சென்ற பதிவில் பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் 10 கல்யாண குணங்களைப் பற்றி பார்த்தோம்.. இந்தப் பதிவில் மேலும் அவனுடைய சில நல்ல குணங்களைப் பற்றி பார்க்கலாம்..
11) சாதுர்யம்
பகைவரையும் நண்பராக ஆக்கிக் கொள்ளும் சாமர்த்தியம்..
12)ஸ்தைர்யம்
அடியார்களை எந்த நிலையிலும் கைவிடாத உறுதி..
13) தைரியம்
பகைவர்கள் எத்தனை வலிமை கொண்டவர்களாக இருந்தபோதிலும் அவர்களை அழிக்கின்ற வல்லமை
14) ஷௌர்யம்
பகைவர்கள் வலிமையுடன் இருப்பதாக அறிந்தும் கூட அதைப்பற்றி கலங்காமல் மற்றொரு துணையை சேர்த்துக் கொள்ளாமல் தனி ஒருவனாகவே அவர்களுக்கிடையே புகுந்து வரும் குணம்
15) பராக்கிரமம்
போர்க்களத்தில் பயமோ கோபமோ கொள்ளாமல் விளையாட்டாகவே பகைவர்களை அழிக்கும் ஆற்றல்
16) சத்ய காமம்
பேராசை எதுவும் இன்றி விரும்புகின்ற அத்தனை பேறுகளையும் சுய முயற்சியால் குறைவில்லாமல் பெற்று நிறைவாக இருக்கும் குணம்..
17) சத்ய சங்கல்பம்
எதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதை தடையில்லாமல் செய்து முடிக்கும் குணம்
18)க்ருதித்வம்
அடியவர்களின் நன்மைக்காக இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பது..
19)க்ருதக்ஞத்வம்
அடியார்கள் மிகச்சிறிய நன்மை செய்தாலும் அதனை எந்த காலத்திலும் மறவாமல் இருப்பது..
20) சௌலப்யம்
தான் மிகுந்த உயர் நிலையில் உள்ள போதும் அடியார்களிடம் சிறியோர்க்கும் எளியவனாக அடக்கம் காட்டி எவரும் தன்னை நேரடியாக அனுப்பும்படி எளிமையாக இருக்கும் குணம்..
மேற்கூறிய 20 கல்யாண குணங்களைக் கொண்ட அந்த பரந்தாமன் குணத்தில் உயர்வர உயர்நலம் கொண்டவன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..
இனி அடுத்த பதிவுகளில் மேற்சொன்ன கல்யாண குணங்களை ஒவ்வொன்றாக சற்று விரிவாக பார்க்கலாம்..
தொடரும்