நடாஷா
பாங்காக் நகரின் டான்ம்யூங் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இருந்து அந்த விமான வான் நோக்கி பாய்ந்து மிதக்க ஆரம்பித்தது..ஜன்னலோரத்தில் அமர்ந்து இருந்த நான் வெளியே பஞ்சுப் பொதிகளாய் காணும் மேகக் கூட்டங்கள்..அதனைப் பின்நோக்கி தள்ளி விமானம் பறந்து கொண்டிருந்தது.. என் நினைவுகளும் தான்…..
“ நடாஷா.. அங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறாய்.. நான் இங்கே கிச்சனில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்..நீ அங்கே பெரிதாக ப்ளேயரில் சவுண்ட் வைத்து டேன்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறாய்.. சற்று இங்கே வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு…” அதன் பிறகு என் சித்தி ஏதோ முணுமுணுப்பு செய்து கொண்டு இருந்தார்..
“ இதோ வந்து விட்டேன் சித்தி” என்ற வாறே ப்ளேயரை ஆஃப் செய்து விட்டு கிச்சனில் நுழைந்தேன்.. அதற்குள் என் மொபைல் சிணுங்கியது.. எனது ஃப்ரண்ட் ஜோசஃபைன் மறு முனையில்..
“ நடாஷா.. நமக்கு ஒரு குட் நியூஸ்.. நமது குரூப்பிற்கு ஒரு நல்ல ஆஃபர் வந்திருக்கிறது.. பாங்காக்கில் ஒரு பெரிய ஹோட்டலில் பார் டான்ஸராக.. மாதம் பத்தாயிரம் டாலர்கள்.. மூன்று மாதங்கள் கான்ட்ராக்டில்.”
அவள் சொல்ல சொல்ல எனக்கு சிறகுகள் விரிந்து பறக்க துவங்கியது..
ஆமாம்.. நான் நடாஷா கேப்ரியல்.. ஒரு க்ளப் டேன்ஸர்.. எனக்கு வயது இருபது.. எனது ஐந்தாம் வயதில் என் அம்மா என்னை விட்டு விட்டு போய் விட்டாள்.. இப்போது என் அப்பாவின் இரண்டாம் மனைவி சூசன் உடன் தான் இருக்கிறேன்………….
( இதுபோன்ற 12 சுவாரசியமான சிறுகதைகள் என்னுடைய வார்த்தைகள் சிறுகதைத் தொகுப்பில்.. புத்தகத்தினை வாங்கி படித்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.. தங்களின் நண்பர்களுக்கும் இப்புத்தகத்தை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள 9176231194 எண்ணுக்கு வாட்ஸப் செய்யவும்)
