சேஷாத்ரி சுவாமிகள்

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு அருகே உள்ள உத்தரமேரூர் என்னும் ஊரின் அருகே உள்ள வாவூர் என்னும் கிராமத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் சனிக்கிழமையில் 1870ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாள் காமகோடி வம்சத்தில் வரதராஜன் மரகதாம்பாள் தம்பதியருக்கு சேஷாத்ரி சுவாமிகள் பிறந்தார். இவரது 14 வயதில் இவருடைய தகப்பனார் இறந்து விட்டார். திருமண வயதை அடைந்தபோது இவருக்கு திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது அவருடைய ஜாதகத்தை கணித்த அவர்கள் இவர் சந்நியாசியாக மாறி யோகியாக கூடியவர் என்று சொன்னார்கள்.

அவருடைய தாயார் தனது இறக்கும் தருவாயில்”அருணாசல அருணாசல”என்று மூன்று முறை கூறி விட்டு உயிர் துறந்தார். இதனால் அருணாசலேஸ்வரர் சேஷாத்திரி மனதில் ஆழப் பதிய இவர் திருவண்ணாமலைக்கு வந்தார்.

திருவண்ணாமலைக்கு வந்த சுவாமிகள் பல சித்து வேலைகளை செய்து காட்டினார். அவருடைய சித்துக்களை அறிந்த மக்கள் அவரிடம் வந்தார்கள். நல்லவர்களுக்கு நல்வாக்கும் தீயவர்களுக்கு கொடும் சொற்கள் கூறினார்.. ஒரு மனநிலை சரியில்லாதவர் போல் வேகமாக சிரிப்பதும், ஓடுவதும், தன்னை பார்க்க வருகின்றவர்களைக் கட்டி அணைப்பதும், கன்னத்தில் அறைவதும், எச்சில் உமிழ்தலும் போன்றவற்றை செய்வார்.

திருவண்ணாமலை கோயிலில் பாதாள லிங்கத்தின் பக்கத்தில் ரமண மகரிஷி தவம் இருந்தபோது அவரை சுற்றி பாம்புகளும் பல்லிகளும் அண்டின.. பல நாட்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருந்த ரமணமகரிஷி காப்பாற்றி அவரை உலகிற்கு அறிமுகம் செய்தார் சேஷாத்திரி சுவாமிகள்.

1928ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் நாள் அவருடைய பக்தர்கள் கூடி அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க முதலில் மறுத்த அவர் பிறகு ஒப்புக் கொண்டார். பக்தர்கள் பலர் குடம் குடமாக அபிஷேகம் செய்தனர். அந்த அபிஷேகத்தின் குளிர்ச்சியால் அவருக்கு குளிர் காய்ச்சல் வந்தது. உணவோ நீரோ எடுத்துக் கொள்ளாமல் இருந்தார். பக்தர்கள் கம்பளி கொடுத்தாலும் போர்த்திக் கொள்ளாமல் இருந்தார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் நாள் அஸ்த நட்சத்திரத்தன்று முக்தி அடைந்தார்.

இவர் சிறுவயதில் பொம்மை விற்பவர் இடமிருந்து ஒரு கிருஷ்ணர் பொம்மையை எடுத்தார். அதன்பிறகு அந்த கடையிலிருந்து பொம்மை முழுவதும் விற்று தீர்ந்துவிட்டது.. இதுபோன்ற வியாபார இடங்களுக்கு சேஷாத்திரி சுவாமிகள் சென்றார் அந்நாளில் தன் கடையில் வியாபாரம் தங்கு தடையின்றி நடைபெறும் என்ற நம்பிக்கை இருந்ததனால், இவரை ” தங்கக்கை சேஷாத்ரி சுவாமி” என்று அழைப்பார்கள்.

ஒருநாள் இரவு நேரத்தில் ஒரு உணவு விடுதியில் நுழைந்து மைதா மாவு மூட்டை அடுக்கி வைத்த இடத்திலிருந்து எடுத்து தண்ணீர்ப் பீப்பாயில் கொட்டி விட்டார்.. இவரது செயலை கண்ட அந்த உணவு விடுதி ஆட்கள் இவரை தொலைத்து விட்டனர். இரவு நேரத்தில் அவர் ஒரு மூட்டை மாவை வீணடித்து விட்டார் என்பது வருத்தப்பட்டனர். ஆனா சற்று நேரத்தில் ஒரு வாகனத்தில் நிறைய ஆட்கள் வந்து அருகில் சர்க்கஸ் அமைக்க வந்திருப்பதாகவும் உணவு வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர் கொட்டிய மாவு அனைத்துமே உணவானது. இந்தச் செய்தி அனைத்து உணவு விடுதிகளுக்கும் சென்றடைய அவர்கள் அனைவரும் இவரது வருகையை எதிர்பார்த்த காத்திருப்பார்கள்.

திருவண்ணாமலையில் இவரது சமாதி கிரிவலப்பாதையில் ரமண மகரிஷி நான் ஆசிரமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

எனது சிறுவயதில் எப்போதெல்லாம் ரமணாஸ்ரமம் செல்லும்போது இந்த ஆசிரமத்திற்கு செல்வது ஒரு வழக்கமாக இருந்தது.

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: