பகுதி 1
முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்து கடவுளான சிவன் பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார்.. சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறியை வெளியீட அரிதாகிய வாயுபகவான் சரவண பொய்கையில் விட்டார்.. அந்த தீ துண்டங்கள் ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தார்கள்.. கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்ததனால் கார்த்திகேயன் என்ற பெயர் பெற்றார்.. அந்த ஆறு குழந்தைகளையும் அன்னையான பார்வதி ஒருசேர அணைக்கும் போது ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன.
தமிழர்களின் குறிஞ்சி நிலத் தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
பண்டைய காலத்தில் இந்து சமயத்தில் சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் மற்றும் சௌரம் என்று ஆறு பிரிவுகள் இருந்தன.. இதில் கௌமாரம் மற்றும் காணாபத்தியம் இரண்டு பிரிவுகளும் சைவத்துடன் இணைந்து விட்டன..
“முருகு”என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்.. ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும். மெல்லின, வல்லின, இடையின மெய் எழுத்துகளுடன்’உ’என்னும் உயிர் எழுத்து ஒன்றுடன் சேர்ந்து முருகு (ம்+உ,ர்+உ,க்+உ=முருகு) என்றதனால் இந்த மூன்றும் இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற மூன்றைக் குறிக்கும்..
முருகப்பெருமானுக்கு வேறு பெயர்களும் உண்டு. அவை:
1) சேயோன்-சேய் என்றால் குழந்தை. முருகன் குழந்தையாக காட்சி அளிப்பதால் இந்த பெயர்.
2) அயிலவன்-வேற்படை உடையவன்
3) ஆறுமுகன்-ஆறு முகங்களை உடையவன்
4) முருகன்-அழகுடையவன்
5) குமரன்-குமரப் பருவத்தில் கடவுளாக எழுந்தருளி இருப்பவர்.
6) குகன்-அன்பர்களின் இதயம் ஆகிய குகையில் எழுந்தருளியிருப்பவர்.
7) காங்கேயன்-கங்கையால் தாங்கப் பட்டவன் அல்லது கங்கையின் மகன் என்றும் பொருள்
8) வேலூரவன்- வள்ளியை மணந்ததாலும், அசுரர்களை அழிக்க முதன்முதலில் வேல்கொண்டு தோன்றியதாகும் வேலூர் என பெயர் பெற்றார்.. அந்த இடம்தான் தற்போது தமிழகத்தில் உள்ள வேலூர் ஆகும்.வேலூரைச் சுற்றிலும் குன்றுகளும் குமரன் கோயில் களாகவே காணப்படுகின்றன.. வேலூர் அருகிலுள்ள வள்ளிமலை என்ற இடத்தில் தான் வள்ளியை முருகன் மணந்தார்.
9) சரவணன்-சரவண பொய்கையில் தோன்றியவர்
10) சேனாதிபதி-சேனைகளின் தலைவன்
11) வேலன்-வேலினை ஏந்தியவன்
12) சுவாமிநாதன்-குருவாக இருந்து தந்தைக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்தவர்
13) கந்தன்-சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி பொற்றாமரை குளத்தில் உள்ள தாமரை மலரின் நடுவில் உள்ள கந்தத்தில் பட்டு முருகன் குழந்தையாக தோன்றியதால் கந்தக மூலவன் அல்லது கந்தன் என்று பெயர் பெற்றார்.
14)கார்த்திகேயன்-கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் இந்தப் பெயர்
15) சண்முகன்-ஆறு முகங்களை ஒன்றாக அன்னை பராசக்தி சேர்த்து அழகு முகமாக ஆக்கியதால் சண்முகம் என்று பெயர்
16) தண்டாயுதபாணி-தண்டாயுதத்தை கையில் ஏந்தியதனால் இந்தப் பெயர்.
17) கதிர்காமன்-வலியை வேடுவர் குலத்தில் இருந்து காதல் திருமணம் செய்து கொள்ளும்போது அழகிய காமதேவன் ஆகவும் முருகன் பரமசிவன் நெற்றிக்கண்ணில் தீக்கதிராகப் பிறந்தவர் என்பதனால் கதிரவனும் சேர்ந்து கதிர்காமன் ஆயிற்று.. இந்தப் பெயரில்தான் வள்ளியை காந்தர்வ மணம் செய்து கொள்வதால் இந்தப் பெயர். இலங்கையில் உள்ள கதிர்காமத்தில் முருகப்பெருமான் இப்ப இரவு வணங்கப்படுகிறார்.
