அன்பு நண்பர்களே! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள அந்த பரந்தாமனின் கல்யாண குணங்களைப் பற்றி இந்த தொடரில் பதிவிட்டு வருகிறேன்.. சென்ற பதிவுகளில் அவருடைய கல்யாண குணமான ஸாம்யம் மற்றும் காருண்யம் ஆடியோவை பற்றி பதிவு செய்திருந்தேன்.. இன்றைய பதிவில் அவரது மற்றொரு குணமான “மாதுர்யம்” என்பது பற்றி பார்க்கலாம்..
மாதுர்யம் என்பது மதுரம் என்பதன் திரிபு.. மதுரம் என்றால் இனிமை.. மாதுர்யம் என்றால் எல்லோருக்கும் இனிமையானாவனாக இருக்கின்ற குணம்.. தன்மீது அன்பு செலுத்த பொருளுக்கும் அவன் இனிமையாக இருப்பான்.. அதே நேரத்தில் பகைவர்களுக்கு மகனின் இவராகத்தான் இருப்பான் என்கின்றார்கள் ஆச்சாரியர்கள்..
தன் மீது பக்தி கொண்ட விளக்கம் தன்னை வெறுப்பு விளக்கம் கூட அவன் இனிமையானவன் என்பதனை வெளிப்படுத்தும் ஒரு சில சம்பவங்களை இங்கே நாம் பார்க்கலாம்..
பாரதப் போர் நடந்து கொண்டிருக்கிறது.. பீஷ்மனுக்கும் அர்ஜுனனுக்கும் கடும் சண்டை.. இருவரும் அஸ்திரங்கள் மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.. பீஷ்மரின் கை ஓங்குகிறது.. அர்ஜுனனால் அவர் எதிர்த்துப் போராட முடியவில்லை.. அவர் களைத்துப்போய் தேர்த்தட்டில் சாய்ந்து விடுகிறான்..
இதைப்பார்த்த கண்ணன், குருச்சேத்திரப் போரில் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சபதம் செய்து இருந்த போதிலும், என் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை கண்ட போது, அவரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை..தனது சபதத்தையும் மீறி தேரின் சக்கரத்தை கையில் சக்கராயுதமாக எடுக்கிறார்.. தேர்த்தட்டில் இருந்து குதித்து வீட்டை நோக்கி வேகமாக செல்கிறார்.. அவரது காதுகளில் அணிந்திருந்த குண்டலமும் தலையில் சூடியிருந்த மயில் பீலியும் அவனுக்கு வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அசைகின்றன..

தன்னை கொல்வதற்காகவே ஆயுதம் ஏந்தி வரும் கண்ணனின் அழகை கண்ட பீஷ்மர் அவரது அழகில் சொக்கி, கையில் பிடித்திருந்த வில்லினையும் அம்பினையும் கீழே போட்டுவிட்டு, இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பி வணக்கம் செய்கிறார்.. அதோடு மட்டுமில்லாமல் கண்ணனை ஸ்தோத்திரமும் செய்கிறார்..
இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் போது உலகில் எவராவது தன்னை கொல்ல வரவேற்று வணங்கி போற்றுவது உண்டா? இதுதான் இறைவனின் மாதுர்ய குணத்தின் சிறப்பு..
சரி! பீஷ்மர் உயர்ந்த குணத்தை கொண்டவர்.. கண்ணனிடம் அதிகளவு அபிமானமும் பக்தியும் கொண்டவர்.. அதனால் தான் அவர் அப்படி செய்தார் என்று நாம் நினைக்கலாம்.. வாதிடவும் செய்யலாம்.. ஆனால் மற்றொரு சம்பவத்தை பார்க்கும்போது நமக்கே அது புரியும்…
சிசுபாலன் நெடுங்காலமாகவே கண்ணனிடம் பகை கொண்டிருந்தார்.. இவனையும் வதம் செய்ய வேண்டிய கையிலே சக்கராயுதத்தை ஏந்தி நிற்கின்றான் கண்ணன்.. கண்ணனின் அழகை கண்ட செய்வது சிசுபாலன் தன்னை மறந்து அவனிடத்தில் ஈடுபட்டான்.. கண்ணன் சக்கரத்தை பிரயோகித்தார்.. அந்த சக்கராயுதம் அவனை தீண்டும் நேரத்தில் இதுவரையில் அவன் செய்த பாவங்கள் அனைத்தும் தொலைந்து அவனுக்கு மிகவும் இனிமையான மரணம் சம்பவித்தது.. யோகிகளுக்கும் கிடைக்காத உயர்ந்த நிலையை பெற்றான் சிசுபாலன் என்கிறார் வேதாந்த தேசிகர்..
நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில் (7-5-3) கீழ்க்கண்டவாறு வியந்து பாடுகிறார்:
“கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்
கேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே”
இவ்வாறு பகைவரையும் வசீகரிக்கத் தக்க வல்லது எம்பெருமானுடைய ” மாதுர்யம்” என்கிற குணம்..
தொடரும்..