இந்தத் தொடரில் கைலாயநாதன் சிவபெருமானின் பல்வேறு வடிவங்களை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்தப்பதிவில் நாம் பார்க்க இருப்பது சுகாசன மூர்த்தி.
சுகாசனம் என்பது சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முக்தம், மயூரம், சுகம் என்ற ஒன்பது வகையான ஆசனங்களில் ஒன்று.
இந்த வடிவத்தில் சிவபெருமான் இடக்காலை மடக்கி வைத்து வலக்காலை தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் கோலம் சுகாசன மூர்த்தி என்று அழைக்கப்படுகின்றார்.
இந்த நிலை சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவாகமங்களின் பொருளினை விளக்கிய திருஉருவம் என்று கருதப்படுகிறது. சுகாசன நிலையில் சிவாகமங்களின் உண்மைகளையும் விளக்கங்களையும் ஐவகை பந்த பாசங்களின் நிலையையும் அவற்றை நீக்கினால் கிடைக்கும் நன்மைகளையும் சிவாகமங்கள் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் உமாதேவி யாருக்கு விளக்கிய திருக்கோலம் ஆகும்.
இந்த வடிவம், உமா சகித சுகாசனர், உமாமகேஸ்வர சுகாசனர் மற்றும் சோமாஸ்கந்த சுகாசனர் என்று மூன்று வகைகளாக அருள்பாலிக்கிறார்.
இந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கும் ஒரு திருக்கோயில் திருவெண்காட்டில் உள்ள ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில் ஆகும்.
தொடரும்…