முகலிங்க மூர்த்தி
பகுதி 4

லிங்கத் திருமேனியில் சிவ முகம் இருப்பதை முகலிங்க மூர்த்தி என்கிறோம். இந்த மூர்த்தி 64 சிவ வடிவங்கள் ஒன்றாகும். முக லிங்கேஸ்வரர் என்றும் இவரை அழைப்பார்கள்.
இந்த லிங்க மூர்த்தியில் ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என நான்கு வகைப்படும் உண்டு.
1) ஆட்யம் என்பது 1001 லிங்கங்களைக் கொண்டது.
2) அநாட்யம் என்பது முகம் இல்லாதது.
3) சுரேட்டியம் என்பது 108 லிங்கங்களைக் கொண்டது.
4) சர்வசமம்/சர்வசம் என்பது ஐந்து முகம் கொண்டது. அதாவது ஈசானம், தத்புருடம், அகோரகம், சத்யோஜாதம், மற்றும் வாமம் என ஐந்து முகங்கள்.
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் மூன்று முக லிங்கம் உள்ளது. காளஹஸ்தியில் நான்கு முகம் கொண்ட லிங்கம் உள்ளது. ஐந்து முகம் கொண்ட லிங்கம் நேபாளத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வசம் என்ற வகையில், ஒரு முகம், இரு முகம், மும் முகம், நான்முகம், ஐந்து முகம் என ஐந்து வகைகள் உள்ளன.
திருவக்கரை, கச்சபேஸ்வரர் மற்றும் கொட்டையூர் என்ற மூன்று தலங்களில் இந்த திருமூர்த்தியை தரிசிக்கலாம்.
தொடரும்..