அன்பார்ந்த வாசகர்களே! இந்தத் தொடரில் எங்கும் வியாபித்து இருக்கின்ற அந்தப் பரம்பொருளான விஷ்ணுவின் கல்யாண குணங்களைப் பற்றி பதிவு செய்து வருகிறேன்.. சென்ற பதிவில் பெருமாளின் கல்யாண குணங்களில் ஒன்றான ” ஸாம்யம்” என்ற குணத்தினை பற்றி தெரிவித்திருந்தேன்.. இந்தப் பதிவில் அவரது மற்றொரு கல்யாண குணமான “காருண்யம்” என்பது பற்றி பதிவு செய்கின்றேன்..
தனது பக்தர்கள் படும் துன்பத்தை கண்டு சகிக்க முடியாமல் இருக்கின்ற குணம் காருண்யம் எனப்படும்.. தன்னைப் பிறர் புகழ வேண்டும் என்பதனாலோ அல்லது இதற்காக தகுந்த சன்மானம் கிடைக்கும் என்பதனாலோ இறைவன் காரியத்தோடு இருப்பதில்லை.. காருண்யம் என்பது அவரது இயல்பான குணம்..
மற்றவர்கள் துக்கத்தை அனுபவிக்கும்போது அதைப் பார்க்கும் உத்தமன் அதைத் தாங்கிக் கொள்ள முடியாத தவிக்கிறான்.. பிறரது துக்கத்தால் தானும் துக்கத்தை அடைகிறான்..
விலங்கினமான கஜேந்திரன் என்கிற யானை முதலையால் துன்பப்பட்ட போது அங்கே தோன்றி அந்த முதலையை தன் சக்கராயுதத்தால் அழித்து கஜேந்திரனுக்கு விமோசனம் அழிக்கின்றான்.. விலங்கிற்கும் அவன் கருணை உள்ளது என்றால் மானுடப் பிறவியாகிய நமக்கு அவன் கருணை செய்ய மாட்டானா என்ன?

உலக வாழ்க்கையில் சிக்கி நாம் படுகின்ற துன்பங்களை கண்டு பரமாத்மா ஒரு காலும் சகிக்க மாட்டான்.. அதனால் வருந்துகிறான்.. உடனே நம் துன்பங்களைப் போக்குவதற்கு விரும்புகிறான்.. இதனால் நமக்கு ஏற்ற ஒரு வழியை காட்டி அருள் செய்கின்றான்.. தகுதி வாய்ந்த ஆச்சாரியரைக் காட்டிக்கொடுத்து சரணாகதி செய்யும் ஞானத்தை அவன் அளிக்கின்றார்.. இவ்வாறு தமது காருண்யா குணங்களினால் நமது துன்பங்களை போக்குகிறான்..
கருணையே உருவான காருண்ய மூர்த்தி அவன் அன்றோ..!!!