18) முத்து வேலன்-எட்டுக்குடியில் தெய்வானை (அஞ்சுகவல்லி) மற்றும் வள்ளி(கோமளவல்லி) உடனுறைய எட்டுக்குடி முத்துவேலர் சுவாமி எட்டு திசையும் காப்பார் என்பதைக் குறிக்கிறது.
19) வடிவேலன்-வேலை ஏந்திய அழகிய வடிவினைக் கொண்டதால் இந்தப் பெயர்..
20) சுப்பிரமணியன்-மேலான பிரம்மத்தின் பொருளாக இருப்பவர்.
21) மயில்வாகனன்-மயிலைத் தனது வாகனமாக கொண்டவர்.
22) ஆறுபடை வீடு உடையோன்-முருகனின் சாதனை புரிந்த இடங்களை கோவிலாக வழிபடுகிறோம்.. இந்தப் பெயர் மருவி ஆறுபடையப்பன் என்று ஆயிற்று.
23) வள்ளல் பெருமாள்-வள்ளியை மணந்ததாலும், தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருளை கொடையாக வாரி வழங்குவதனாலும் இந்தப் பெயர் உண்டாயிற்று.
24) சோமாஸ்கந்தர்-சோமன் என்றால் நிலா என்றும் அல்லது மதுரையம்பதி சோமசுந்தரக் கடவுளின் மகன் என்பதனால் இந்த பெயர்.
25)முத்தையன்-முத்துக்குமாரசுவாமி, முத்துவேலர் சுவாமி ஆகிய பெயர்களில் சுருக்கமான பெயர் இதுவாகும்.
26) சேந்தன்-தன்னை வணங்கும் பக்தர்களை இன வேறுபாடின்றி ஒன்றிணைத்து சேர்த்து வைப்பதால் சேந்தன் என்ற பெயர்.
27) விசாகன்-விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என்ற பெயர்.
28)சுரேசன்-வடமாநிலங்களில் அழகுக்கு சுரேசன் என்று பொருள்.. முருகன் அழகுக்கு அதிபதி என்பதனால் இந்த பெயர் ஏற்பட்டது.
29) செவ்வேல்-சேவல் வேல் என்பதை மருவி காலப்போக்கில் செவ்வேல் என மாறியது.
30) கடம்பன்-சிவகணங்களில் ஒருவரான கடம்பனை முருகன் தனது உதவியாளராக சேர்த்து கொண்டதனால் இந்தப் பெயர்.
31)சிவகுமரன்-சிவபெருமானின் திருமகன்.
32) வேலாயுதன்-வேலை ஆயுதமாகக் கொண்டு உள்ளதால் இந்தப் பெயர்
33) ஆண்டியப்பன்-ஞானப்பழம் வேண்டியும் கிடைக்காமல் ஏமாந்த நிலையில் கோவண ஆண்டியாய் நின்றவன்.
34) கந்தசாமி-தாமரை மலரின் கந்தகத்தில் இருந்து தோன்றிய கடவுள் என்பதனால் கந்தசாமி என்ற பெயர்.
35) செந்தில்நாதன்-சிந்தனை சிற்பி, சிந்தனை நாதன் என்னும் பெயர்களை மருவி செந்தில்நாதன் ஆக மாறியது. சூரபத்மனை தனது உயர் சிந்தனையால் அழித்ததால் இப்பெயர் ஏற்பட்டது. மேலும் திருச்செந்தூர் என்னும் ஊரில் சூரபத்மனை அழித்து அந்த மண் அவனது ரத்தத்தினால் சிவந்ததனால் திருச்செந்தூர் என்று ஆயிற்று..அந்த ஊரின் பெயரில் செந்தில்நாதன் என்று அழைக்கப்படுகிறார்.
36) வேந்தன்-மலையரசன் மலை வேந்தன்.
இவ்வாறு முருகன் பெயர்கள் அனைத்திற்குமே ஒரு அர்த்தம் ஒளிந்துள்ளது..
தொடரும்