பண்டைத் தமிழகத்தில் களந்தை என்று சொல்லப்படுகிற களப்பால் என்னும் ஊரிலே கூற்றுவர் என்று ஒரு குறுநில மன்னன் இருந்தார். அவர் சிவபெருமானது திருநாமத்தை நாள்தோறும் ஓதியும், சிவனடியார்களுக்கு தொண்டு செய்தும் வாழ்ந்து வந்தார். அந்த ஒழுக்கத்தின் காரணத்தினால் இடைப்பட்ட வலிமையினால் நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று எதிரிகளுக்கு கூற்றுவன் போல விளங்கினார். தனது தோள் வலிமையினால் பல போர்களிலும் பல அரசர்களையும் வென்று அவர்களது வள நாடுகளை எல்லாம் கவர்ந்தார். அவருக்கு மணிமுடி தவிர மற்ற எல்லா திருவும் கிடைத்தது.
தனக்கு மணிமுடி இல்லாதது ஒரு பெரும் குறையாக இருக்க அவர் தனக்கு மணிமுடி சூட்டி கொடுக்கும்படி தில்லை வாழ் அந்தணர்களை கேட்டார். அவர்களோ சோழ மன்னர்களுக்கு நன்றி மற்றவர்க்கு முடி சூட்ட மாட்டோம் என்று மறுத்து இவரது ஆணைக்கு பயந்து சேர நாட்டிற்கு சென்று விட்டார்கள்.
அதனால் மனமுடைந்த கூற்றுவர்”முடியாக உமது பாதம் பெற வேண்டும்”ஏனென்று திருச்சிற்றம்பலம் ஆடவல்லானை பட வேண்டி அவரது நினைவுகளோடு தூங்கினார். அன்றிரவு அம்பலத்தில் ஆடும் பெரும் கூத்தர் எழுந்தருளி, தாமத திருவடிகளையே அவருக்கு முடியாக சூட்டி அருள, அதனைத் தாங்கி அவர் தனி ஆட்சி புரிந்தார்.

இறைவனது கோயில்கள் எல்லாம் அவர் பூசை புரிந்தார். இவ்வாறு இறைவன் மகிழ நல்ல அரசாட்சி புரிந்து ஒருநாள் உமையொருபாகன் திருவடி சேர்ந்தார்.
இவர் கூற்றுவ நாயனார் என்ற பெயருடன் 63 நாயன்மார்களில் ஒருவராக வழிபடப்பட்டார்.
இவரது பூஜை நாள் ஆடி திருவாதிரை.