அத்தியாயம் 2
சிவபெருமான் அருவம், அருஉருவம், உருவம் என மூன்று வடிவங்களில் உள்ளார்.. அருவுருவமாக லிங்கமும், மகேஸ்வர மூர்த்தங்கள் மற்றும் சிவ உருவத் திருமேனிகள் ஆகியவை உருவத்திருமேனி ஆகவும் சைவர்களால் வழிபடுகின்றனர்..
தடத்த நிலையில் ஈசன் கொள்ளும் 64 வடிவங்கள் ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளன.. அவற்றில் சிறப்பான 25 சிவ மூர்த்தங்கள் மகேஸ்வர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன..
64 சிவவடிவங்கள் என்பவை சைவர்களின் இறைவனான சிவபெருமானின் வடிவங்கள்.. இதனை “சதுஷஷ்தி மூர்த்திகள்” என்பார்கள்.
அஷ்டாஷ்ட விக்ரக லீலை எனும் கேசி முனிவரின் நூலில் சிவபெருமானின் 64 வடிவங்களும், அந்த வடிவங்களின் மூலம் அடியார்களுக்கு சிவபெருமான் அருளியதைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.. ஈக்காடு ரத்தினவேலு முதலியாரின் சிவபராக்கிரமம் என்ற தமிழ் நூலிலும் இந்த 64 வடிவங்கள் கூறப்பட்டுள்ளன..
சதாசிவ வடிவத்தின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், மற்றும் சத்தியோசாதம் ஆகிய ஐந்து முகங்களில் இருந்து முகத்திற்கு ஐந்தாக 25 வடிவங்கள் தோன்றியதாகக் கூறப்படுகின்றது.. இவை மகேஸ்வர மூர்த்தங்கள் என்று அழைக்கப்பட்டன..
இந்த 64 வடிவங்களையும் பற்றி இனி நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம்..
1). இலிங்க மூர்த்தி
லிங்க மூர்த்தி என்பது மகேஸ்வர்தத்தில் ஒன்றாகும்.. இது உருவத்திருமேனி என்றாகும் அருவுருவம் வடிவ சிவ மூர்த்தமாகும்..
இலிங்கம், லிங்கம் அல்லது சிவலிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவனைக் குறிக்கும் வடிவம் ஆகும்.. வடிவமுடைய, வடிவமற்ற இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம் உருவம் அருவுருவம் என்ற மூன்று நிலைகளில் சிவபெருமான் வழிபடப்படுகிறார்.. இவற்றுள் சிவலிங்கம் அருவுருவ நிலையாகும்.. இதன் மூலம் பற்றிய கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது.. சிந்து சமவெளி நாகரீக காலத்தில் இவ்வழிபாடு நிலை இருக்கக் கூடுமென ஆதாரங்கள் கிடைத்துள்ளன..
வாமன் சிவ்ராம் ஆப்தேயின் சமஸ்கிருத அகராதி ஏழு பொருள்களை லிங்கம் என்பதற்கு கொடுத்துள்ளது.. இவற்றுள் லிங்கம் பல வகைப்படும்.. முகலிங்கம், சகஸ்ரலிங்கம், தாராலிங்கம், சுயம்புலிங்கம் என்று வகைப்படும்..”லிம்”என்பது உயிர்களின் தோற்றத்தை குறிக்கும்..”கம்”என்பது அவற்றின் ஒடுக்கத்தை குறிக்கும் சொல்லாகும்.. உயிர்கள் தோன்றவும், ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இந்த பெயர் தோன்றியது..
