இந்து மதம் இணையில்லா இனிய மதம்அத்தியாயம் ஒன்றுபரம்பொருள்பரம்பொருள் யாது? இவரைக் கடவுள் என்றும், தெய்வம் என்றும், இறைவன் என்றும் கூறுவர்.. இந்த பரம்பொருள் எல்லாவற்றுக்கும் மேலானது.. அதாவது ஆங்கிலத்தில் “supreme”என்று சொல்வார்கள் அல்லவா? அதனை உணர்ந்து கொண்டோர்கள் நமது குருவாக, ஆசாரியர்களாக நாம் ஏற்று அவர்களின் வழிகாட்டலில் நாம் உணர்ந்து தெளிந்து அந்த பரம் பொருளிடத்தில் ஈடுபாடு கொள்கிறோம்.. அந்த பரம்பொருளின் தத்துவங்களை புரிந்து கொள்ள நமக்கு ஒரு உத்தி வேண்டும்.. எப்படி நடுக்கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு கிடைத்த மரக்கட்டையானது அவனைக் கரை சேர்க்க உதவுமோ அது போல, நமக்கு ஒரு கலங்கரை விளக்கம் கரை சேர்க்க உதவுமோ அது போல, வழிகாட்டிகளாக நெறிமுறை விளக்கங்களுடன் அந்த பரம்பொருளால் படைக்கப் பட்டுள்ளன.கடவுள் என்பவர் யார்?கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லா சக்திகளும் பொருந்தியவர் என்றும், இறப்பு, பிறப்பு, இரவு, பகல், இன்பம், துன்பம் போன்ற இந்த உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த நிலை என்று சொல்லப்படுகின்ற மறைபொருள். அந்தத் தன்மையை உடைய ஒரு பரம்பொருள் என்றும் கடவுள் இருப்பதை நம்புவர்கள் கருதுகின்றனர். உலகம் முழுவதிலும் பரந்து இருக்கக்கூடிய பல்வேறு மதங்களை சார்ந்தவர்கள், கடவுள் பற்றிய பலவிதமான கருத்துக்களை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அன்பு, புனிதம்,கருணை என்பவற்றின் மறு பொருள் தான் கடவுள் எனக் கூறுகின்றார்கள். சில மதங்கள், கடவுள் ஒருவரே என்று நம்புகின்றனர். வேறுசில மதங்களை சேர்ந்தவர்கள், பல கடவுள்களை வணங்குகின்றார்கள். சில மதங்களில் கடவுளை பல்வேறு வடிவங்களாக உருவகப்படுத்தி சிலைகளை அமைத்து வழிபடுகின்றார்கள். வேறு சில சமயங்களில், சிலை வணக்கத்தை முற்றிலுமாக எதிர்க்கின்றனர். கடவுளை “இறைவன் அல்லது ஆண்டவன்” எனவும் அழைக்கின்றார்கள்.கடவுள் நம்பிக்கை உடையவர்களின் எண்ணத்தின்படி, கடவுள் பிரபஞ்சத்தின் படைப்பாளியாகவும் பாதுகாப்பாளராகவும் இருக்கின்றார். இயற்கையே கடவுள் என கூறுவோருக்கு கடவுள் பிரபஞ்சத்தின் படைப்பாளர் ஆக மட்டுமே இருக்கின்றார். ஆனால் பிரபஞ்சத்தை காப்பாளராக அல்ல, கடவுள் அனைத்திலும் உள்ளாதவராய் இருக்கிறார் என்னும் கோட்பாடு உள்ளவர்களின் கருத்து. கடவுளே தான் பிரபஞ்சம். நாத்திகத்தில் கடவுள் இருக்கிறார் என நம்ப படுவதில்லை. கடவுள் தெரியாதவராகவோ அல்லது அரிய முடியாதவராகவோ கருதப்படுகிறார். பல குறிப்பிடத்தக்க தத்துவவாதிகள், கடவுள் இருப்பிற்கும் இல்லையேல் அதற்கு எதிராகவும் வாதங்களை உருவாக்கியுள்ளனர்.கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் வெவ்வேறு படிகளாக, ஒவ்வொரு மதமும் உள்ளன என்றும், எந்த படியும் அபாயகரமானதோ, தீமையானதோ அல்ல என்றும், வளர்வதற்கு மறுத்து, முன்னேறாமல் கட்டுப்பெட்டியாக நின்று விடும் போது தான் ஒரு மதம் அபாயகரமானதாக ஆகின்றது என்றும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகின்றார். மதம் மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியை யோகிகள்,ஞானிகள்,மகான்கள் ஆகியோர் வாழ்ந்து காட்டினார்கள். இவர்களைப் பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை அனைவரும் ஒன்றே என்பதை மறந்து மற்றவர்கள் இடத்திலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட பயன்படுத்த ஆரம்பித்தனர்..