ஜகத்காரணி (அத்தியாயம் 18)

அம்பிகையின் 51 சக்தி பீடங்களின் வரிசையில் ஆதி சக்தி பீடங்களான நான்கு சக்தி பீடங்கள் பற்றி சென்ற பதிவில் தெரிவித்திருந்தேன்.. அதில் ஒன்றாக ஒடிசாவில் உள்ள விமலா தேவி சன்னதி பற்றி தெரிவித்திருந்தேன்.. தற்போது இந்தப் பதிவில் ஒடிசாவில் உள்ள மற்றொரு ஆதிசக்தி பீடத்தின் கோவிலான தாராதாரிணி சக்தி பீடக் கோவில் பற்றி தெரிவிக்க உள்ளேன்..

தாராதாரிணி சக்தி பீடக் கோவில் ஒடிசா மாநிலத்தின் பெர்காம்பூர் நகரத்திலிருந்து நாற்பது மைல் தொலைவில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தின் புருஷோத்தம்பூரில் ஓடும் ருஷிகுல்ய ஆற்றின் அருகில் சுமார் 700 அடி உயரமான மலை மீது உள்ளது.. இந்த ஆலயத்திற்கு நடந்து செல்ல வேண்டுமென்றால் 999 படிக்கட்டுகள் ஏற வேண்டும்.. கடைசி படியான ஆயிரமாவது படி ஏறினால் ஆலயத்தை அடையலாம்.. மாற்றாக, வாகனத்தின் மூலமாகவும் செல்ல முடியும்.. ஒவ்வொரு படியை கடக்கும் பொழுதும் தேவியின் ஸ்லோகமாக “தாராதாரிணி நமஹ”எனக் கூறிக்கொண்டு நடப்பதினால் பலன் அதிகம் கிடைக்கும் என்பது ஐதீகம்..

இனி கோவிலின் வரலாறு பற்றி பார்ப்போம்..

இந்த ஆலயத்தில் இரண்டு தேவிகள் உள்ளனர்.. பெரியவளுடைய பெயர் தாரா, சிறியவள் தாரிணி.. கல்லில் முகம் போன்று செதுக்கப்பட்டுள்ள இந்த சிலைகளுக்கு அழகு ஒரு அணிகலன்களை அணிவித்து பெண் ரூபமாக முதலில் அங்கு குடியேறிய ஆதிவாசிகள் வணங்கி வந்தனர்.. நாளடைவில் இந்தக் கோயில் சக்தி பீடம் என்று கண்டறியப்பட்டதால் அனைவரும் சென்று பூஜிக்கும் ஆலயமாக மாறியது.. பாறையில் உள்ள சிலைகளை போலவே பித்தளையில் இது தேவிகள் செய்யப்பட்டு, பூஜிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.. மூலவர் கற்சிலை என்பதனால் பழுதடைந்து விடக்கூடாது என்ற காரணத்தினால் ஆலய நுழைவாயிலில் உள்ள அந்த மாற்று சிலைகளுக்கு மட்டுமே பூஜைகள் செய்ய அனுமதி உள்ளது..

இந்தக் கோவிலைப் பற்றிய தகவல் காளிகா புராணத்தில் உள்ளது.. அதில் சக்தியின் மார்பகங்கள் விழுந்த சக்தி பீடமாக கூறப்படுகிறது.. அதில்”ஸ்தன கண்ட ச்ச தாரிணி”என்று இக்கோவில் குறிப்பிடப்படுகிறது.. ஆகவே இந்த கோயில் ஆதி சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது..

ஒடிசாவின் தெற்குப் புற ஒரியா பகுதிகளில் தாராதாரிணி கோவில் பலருக்கும் குல தெய்வமாக உள்ளது.. எவரையும் கர்ப்பக் கிரகத்திற்குள் அனுமதிப்பதில்லை.. ஒரு காலத்தில் இந்த ஆலயம் உள்ள இடத்தின் பக்கத்தில் ஓடும் ருஷிகுல்யா என்ற நதியில் பயணம் செய்து வாணிபம் செய்தவர்கள், மீன் பிடிப்பவர்கள் என நதியை நம்பி வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள் இந்த தேவிகளை வழிபட்ட பின் தங்களது பயணத்தை துவக்குவார்களாம்..

