இந்தத் தொடரில் பரம்பொருளான சிவபெருமானின் வடிவங்கள் பற்றி பதிவுகள் மேற்கொண்டு வருகிறேன். அஷ்டாஷ்ட விக்கிரக லீலை எனும் கேசி முனிவரின் நூலில், சிவபெருமானின் 64 வடிவங்கள் அந்த வடிவங்களின் மூலம் சிவபெருமான் அறியாமையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சதாசிவ வடிவத்தின் ஈசானம், தத்புருஷம் அகோரம் வாமதேவம் மற்றும் சத்தியோசாதம் போன்ற ஐந்து முகங்களில் இருந்து முகத்திற்கு ஐந்தாக 25 வடிவங்கள் தோன்றின. அவை மகேஸ்வர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மகேஸ்வர மூர்த்தங்கள் உடன் வேறு சில மூர்த்தங்களும் சேர்ந்து 64 வடிவங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது சதாசிவ மூர்த்தி.
சதாசிவம், தென்னக சிவநெறியில் பரம்பொருளாக போற்றப்படுகின்ற சிவனின் திருவடிவமாகும். தூய வெண்மை நிறத்துடன் ஐந்து திருமுகங்களும் பத்து கரங்களும் 15 திருக்கண்களும் கொண்டு 16 வயது இளைஞனாக காட்சி அருளும் சதாசிவன் அளிக்குமாறு ஆகமங்கள் கூறுகின்றன.
உத்தர காமிகத்தின்படி, வலக்கையில் சூலமும், மழுவும், கட்வாங்கமும், வச்சிரமும், அபய முத்திரையும் கொண்டும், இடக்கையில் நாகம், மதுலிங்கப் பழம், நீலோற்பலம், உடுக்கை, மணிமாலை கொண்டும் காட்சியளிக்கிறார். இவர் ஈசானம், தத்புருஷம், வாமம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்து திருமுகங்களுடன் எழுந்தருளியிருக்கிறார் இவரது தேவியாக அமர்ந்திருக்கும் சக்திக்கு மனோன்மணி என்று பெயர்.
சதாசிவ வடிவமானது 64 சிவ திருக்கோலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.சிவலிங்கம், சதாசிவ வடிவம் என்று சொல்லப்படுகின்றது. லிங்கத்திருவுருவை வழிபடினும், சதாசிவனே வழி வழிபட்ட பலன் கிடைக்கும்.