தட்ச பிரஜாபதி யாகம் செய்தபோது அவரது மகள் தாட்சாயணி கணவர் சிவபெருமானுக்கு அவிர் பாகத்தை கொடுக்க மறுக்கவே தாட்சாயணி அவருடன் சண்டையிட்டு தட்சனால் அவ மதிக்கப்படுகிறாள்.. அதனால் நெருப்பில் விழுந்து உயிர் துறக்க இறந்த மனைவியின் உடலை சுமந்து கொண்டு கடுங்கோபத்துடன் ஊழித் தாண்டவம் ஆடினார் சிவபெருமான்.
இதனால் உலகெங்கும் இருள் சூழ்ந்து அழியும் நிலை உருவாக தேவர்களும் முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். விஷ்ணு பகவான் தன் சக்ராயுதத்தால் சதி தேவியான தாட்சாயணியின் உடலைத் தன் சக்கராயுதத்தால் 51 ஆண்டுகளாக அறுத்து பூமியில் வீழ்த்தினார். அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்பட்டு அவை புனிதமாக போற்றி வணங்கப் படுகின்றன. அந்த வகையில் சஷ்டி தேவியின் வலது காலின் விரல்கள் (கட்டை விரல் தவிர) விழுந்த இடமாக போற்றப்படுவது கல்கத்தாவில் உள்ள காளிகாட் கோயில், என்று தந்திர சூடாமணி கூறுகிறது.காளிகா புராணத்தில் கூறும் தேவியின் முகம் விழுந்த சக்தி பீடம் இது என்று கூறப்படுகிறது.
கங்கை வங்க கடலுடன் கலக்கும் இடத்தை கங்கா சாகர் என்று அழைப்பார்கள். பழங்காலத்தில் அந்த முகத்துவாரத்தில் கபில முனிவர் வசித்து வந்தார். அங்கு இன்றும் அவர் பெயரில் ஒரு சிறு கோயில் உள்ளது. ஒரு முறை சில காபாலிக சன்னியாசிகள் கங்கையில் புனித நீராடி கபில முனிவரை தரிசிக்க அடர்ந்த காட்டு வழியே சென்றனர். பாதையில் அவர்களுக்கு விரல்கள் வடிவில் ஓர் அதிசயப் பாறை தென்பட்டது. அது காளியின் சாயலில் அவர்களுக்கு தோற்றமளித்தது. அவர்கள் அங்கேயே அந்தப் பாறையை ஸ்தாபித்து தங்களது முறைப்படி வழிபட்டனர். அந்தச் சிலையே இன்றைய காளிகாட் காளி அம்மன்.
இந்தக் கோயிலின் தல வரலாறு இன்னொரு விதமாகவும் கூறப்படுகிறது. காளிகாட் காளி கோவிலை சுற்றி முன்பு காடு மண்டி வளர்ந்திருக்கிறதாம். அந்த காலத்தில் இந்த தேவியை ஆத்ம ராம பக்தன் ஆழ்ந்த பக்தியோடு ஆராதித்து வந்தான். மாலை நேரத்தில் பாகிரதி கரையில் அவன் ஜெபம் செய்யும்போது கண்களைப் பறிக்கும் ஒளிக்கதிர் ஒன்று திடீரென்று தோன்றியது. அதை கண்டு வியந்தான் ஆத்மராம். ஒளி வந்த இடத்தை மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது தெளிவான தண்ணீருக்கு அடியில் மனித கால் விரல்கள் போல் வடிக்கப்பட்ட சிறு கல் ஒன்றைக் கண்டான்..அத்துடன் அவர் அன்றிரவு ஒரு கனவு கண்டான். அந்தக் கல்லில் தென்பட்ட விரல்கள் தாட்சாயணியின் வழக்காறுகள் என்று உணர்ந்து அதை எடுத்து வந்து தேவியின் பாதங்களை ஒட்டி வைத்து அதற்கு பூஜை செய்யத் தொடங்கினான். அந்தப் புனித இடமே காளி தேவியின் மகா சக்தி பீடம் ஆயிற்று.
கல் கிடந்த இடத்தின் அருகிலேயே ஆத்ம ராமுக்கு ஒரு சிவலிங்கம் கிடைத்தது. அந்த சிவலிங்கத்திற்கு நகுலேஸ்வர பைரவர் என்று திருநாமம் சூட்டி காளி சிலையின் அருகிலேயே அமைத்து வழிபட்டான். விரல்கள் போல் காணப்பட்ட அந்தக் கல் பின்னர் ஒரு வெள்ளிப் பேழைக்குள் வைக்கப்பட்டு இப்போதைய காளி சிலையின் அடியில் வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயில் ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ளது. கல்கத்தா காளி கோவில் என்றும் காளிகாட் காளி கோயில் என்றும் அழைக்கப்படும் புகழ்பெற்ற தலம் ஆகும். கொல்கத்தாவின் டாலிகஞ்ச் என்னும் மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள நீர் நிலை ஆதி கங்கா அல்லது பாகீரதி என்று அழைக்கப்படுகிறது.
கோவிலுக்கு செல்ல சிறந்த நேரம் அதிகாலை அல்லது பிற்பகல் நேரம் ஆகும். இங்குள்ள காளி தேவியின் சிலை மிகவும் பெரியது.
தற்போதைய கோயில் அமைப்பு 200 ஆண்டு பழமையானதாக இருந்த போதிலும் இந்த தலத்தை பற்றிய குறிப்பு 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் உள்ளே இலக்கியப் பதிவுகளில் உள்ளது. பழமையான முதலாம் குமார குப்தர் காலத்திய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது, திருத்தலத்தின் பழமைக்கு சான்றாக உள்ளது.
சிறு குடிசையாக இருந்த திருக்கோயில் சிறு கோயிலாக மான்சிங் அரசரால் 16ஆம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. பின்னர் சபர்னா ராய் சவுத்ரி என்ற குடும்பத்தினர் முன்னிட்டு தற்போதைய கோயில் அமைப்பை 1806 ஆண்டில் கட்டினர்.