது சிதிலம் அடைந்து விட்டதால் அங்குள்ள தெய்வம் இப்போது காமாட்சி அம்மன் கோயிலுக்குள் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது..
ஆண்டுதோறும் மாசி மாதத்தில் உற்சவ விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறும்.. நவராத்திரி ஆடி மற்றும் ஐப்பசி பூசம் சங்கர ஜெயந்தி மற்றும் வைகாசி மாதத்தில் நடைபெறும் வசந்த உற்சவம் ஆகவே மிகவும் புகழ்பெற்றவை.. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன..
தொடரும்..