ஸ்ரீயப்பதியாக இருக்கக்கூடிய அந்தப் பரந்தாமன் ஆகிய மகாவிஷ்ணு தம்மை துதிக்க வரும் பக்தர்களுக்கு அன்பினாலும் அறவழியி னாலும் பற்பல நன்மைகளைச் செய்கின்றார்.. அந்த பரந்தாமனைத் துதிக்க பல்லாயிரம் திருநாமங்கள் உள்ளன.. இந்தத் தொடரில் அந்த திருநாமங்களில் சிலவற்றின் மேன்மைகளைப் பற்றி பதிவு செய்து வருகிறேன்..
இந்தப் பதிவில் அந்த வகையில் விச்வம் என்கிற திருநாமத்தின் மேன்மையினைப் பற்றி ப் பார்ப்போம். இந்தத் திருநாமம் ஆன விச்வம் என்கிற நாமம் விஷ்ணு சகஸ்ரநாமத்தின் முதல் திருநாமம் ஆகும்.

முழுமையாக உள்ளவன் என்று இதற்குப் பொருள். இந்தத் திருநாமம் “விச் “என்ற மூலத்திலிருந்து, அனைத்து அவயவங்களிலும் பிரவேசிக்கிறார் என்ற பொருளில் வந்தது. மகாபாரதம் மோக்ஷ தர்மத்தில்-“வேசநாத் விஸ்வமித்யாஹு: லோகாநாம் காசிஸத்தம லோகாம்ச்ச விச்வம் ஏவ இதி ப்ரவதந்தி நாராதிப- காசி அரசனே! அனைத்து உலகங்களிலும் பிரவேசிப்பதால் எம்பெருமானே விச்வம் என்கின்றனர்.. இதனால் அந்த உலகங்களையும் விச்வம் என்கின்றனர்-என்று உள்ளது. எம்பெருமான் தன்னுடைய ஸ்வரூபம், ரூபம், குணம் மற்றும் விபவம் ஆகிய அனைத்தையும் இயல்பாக கொண்டுள்ளான். இவற்றை முழுமையாகவும் பூரணமாகவும் கொண்டுள்ளான். இவற்றைப் போன்று வேறு யாருக்கும் இவை இப்படியாக இல்லை. இவனை விட உயர்ந்தவர்கள் உம் இந்த விஷயங்களில் இல்லை. இவை அனைத்தும் மங்களகரமாக உள்ளன. விச்வம் என்பது முழுமையைக் குறிக்கும்.
எல்லையற்ற குணங்கள் கொண்ட பகவானை இப்படி முதலில் கூறியது பொருத்தமே ஆகும். இங்கு விச்வம் என்பது ஆண்பால் ஆகவும் பெண்பால் ஆககவும் வரவில்லை (neuter gender). இது விஷ்ணுவை குறிப்பதால் ஆண்பால் ஆக இருக்கலாம் என்று சிலர் எண்ணக்கூடும். ஆனால் ஒரு சொல்லின் பால் என்பது உபயோகத்தால் வருவது அல்லாமல் இலக்கணத்தின் ஆள் மட்டுமே அல்ல. இதனை அஷ்டாத்யாயி-ததிசிஷ்யம் ஸஜ்ஞா ப்ரமாணத்வாத்-என்றது.
விச்வம் என்று பதம் பொதுவாக காரியத்தை குறிக்கிறது. ஆனால் இங்கு காரணத்தை குறிப்பதாக உள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.. இது சரியான வாதமாக தெரியவில்லை. காரணம் எம்பெருமானே அனைத்து திருநாமங்களும் மூலமாக சொல் இலக்கணம் ரீதியாகவும் உபயோக ரீதியாகவும் விளங்குகிறான். அப்படி உள்ளபோது இந்த திருநாமங்களின் இரண்டாம்பட்சமாக எம்பெருமானை கொள்ள இயலாது.
ஒரு சிலர் விச்வம் என்றால் பிரஹ்மத்திற்கும் உலகத்திற்கும் உள்ள ஒற்றுமையை கூறுகிறது என்று வாதாடலாம்.. இதுவும் சரியான வாதமல்ல. விச்வம் என்பது ஒற்றுமையை குறிக்கவில்லை.”தத்வம் அஸி” என்னும் உபநிஷத் வாக்கியத்தில் கூறப்பட்ட படியே இங்கும் ஒற்றுமை கூறப்பட்டது என்றும் கூறலாம்.. இந்த வாதமும் ஏற்புடையதல்ல. இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே பொருத்தமில்லை. மேலும் பொதுப் பெயர்கள் அனைத்தும் தனித்தனியாகவே கொள்ளப்பட வேண்டும். அவற்றில் ஒற்றுமை காண இயலாது. மேலும் பெயர்களில் பால் வித்தியாசம் உண்டு. உதாரணமாக விச்வம் என்பது பொதுப்பாலாகவும், விஷ்ணு என்பது ஆண்பால் ஆகும் உள்ளதை காண முடியும். இப்படியாக ஒற்றுமை குறித்து கூறப்படும் அனைத்து வாதங்களும் முன்பே பல இடங்களில் மறுக்கப்பட்டன. இங்குக் கூறப்பட்ட பூரணத்துவம் என்பது”விஷ்ணு”என்று தொடங்கி அனைத்து திருநாமங்களும் விவரிக்கப்பட்டிருக்கும்..
(ஸ்ரீ பராசர பட்டர் அருளிய ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம்-தமிழாக்கம் க.ஸ்ரீதரன்-நன்றி)