இந்து சமயம்,இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று எனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன்கள் இந்துக்களை கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலான இந்துக்கள், இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கிறார்கள். இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள்,அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள். நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு எல்லாவிதமான சமய செயல்பாடுகளுக்கும் இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால் தான், இந்து சமய சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன..இயற்கையின் நிகழ்வுகளான இடி, மின்னல், காற்று, நெருப்பு போன்றவற்றினை கண்ட ஆதிமனிதன் அவற்றை கடவுளர்களாக வழிபடத் தொடங்கினான்.சூரியதேவன், சந்திர தேவன், அக்னி தேவன், வருண தேவன் என இயற்கையை முதல் கடவுளாகவும், இவற்றை இயக்குகின்ற சக்தியான பரம்பொருளாகவும் உணரப்பட்டது. இந்து சமயத்தவர், கடவுளை பல உருவங்களிலும் பெயர்களிலும் வணங்குகிறார்கள். இவ்வாறு வழங்கப்படும் இந்துக் கடவுள்கள் காலத்துக்குக் காலமும், இடத்திற்கு இடமும் பல வேறுபாடுகளுடன் காணப்படுகின்றனர். இவை அனைத்தையுமே ஒரே நெறிக்குள் அடக்கி வைத்திருப்பது, இந்து சமயத்தின் சிறப்பியல்பாகும். வேதங்கள் 33 கடவுள்களைப் பற்றி சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.குறிப்பாக சிவன், திருமால், பிரம்மன், சக்தி, லக்ஷ்மி, சரஸ்வதி முதலிய ஏராளமான கடவுள்கள் இந்துக்களால் வணங்கப்படுகின்றனர்..இந்து மதத்தின் வரலாறு என்பது, இந்திய துணைக்கண்டத்தில் அமைந்துள்ள இந்தியா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் இந்து சமயப் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம்,கௌமாரம், சௌரம், காணா பத்தியம் மற்றும் ஸ்மார்த்தம் போன்ற பல பிரிவு சமய கட்டுப்பாடுகளுடன், இரும்புக் காலம் தொட்டு கி.மு.வுக்கு முன்னரே தோன்றிய ஒன்றாகும்.. இந்த மதத்தின் கோட்பாடுகள் அனைத்தும் இந்திய கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளின் வேர் தோற்றத்தால் உருவானதாகும். இது இரும்பு காலம்தொட்டு உதவி புரிந்து வந்துள்ளது..ஆகவே, இந்த மதம் உலகிலேயே மிகப் பழைய மதம் என்று அழைக்கப்படுகிறது. இந்து மதத்தோன்றலின்படி, இதனை ஒருவரை தோற்றுவித்ததாக கூற முடியாது..இந்து மதத்தின் முதல் தோன்றல், வரலாற்று கூற்றின்படி வேதகாலம் என்று அழைக்கப்படும் கி-மு 1900 முதல் கி-மு 1400 ஆம் ஆண்டு வரையான காலகட்டமாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்த கட்டமான கிமு 800 முதல் கிமு 200 வரை, இந்து மதத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஏனென்றால், வேத சமயம் மற்றும் இந்து சமயம் என இருந்த இவை பிரிந்து மேலும் இந்து சமயம் மகாவீரரின் ஜைன மதம் மற்றும் புத்தரின் புத்தமதம் என வளர துவங்கியது.. அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் குப்தர்கள் இந்து மதத்தினை சிறப்பாக பாதுகாத்து வந்தார்கள்.. இவர்களது காலத்தில் இந்த மதம் 6 பிரிவுகளாக பரிணாம விளக்கம் பெற்றது. அவை சாங்கியம்,யோகம், நியாயம், வைசேடிகம், வேதாந்தம் மற்றும் மீமாம்சம் போன்ற மையக்கொள்கைகள் ஆகும். இதே காலகட்டத்தில் தோன்றிய பக்தி இயக்கங்களின் தோன்றலின் காரணமாக, தனிக் கடவுள் கொள்கைகளுடன் சைவம், வைணவம் என்ற பிரிவுகள் தோன்றின. இதன் காலம் கிபி 650 முதல் கிபி 1,500 வரை என்று பாரம்பரிய இந்து மதம் வளர்ச்சி பெற்றது..