தொண்டை நாட்டில், திருவொற்றியூர் என்னும் தலத்தில், செக்கு தொழிலை உடைய வணிகர் மரபில் தோன்றியவர் கலியர். பெரும் செல்வந்தரான இவர் சிவபெருமானுக்கு உரிய தொண்டில் ஈடுபட்டு திருவெற்றியூர் திருக்கோவிலில் உள்ளேயும் வெளியேயும் திருவிளக்கு இடும் திருத்தொண்டினை செய்துவந்தார்.
இவரது உண்மை தொண்டின் பெருமையைப் புலப்படுத்த சிவபெருமான் திருவுளம் கொண்டார். அவரது திருவுளத்தால், கலியன் இடம் இருந்த செல்வம் அனைத்தும் குறைய வறுமை நிலை உண்டாயிற்று. அந்த நிலையிலும் தமது மரபினர் உள்ளார் தரம் எண்ணையை வாங்கி விற்று அதனால் கிடைத்த பொருளால் தாம் செய்து வந்த திருவிளக்கு பணியை இடையறாது செய்து வந்தார். பின்னர் அதற்கும் குந்தகம் வந்தது. எண்ணெய் தருவார் கொடுக்காததினால் கூலிக்கு செக்காடி அந்தக் கூலி கொண்டு விளக்கு எரித்தார். வேலையாட்கள் பெருகி தம்மை கூலிக்கு அமர்த்திக் கொள்வார் இல்லாமையால் வீடு முதலிய பொருட்களை விற்று விளக்கெரித்தார். முடிவில் தனது மனைவியாரை விற்பதற்கு விலை கூறி வாங்குவார்கள் யாருமில்லாததால் மனம் தளர்ந்தார். திருவிளக்கு ஏற்றும் வேலையில் திருவற்றியூர் திருக்கோயிலை அடைந்து”திருவிளக்குப் பணி தடைபட்டால் இறந்து விடுவேன்”எனத் துணிந்து எண்ணெய்க்கு ஈடாக தமது உதிரத்தையே நிறைத்ததற்கு கருவி கொண்டு தமது கவிதை அரிந்து கொண்டார். அப்போது திருவெற்றியூர் பெருமானது அருள் கரமானது அரியும் அவரது கரத்தைத் தடுத்து நிறுத்தியது.

எம்பெருமானாகிய சிவபெருமான் ரிஷபத்தின் மேல் தோன்றி அருள உடனே அவரது கழுத்தில் இருந்த காயம் நீங்கி, தனது தலை மேல் கைகுவித்து வணங்கி நின்றார். சிவபெருமான் அவரை “தனது பொற்புடைய சிவகிரியில் பொலித்திருக்க”என்று அருள் புரிந்தார்.
இவரது அவதார ஸ்தலமும் முக்தி ஸ்தலமும் திருவொற்றியூர் ஆகும். இவரது பூஜை நாள் ஆடி கேட்டை.
இவர் “கலியநாயனார்” என்ற திருப்பெயருடன் 64 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.