மார்ச் -ஏப்ரல் மாதங்களில் நடக்கும் விழா காலத்தில் 5 முதல் 6 லட்சம் மக்கள் வரை தரிசனம் செய்ய வருகிறார்கள்.. இருபதாம் நூற்றாண்டு களுக்கு முன் சில சமயங்களில் இந்த ஆலயத்தில் பலிகள் தரப்பட்டு வந்தது.. அதை தற்போது தடை செய்து விட்டார்களாம்.. ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தி தினத்தன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.. ஏனெனில் தந்திர சாதகம் செய்ய அது நல்ல நாளாக கருதப்படுகிறது.. அந்த ஆலயத்தில் சென்று தலைமுடியை காணிக்கையாக செலுத்தும் பழக்கம் உள்ளது..

இந்த இரண்டு தேவைகளான பீடம் அங்கு வந்ததின் காரணம் வரலாற்று உண்மைகள் மூலம் தெரியவில்லை என்றாலும் இந்த ஆலயத்தை சுற்றி மூன்று தல வரலாறுகள் உள்ளன..

முதல் தல வரலாறு: சக்தி பீட வரிசையில் சதியின் இரு மார்பகங்களும் இந்த இடத்தில் விழுந்த காரணத்தினால் 2 தேவிகளாக தாரா-தாரிணி ஆகிய இருவரும் அங்கு எழுந்தருளினார்களாம்..

இரண்டாவது தல வரலாற்றின்படி அங்கிருந்த ஒரு கிராமத்தில் வீடு இடம் பெண்கள் அதிசயம் நிகழ்த்தி வந்தார்கள்.. கிராம மக்களின் பல துயரங்களை நோய் நொடிகளை தீர்த்து வைத்தார்கள்.. அவர்களுடைய தாய் தந்தை யார் எவர் என எவருக்கும் தெரியவில்லை என்பதனால் சிறு வயது முதலே ஒரு பிராமணர் அவர்களை போற்றி வளர்த்து வந்தார்.. வளர்ந்து வந்த அவர்கள் ஒரு காலகட்டத்தில் தமிழ் இருவருக்கும் அந்த இடத்தில் ஆலயம் அமைக்குமாறு அவரிடம் கூறிவிட்டு மறைந்து போனார்கள். அதனால் அந்த பிராமணர் போலும் அந்த ஆலயம் அங்கு எழுந்தது..

மூன்றாவது தல வரலாற்றின்படி அந்த தேவிகள் இருவரும் புத்த மதத்தினர் வணங்கி வந்த சக்தி தேவதைகள்.. ஒரு காலகட்டத்தில், அதாவது மகாமாயா புத்தப் பிரிவினர் தந்திரக் கலைகளை கற்றறியத் துவங்கிய காலகட்டத்தில் அந்த தேவிகளை ஆராதித்து தந்திரக் கலைகளை வளர்த்துக் கொண்டனர்.. அதனால் தான் இந்த ஆலயத்தில் ஒரு சிறிய புத்தர் சிலை தியானம் செய்யும் கோலத்தில் உள்ளது என இந்த கதைக்கான காரணம் கூறப்படுகின்றது.. ஆனால் தாரா தேவியின் தோற்றம் இந்து மதத்திலேயே நிகழ்ந்தது.. புத்தமதத்தில் இந்துமத கடவுள்களான ஸ்ரீதேவி, வைஸ்ரவணன் போன்றோர் இணைக்கப்பட்டது போல தாரா தேவி வழிபாடும் புகுத்தப்பட்டது.. இத்தகைய காரணங்களால் இந்த கோயில் புத்த மதத்தினருக்கும் வழிபாட்டு தலமாக இருக்கிறது..

இந்தக் கோயில் பெர்ஹாம்பூரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. பெர்ஹாம்பூரிலிருந்து பேருந்து சேவைகள் உள்ளன..

தொடரும்

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: