அன்பு நிறைந்த வாசக நண்பர்களே! கைலாய நாதனான அந்தச் சிவபெருமானின் 64 சிவ உருவ திருமேனிகளில் அடங்கியுள்ள பெருமையினைப் பற்றி இந்த தொடரில் பதிவு செய்து வருகின்றேன்.. அந்த வகையில் இந்த பதிவு அவரது சோமாஸ்கந்தர் என்று பக்தர்களால் வணங்கப்படும் வடிவமாகும்.. சிவனும் உமையும் ஆகிய தம்பதிகள் தங்களது குழந்தையான கண்ணனுடன் காட்சியளிப்பதை சோமாஸ்கந்தர் என்று அழைக்கிறோம்.. இந்த வடிவத்தில் மூன்று பிரதான தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.. அவை சைவம் சிவனாகவும், சாக்தம் உமையாகவும், கௌமாரம் கந்தன் என்ற வடிவத்திலும் இடம்பெற்றுள்ளன..
மகேஸ்வர வடிவங்களில் இந்த திருவுருவம் தமிழகத்தில் மட்டுமே காணப்படுகின்ற ஒரு சிறப்பான வடிவமாகும் .
பஞ்ச குண சிவ மூர்த்திகள் சோமாஸ்கந்தர் கருணாமூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.. சோமாஸ்கந்தர் என்பது சம்ஸ்கிருத மொழி சொல்.. சோமன் என்னும் சிவபெருமானும் ஸ்கந்தன் என்ற முருகனுடன், உண்மையுடனும் இருக்கும் உருவ நிலை சோமாஸ்கந்தர் எனப்படுகிறது.. இதனைச் சற்று பிரித்து ஆராய்ந்தால் சக உமா ஸ்கந்தர் என்பதே சோமாஸ்கந்தர் என்றாகியது..
இவருக்கு குழந்தை நாயகர் என்றும், இளமுருகு உடனுறையும் அம்மையப்பர் என்றும், சச்சிதானந்தம் என்றும், சிவனுமைமுருகு என்றும் வேறு பெயர்கள் உண்டு..
கிபி 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளில் இந்த உருவம் வழிபாட்டிலிருந்து உள்ளது. ராஜசிம்ம பல்லவர் என்ற இரண்டாம் நரசிம்மவர்மன் தான் எழுப்பிய சிவாலயங்களில் கருவறையிலுள்ளே சோமாஸ்கந்த புடைப்புச் சிற்பத்தை செதுக்கி உள்ளார்..
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் சன்னதியை சுற்றியுள்ள பிரகாரத்தில் சோமாஸ்கந்தரின் சன்னதியையும் காணமுடியும்.. குறிப்பாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், குமரக்கோட்டம், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், மற்றும் இலங்கையிலுள்ள திருகேதீஸ்வரம் என்ற ஊரில் உள்ள சிவன் கோயில் ஆகியவற்றில் சிவனின் இந்த உருவ அமைப்பினை காணலாம்..
தொடரும்..