பகுதி 4
இந்தத் தொடரில் பரந்தாமனின் கல்யாண குணங்களை பற்றி பதிவு செய்து வருகின்றேன். சென்ற பதிவில் அவருடைய கல்யாண குணமான சௌசீல்யம் என்பது பற்றி குறிப்பிட்டிருந்தேன். தற்போது அவரது மற்றொரு கல்யாண குணமான”மார்தவம்” என்பது பற்றி பார்க்கலாம்.
தன்னை அண்டி வந்தவர்கள் தன்னை விட்டுப் பிரிந்தால் அந்த எம்பெருமான் மகாவிஷ்ணு அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார். மிகவும் வாடி விடுவார்.. இந்த குணமே மார்தவம் எனப்படுகிறது.
பக்தர்கள் தன்னை விட்டுப் பிரிந்து விட்டால் அவளுக்கு என்ன நேர்ந்துவிடுமோ என்று காரணம் என்று சந்தேகிப்பதும் இதற்கு காரணம். இத்தகைய மென்மைத் தன்மை கொண்டவர் தான் அந்த நாராயணன்.
பக்தர்களின் பிரிவை பொறுத்துக் கொள்ள முடியாதவன் அவன். ஆதலால் நான் அவரை பற்றிக்கொண்டால் அவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.

இலங்கையில் ராவணனை வெற்றி கொண்டு அவனை அழித்த பின் திரும்புவதற்கு தயாராக இருந்த நேரத்தில் விபீஷணன் ராமனைப் பார்த்து” நீங்கள் அடைந்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 14 வருடங்களாக ஜடை தரித்துக்கொண்டு சரியாக உண்ணாமலும் உறங்காமலும் இருந்திருக்கிறீர்கள். ஆகவே இத்தனை காலம் இப்படி இருந்தது போதும்! இலங்கையிலேயே மரவுரிகளை களைந்து விட்டு, வாசனை நீரில் நீராடி, விருந்து சாப்பிட்டுவிட்டு அதற்கு பிரயோகிக்க செல்லலாமே!’என்று வேண்டினார்.
அதற்கு மறுமொழியாக ராமர்”எனக்கு இப்போது ஸ்நாநமோ, ஆடை அணிகலன்களோ, விருந்தோ தேவை இல்லை. என்னை விட்டு பிரிந்து துன்பத்தை அனுபவித்துக் கொண்டு நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் எனது தம்பி பரதன். அப்படிப்பட்டவனை காத்திருக்க செய்துவிட்டு நான் இங்கு சுகம் அனுபவிப்பது சரியல்ல. ஆகவே நான் உடனே அயோத்திக்கு செல்ல வேண்டும்”என்று கூறுகிறார்.
இந்த ஒரு உதாரணம் போதாதா? பகவானின் கல்யாண குணத்தில் ஒன்றான மார்தவம் என்பதனை நாம் புரிந்து கொள்ள.. இதிலிருந்து பகவானுக்கு எனது பத்தினி புரிந்துகொள்ள எவ்வளவு வருத்தம் ஏற்படுகிறது என்பதனை நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.
தொடரும்