இந்து மதம் கிபி 1200 முதல் கிபி1750 வரையிலான காலகட்டத்தில், இஸ்லாமியர்களின் ஆட்சியின்கீழ் இருந்தாலும் அதன் வளர்ச்சியை இக்காலத்தில் நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களால், தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம்,சைவ மற்றும் வைணவ சமய பக்தி மற்றும் இலக்கிய நூல்களின் வெளிப்பாடுகளால், இந்து மதம் இன்னும் தழைக்க பெற்றது. பெருமளவில், சமண மற்றும் பௌத்த சமயத்திற்கு மாறியவர்கள், மீண்டும் தாய் மதங்களுக்கு திரும்பினர்..பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் பக்தி இயக்கம் உச்சகட்டத்தை அடைந்தது.தமிழ்நாட்டில் புறச் சமயங்கள் பௌத்தமும் சமணமும் மறைந்து தமிழ் பக்தி இலக்கியங்கள் வளர்ச்சி அடைந்தது. மேலும், தமிழ்நாடெங்கும் சைவ வைணவ கோயில்கள் எழுப்பப்பட்டன..இஸ்லாமிய மதத்தில் இஸ்லாம் என்பது ஒரே இறைவனை கொள்கையாக் கொண்ட ஆபிரகாமிய மதமாகும்.. உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இந்த மதத்தை பின்பற்றுகின்றார்கள்.. இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 23 சதவீதமாகும் இஸ்லாம் கிறித்தவ மதத்திற்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய மதம் ஆக வளர்ந்து வரும் மதமாகும்.. இது இறைவனால் முகமது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான திருக்குர்ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது.. முகமது நபி என்பவர் கிபி 570 பிறந்து கிபி 632 இல் மரணமடைந்துள்ளார் இவர் மக்கா நகரை சேர்ந்தவர் அராபியத் தீபகற்பம் முழுமையும் இஸ்லாம் என்ற ஒரே கொள்கை சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர்.. இறப்பிற்கு பிறகான மறுமை வாழ்வை திருக்குர்ஆன் குறிக்கோளாக கொண்டது இறைவனை நம்புவது அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை இறை நம்பிக்கை இறை வணக்கம் நோன்பு கட்டாய பொருள் தானம் மெக்காவை நோக்கிய புனித பயணம் ஆகிய இந்த ஐந்தும் இஸ்லாமியர்களின் கட்டாயக் கடமைகள் ஆகும்..இஸ்லாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது..1. அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) 2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது(சல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல் படுத்தியவர்கள் (ஹதிஸ்)“கடவுள் ஒருவனே அவனே அல்லாஹ்.. அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை”என்பது இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கையாகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட வேறுபாடு காட்டாத ஒரு படர்க்கை சொல்லாகும். இது அரேபிய நாடோடி குழுக்கள் தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும் அல்லாஹ் ஒருவனே இருக்கிறான் படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்கு உரியது அவனுக்கு நிகராக துணையாகவும் யாரும் இல்லை.. இவைகளே, இஸ்லாமின் முக்கிய கோட்பாடுகள் ஆகும்..