அன்பு நிறைந்த எனது அன்பர்களே! நண்பர்களே!!
உங்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.. கோவிந்த் கிடாம்பி ஆகிய நான் எனது” தெய்வீகப் பயணம்” யூடியூப் சேனலில் இதுவரை எட்டு திருக்கோயில்களில் வீடியோ எடுத்து தாங்கள் தரிசிக்கும் வண்ணம் வெளியிட்டு வந்துள்ளேன்.. இனியும் இப்பயணம் தொடரும்.. நான் சென்ற இடங்களிலெல்லாம் தரிசனம் கிடைக்கப் பெற்றவற்றில் எனது இனிய அன்பர்களும் அந்த அனுபவத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் வீடியோ எடுத்து தங்களுக்கு வெளியிடுகின்றேன்.. சில இடங்களில் மூலவரை வீடியோ எடுக்க அனுமதிப்பதில்லை.. அவ்வாறான நிலையில் மூலவரின் படத்தினை வைத்து தங்களுக்கு தரிசனம் செய்கிறேன்.. பல இடங்களில் கோயில் பட்டாச்சாரியார் தனது ஒத்துழைப்பினை நல்கி கோவிலின் தல வரலாற்றினை கூறுகின்றார்.. சிறப்பான தரிசனம் செய்து வைக்கின்றார்.. ஆனால் ஒரு சில இடங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.. ஒரு கால பூஜை என்றும் பல கோயில்களுக்கு ஒரே பட்டாச்சாரியார் என்பதனாலும் நான் தரிசிக்கச் செல்லும் நேரங்களில் கோவில்கள் மூடிக் கிடக்கின்றன.. இருப்பினும் முயற்சி செய்து அவர்களை அழைத்து வந்து தரிசனம் செய்து வீடியோ எடுத்து வருகிறேன்.. அவ்வாறு முடியாத பட்சத்தில் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் அந்த கோயிலை திறந்து வீடியோ எடுத்து தங்களுக்கு தரிசனம் செய்ய வெளியிட்டு வருகிறேன்.. இனியும் இது தொடரும்.. இதுவரை தாங்கள் கண்டுகளித்த திருக்கோயில்கள் தங்களுக்கு சிறந்த அனுபவமும் திருப்தியும் கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.. தொடர்ந்து எனது சேனலை சப்ஸ்க்ரைப் செய்து மேலும் மேலும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
இது தவிர நான்” இந்த மதம் இணையில்லா இனிய மதம்” என்கின்ற ஒரு நூலினை எழுதி வெளியிட்டுள்ளேன்.. அதேபோன்று வார்த்தைகள் என்கின்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளேன்.. அவற்றை வாங்கி படித்து தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிப்பதுடன் தொடர்ந்து நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் சிபாரிசு செய்து எனக்கு ஆதரவு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..
தங்களை என்றும் மறவா அன்பன்
கோவிந்த் கிடாம்பி