லிங்க வழிபாட்டின் தோற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் தரப்படுகின்றன.. ஒரு தொன்மை கதையில் சொல்லப்படுவது யாதெனில், ஒருமுறை பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது என்றும், அப்போது அங்கே சிவபெருமான் தோன்றி, அடியையும் முடியையும் யார் முதலில் காண்கிறார்களோ அவர்களே பெரியவர் என்று கூறியதாக கூறப்படுகிறது.. இருவரும் சம்மதித்து நிற்க, சிவபெருமான் நீண்ட தீயாக மாறினார்.. அவருடைய முடியை காண பிரம்மா அன்னப் பறவை வடிவம் எடுத்து மேலே பறந்து சென்றார்.. திருமால் அடியைக் காண வராக அவதாரமெடுத்து பூமியை தோண்டி கொண்டு சென்றார்.. இருவராலும் கண்டுபிடிக்க இயலாத காரணத்தினால் தோல்வியை ஒப்புக் கொண்டனர். இந்த சிவபெருமான் வடிவத்தை லிங்கோத்பவம் என்று கூறுகின்றார்கள்..
லிங்கம் வானத்தைக் குறைக்கும்.. ஆ விடை பூமியைக் குறிக்கும். விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆக சிவபெருமான் எழுந்தருளியது இதனை குறிக்கின்றது.. மற்றொரு கருத்தின்படி ஆவுடை குண்டத்தைக் குறிக்கும்; அதில் எரியும் நெருப்பு லிங்கமாகும்.. காரணமாகவே சிவன் செந்தழல் வண்ணன் என்று அழைக்கப்படுகின்றார்.. குண்டம் போன்ற ஆவுடை உருவத்தையும், சிதறல் போற்ற ருத்ர பாகம் அருவுருவத்தையும் குறிக்கின்றது.. இதுவே சிவனின் சொரூபம் என கூறுகின்றார்கள்..
மற்றொரு கருத்தின்படி லிங்கம் ஆண் வடிவம்,பெண் வடிவம் என்ற இரு வடிவங்கள் இணைந்தது என்றும், இலிங்கத்தின் தண்டு போன்ற தோற்றம் ஆண் வடிவம் என்றும், ஆவுடையார் எனப்படும் நண்பா காதினுள் இந்த ஆண் வடிவம் வைக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது..
இதில் ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது.. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும்.. நடுவில் உள்ளது விஷ்ணு பாகம்.. அடிப்பகுதி பிரம்ம பாகம்.. ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் ருத்ர பாகம் மட்டுமே கண்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கும்.. உத்திர பாகத்தின் மீது நீர் படும்படியாக தாரா பாத்திரம் அமைக்கப்படுகிறது.. வெப்பம் குறைவான காலங்களில் நாகாபரணம் சூட்டப்படுகிறது.. ஆவுடையார் என்று அழைக்கப்படும் பாகம் ஆனது பெண் வடிவமாகும். பாகம் என்று பெயர்..
சிவபெருமான் சதாசிவமூர்த்தி தோற்றத்தில் தனது ஐந்து முகங்களில் இருந்து ஐந்து நிமிடங்களை தோற்றுவித்தார்.. லிங்கங்கள் என அழைக்கப்படுகின்றன.. அவையாவன: 1) சிவ சதாக்கியம் 2) அமூர்த்தி சதாக்கியம் 3) மூர்த்தி சதாக்கியம் 4) கர்த்திரு சதாக்கியம் 5) கன்ம சதாக்கியம்..
இவற்றில் கன்ம சதாக்கியம் ஆகிய பீடமும், லிங்க வடிவமும் இணைந்து வழிபட்டவர்களால் பல பெயர்களில் அழைக்கப்பட்டன.. சுயம்புலிங்கம், தேவி லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், ராட்சத லிங்கம், அசுர லிங்கம், மானுட லிங்கம்..
இவை தவிர பரார்த்த லிங்கம், சூக்ஷும லிங்கம், ஆன்மார்த்த லிங்கம், அப்பு லிங்கம், தேயு லிங்கம், ஆகாச லிங்கம், வாயு லிங்கம், அக்னிலிங்கம் என்று எண்ணற்ற லிங்கங்கள் உள்ளன..
தொடரும்…