இந்தத் தொடரில் கைலாயநாதன் சிவபெருமானின் அறுபத்தி மூன்று திருமேனிகள் பற்றி பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது உமேச மூர்த்தி அல்லது உமா மகேச மூர்த்தி ஆகும்.. இந்த வடிவத்தில் சிவபெருமான் இடதுபுறம் உமையுடன் நின்றபடி காட்சியளிக்கும் கோலமாகும்.
சிவபெருமான் வலது கையில் அபய முத்திரையை தாங்கியும் இடதுபுறத்தில் உண்மையுடனும் காணப்படுவார்..

பிரம்மா தனது படைப்புத் தொழிலை செய்ய உதவியாக நான்கு குமாரர்களைப் படைத்தார்.. ஆனால் அவர்கள் அந்த தொழில் செய்ய விருப்பம் கொள்ளாமல் ஞானத்தை அடைய விரும்பினர்.. திருமாலும் பிரம்மனும் தம்பதிகளாக இருப்பதைக் கண்டு ஞானத்தினை கற்க சிவபெருமான் இருக்கும் கயிலையை நோக்கி சென்றார்கள்.. ஆனால் அவரும் உண்மையுடன் இருப்பதைக் கண்டால் சனத்குமாரர்கள் வருத்தம் கொள்ள நேரிடும் பின் ஞானம் அடையும் அவர்களின் எண்ணம் ஈடேராது என சிவபெருமான் எண்ணி தன் அருகே இருந்த அனைவரையும் எரித்து சாம்பலாக்கினார்..
பின்னர் தட்சிணாமூர்த்தியாக ஆலமரத்தில் தனித்து அமர்ந்து பிரம்ம குமாரர்கள் நால்வருக்கும் ஞானத்தினை வழங்கினார்.. பின்பு தனது இடத்தோளினைப் பார்த்தார்.. அதில் இதுவரை சிவபெருமானோடு ஒன்றி இருந்த உமையம்மை வெளிப்பட்டார்.. பிறகு சிவபெருமானின் இடப்புறம் அமர்ந்து இருவரும் அருள் செய்தார்கள்..
சில திருக்கோயில்களில் மகேசன் சுகாசனத்தில் அமர்ந்து வெண்ணீறு பூசிய மேனியும், மான் மழு அஞ்சேல் அவையும் தாங்கிய நான்கு கரங்களும் கொண்டு அருகில் குவளை மலர் ஏந்திய கரத்தினளாகக் காட்சிதரும் உமையவளை அணைத்தபடி அருங்காட்சி அளிப்பான்.. சில வடிவங்களில் ஈசனின் திருமடியில் அமைதி அமர்ந்திருப்பாள்.. கைலையில் அம்மையும் அப்பனும் அளிக்கும் அருங்காட்சியே இந்த திருக்கோலம் ஆகும்..
தஞ்சை மாவட்டம் கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில் மூலவர் இந்த மூர்த்தியின் திருப்பெயர் தாங்கி நிற்கின்றார்.. மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் முதலான பழமை வாய்ந்த கோயில்களில் இந்த மூர்த்தியின் திருவுருவம் அமைக்கப்பட்டு விளங்குகின்றது..