அடுத்து, கிறிஸ்துவ மதத்தில் கடவுள் என்ற பரம்பொருள் ஒரே இறைவன் கொள்கையை உடைய சமயமாக உள்ளது.. நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி,பைபிளின் புதிய ஏற்பாட்டின்படி செயல்படுகிறது.. கிறிஸ்தவர்கள், இயேசுவை மேசியா மற்றும் கிறிஸ்து என்றும் அடைமொழிகள் கொடுத்து அழைப்பதுண்டு.. உலகில் 2.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட உலகின் பெரிய சமயமாக இது கருதப்படுகிறது..கிறிஸ்தவம்,பல உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இதில், கத்தோலிக்க திருச்சபை மிகப் பெரியதாகும். கிறிஸ்தவம், கிபி முதலாம் நூற்றாண்டில் யூத மதத்தின் உட்பிரிவாக இருந்ததாலும், யூதர்கள் எதிர்பார்த்த மீட்பர். கிறிஸ்து என கிறிஸ்தவர்கள் நம்புவதாகும். யூத புனித நூலை பழைய ஏற்பாடு என்றும், பெயரில் பைபிளின் ஒரு பகுதியாக இருக்கின்றார்கள். யுதம் மற்றும் இஸ்லாம் போலவே கிறிஸ்தவமும் தன்னை அபிரகாம் வழிவந்த சமய நம்பிக்கையாக கொள்வதால் இது ஆபிரகாமிய சமயங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது..பௌத்தம் அல்லது பௌத்த சமயம் என்பது கௌதம புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமயமும் தத்துவமும் ஆகும்.பௌத்த மரபின்படி, புத்தர் ஆறாம் நான்காம் நூற்றாண்டுகளுக்கு இடையே இந்திய துணைக்கண்டத்தின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர். இந்த மதம் தற்போது இரண்டு பிரிவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன ஒன்று தேரவாத பௌத்தம் மற்றொன்று மகாயான பௌத்தம் இவற்றில், தேரவாதம், இலங்கை மற்றும் தென்கிழக்காசியாவில், கம்போடியா, லாவோஸ், , தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மகாயானம், சீனா, கொரியா, ஜப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்காசிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இவை தவிர, திபத்து மற்றும் மங்கோலியாவில் வஜ்ரயான பௌத்தம் என்ற மூன்றாவது வகை பௌத்தமதம் உள்ளது. உலகமெங்கும், தற்போது 350 மில்லியன் முதல் 1.6 பில்லியன் பௌத்தர்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.அனைத்தையும் உருவாக்கும், நிர்வாகிக்கும், அழிக்கும் குணங்களைக் கொண்ட ஒருமையை சக்தி போன்ற கடவுள் என்ற ஒன்று என்பதை புத்தர் மறுத்தார்.அவர் கூறியதாவது” என் அனுபவத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பிறவிகள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் கரும விதிகளை புரியக் கூடியவர்கள் அல்லது அனுபவங்களை பெற அல்லது அனுபவிக்கக் கூடியவர்கள். ஆனால், அவர்களும் கர்ம விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். புத்தர் கடவுள் இல்லை.அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். புத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை. மரியாதை செலுத்துகிறார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்..மேலே சொன்ன அனைத்து மதங்களிலும், நாம் காணக்கூடிய ஒரு உண்மை பொருள் என்னவென்றால், இந்து சமயம் மட்டுமே, மிகவும் தொன்மை வாய்ந்த மதமாக இருந்து வருகிறது என்பதனை எவராலும் மறுக்க இயலாது……..( இந்த புத்தகம் என்னால் எழுதி வெளியிடப்பட்டது..இந்து மதத்தின் பெருமைகளை விளக்கும் புத்தகம்..அன்பர்கள் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள 9176231194 என்ற எண்ணுக்கு வாட்ஸப் செய்யவும்)

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: