அன்பர்களே இந்த தொடரில் நான் ஜகத் காரணியாக விளங்கும் அம்பாளின் திவ்யமங்கள ரூபங்களையும் அவை அமைந்திருக்கும் இடங்களையும் அவற்றின் பெருமைகளை பற்றி பதிவு செய்து வருகின்றேன்..
நீண்ட நாட்களாக இந்த தொடர் தொடர முடியாமல் சில தடங்கல்கள் ஏற்பட்டு கொண்டிருந்தன.. அம்பாளின் கொலுவிருக்கும் நவராத்திரி விரைவில் துவங்க இருப்பதால் அவளின் கருணைகளைப் பற்றியும் பெருமைகளைப் பற்றியும் பதிவு செய்ய விரும்புகிறேன்..
சக்தி பீடங்கள் என்பவை ஆதிசக்தி ரூபமான சதி தேவியின் அதாவது தாட்சாயணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் எழுப்பப்பட்ட கோயில்களாகும்.. சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமர்விடம் என்று பொருளாகும்.. இவற்றில் 51 சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்றும் பதினெட்டு சக்தி பீடங்கள் மகாசக்தி பீடங்கள் என்றும் நான்கு சக்தி பீடங்கள் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அறியப்படுகின்றன.. இவை அனைத்தையும் தரிசிக்க இயலாமல் போனாலும் ஆதி சக்தி பீடங்கள் ஆகிய நான்கை யாவது தரிசிக்கவேண்டும் என்பது நியதி.. அசாமின் கவுகாத்தியிலுள்ள காமாக்கியா கோவில், கல்கத்தாவின் காளிகாட் காளி கோயில், ஒடிசாவின் பெர்காம்பூரில் உள்ள தாராதாரிணி சக்தி பீடக் கோவில், மற்றும் ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் உள்ள விமலாதேவி சன்னதி ஆகிய நான்கு சக்தி பீடங்கள் ஆகும்.. இவைகளைப் பற்றி சென்ற பகுதிகளில் தங்களுக்கு நான் விரிவாக பதிவு செய்திருந்தேன்..
தற்போது மகாசக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் பதினெட்டு கோயில்கள் பற்றி அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.. இது ஆதி சங்கரரால் ஏற்றப்பட்ட ஸ்தோத்திரம் என்று கூறப்படுகிறது.. இவற்றில் முதலாவதாக நாம் பார்க்க இருப்பது சங்கரி பீடத்திற்கான திருக்கோணேஸ்வரம் மற்றும் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்..
இங்கே ஆதிசக்தியின் இடுப்புப்பகுதி விழுந்ததாகவும் தந்திர சூடாமணி கூறப்பட்டுள்ள 51 சக்தி பீடங்களில் இங்கே அம்பாளின் கால் சிலம்புவிழுந்ததாகவும் கூறப்படுகிறது..

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவிலுள்ள ஒரு புகழ் பெற்ற இந்துக் கோயில் ஆகும்..

இந்தக் கோயிலின் திருவிழாக்காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரள் திரளாக வந்து கூடுவர்.. கோயிலில் பகல் மற்றும் இரவு நேரத்தில் அன்னதானம் கொடுக்கப்படும்.. அனேகமாக வெகு தொலைவில் இருந்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இங்கு தங்கி செல்வோர் அதிகம்.. தமிழர் மட்டுமின்றி தென்னிலங்கைச் சிங்களவர்களும் இந்த கோயிலில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்..
ஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசமாக இருப்பது நைனா தீவு ஆகும்.. ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாக காணப்பட்டு பின்னர் நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்றது இந்த தலமாகும்.. இந்த கோயிலின் கருவறையில் உள்ள சீரும் ஐந்து தலை நாகச்சிலை பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.. ஐதீகம் மற்றும் புராணக் கதைகளோடு மட்டும் தொடர்பு கொண்டவையாகக் காணப்படும்போது நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம் பல்வேறு தொடர்புகளைக் கொண்டதாகக் காணப்படுகிறது.. வரலாற்றுக்குறிப்புகள் சாசன ஆதாரங்கள் தமிழ் இலக்கியத் தொடர்புகள் கர்ணபரம்பரைக் கதைகள் புராண வரலாறுகள் என பல்வேறுபட்ட தொடர்புகளை உடையதாக விளங்கும் சிறப்பு பெற்றது இந்த ஆலயம்..
இந்திரன் தனது சாபம் நீங்கி அம்மனுக்கு ஆரம்பத்தில் சிறிய ஆலயம் கட்டினான் என்றும் ஆதியில் அன்னைக்கு நாகம் அயலிலுள்ள புளியந்தீவில் இருக்கும் நாகதம்பிரான் இடம் பூப்பறித்து கடல்வழியாக வரும் வேளையில் கருடன் இடைமறித்து நாகத்தை கொள்ள எத்தனிக்கும் போது அந்த வழியே வந்த வணிகரான மாநாய்கன் வினை தீர்த்து வழிபடச் செய்தார் என்றும், மகாபாரதத்தில் அர்ஜுனன் அவர்களைக் கொன்ற பாவங்கள் தீர நாகதீவு எனப்படும் நயினாதீவு வந்து நாக கன்னிகையை மணந்து பப்ருவன் என்ற மகனைப் பெற்றதும் அந்த மகனின் பெயரிலேயே இன்றும் அம்பாளின் ஆலயத்திற்கு பப்பரவன் திடல் என்றும் அழைப்பார்கள்..
மணிமேகலையில் நாக இளவரசியான பீலிவளை மீது டெல்லி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடம் தோறும் நடத்தும் இந்த விழாவை நடத்த மறைந்தார் என்றும் இவர்களின் குழந்தையை தொண்டைமான் இளந்திரையன் என்றும் இவர்களது சந்ததியை பிற்காலத்தில் தொண்டைமான் சந்ததியினரும் தொண்டைமண்டல தேசத்தை வரும் ஆவார்கள் என்று கூறப்படுகிறது.. எனவே ரெய்னா தீவானது பல கர்ணபரம்பரைக் கதைகளோடும் பல புராண இதிகாசங்களோடும் பிணைந்திருக்கிறது..
தொடரும்…