சென்ற பதிவின் இறுதியில் ஆதிசக்தி பீடங்கள், மகா சக்தி பீடங்கள் மற்றும் நவ சக்தி பீடங்கள் ஆகியன பற்றி தெரிவிப்பதாக கூறியிருந்தேன்.. அதன் தொடக்கமாக இன்றைய பதிவில் ஆதி சக்தி பீடங்கள் பற்றி விவரிக்கிறேன்..
சக்தி பீடங்கள் என்பவை ஆதிசக்தியின் ரூபமான, சதி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்களாகும்.. இவற்றில் 51 சக்தி பீடங்கள், அட்சர சக்தி பீடங்கள் என்றும் 18 சக்தி பீடங்கள் மகாசக்தி பீடங்கள் என்றும், நான்கு சக்தி பீடங்கள் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அறியப்படுகின்றன. சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க இயலாதவர்கள், ஆதி சக்தி பீடங்கள் நான்கையாவது தரிசிக்கவேண்டும் என்பது நியதி..
இந்த நான்கு சக்தி பீடங்கள் எவை என்றால்:
1) அசாமின் கவுகாத்தியில் உள்ள காமாக்கியா கோவில்.
2) கல்கத்தாவின் காளி கோவில்.
3) ஒடிசாவின் பெர்ஹாம்பூரில் உள்ள தாராதாரிணி சக்தி பீடக் கோவில் மற்றும்,
4) ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோவில் வளாகத்தில் உள்ள விமலாதேவி சன்னதி ஆகியனவாகும்..
காளிகா புராணத்தில் உள்ள ஆதி சக்தி பீடங்கள் பற்றிய ஸ்தோத்திரம்:
“பிமலா பாத கண்டச்ச,ஸ்தன கண்டச்ச தாரிணி
காமாக்ஷ்யா யோனி கண்டச்ச, முக்க கண்டச்ச காளிகா
அங்க பிரத்யங்க ஸங்கேன விஷ்ணு சக்ர க்ஷைதா நச்சு”
மேலே குறிப்பிட்டுள்ள 4ஆதி சக்தி பீடங்கள் பற்றிய ஸ்தோத்திரம் இது..
1)ஓடிஸா பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் அமைந்துள்ள விமலா தேவி கோவில்..
அன்னை சக்தியின் உடல் கூறுகளில் நாபி அதாவது தொப்புள்கொடி அல்லது வயிற்றின் மூன்றாவது மடிப்பு விழுந்த இடமாக பூரி ஜெகநாதர் கோவில் வளாகத்தில் உள்ள விமலாதேவி சன்னதி கருதப்படுகிறது..
ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோவில் வளாகத்தில் தென்மேற்கு மூலையில் ரோகிணி குண்டு அருகே விமலாதேவி சன்னதி உள்ளது.. இந்த புகழ்பெற்ற பூரி தலத்தில் முதன்முதலில் குடியேறியவர் அன்னை விமலை ஆகும்.. இந்தத் தலத்தில் ஜெகந்நாதர் குடி கொள்ள விரும்பினார்.க்ஷ அப்போது இந்த தலத்தில் ஜெகநாதன் வரவேண்டுமானால் ஒரு நிபந்தனைக்கு உட்பட்டு வரவேண்டும் என்றார் விமலை.. அதன்படி எந்த ஒரு நிவேதனப் பொருளும், முதலில் விமலைக்கு வழங்கப்பட வேண்டும் என்பது வழக்கமாயிற்று.. மேலும் “துர்காஷ்டமி” அன்று ஜெகநாதன் நள்ளிரவில் பள்ளி கொண்ட பின்பு, இந்த பீடத்தில் ஆடு பலியிடப்படும்..அதன் பின்னர், ரத்தக்கரை உடனே கழுவப்பட்டு, அந்த பலியின் மிச்சங்கள், பின் வாசல் கதவு வழியாக வெளியேற்றப்படும்.. அதன் பின்னர் கோயில் சுத்தம் செய்யப்படுவதும் இங்கே வழக்கமானது..
இந்த தலத்தில் வரலாற்று அதிசயங்கள் பல நிகழ்த்திக் காட்டினார் அன்னை விமலை.. இன்றும், பூரி ஜெகநாதனை தரிசிக்க வரும் பக்தர்கள், அன்னையை வணங்கி, தங்கள் மனதிலுள்ள குறைகள் நீங்க மனபாரம் அகன்று அனைத்தும் நீங்கப் பெறுகின்றனர்..
அடுத்து விஜயா என்னும் சன்னதி.. இந்த அம்மனும் மாதிரியே தான் விமலாவும் எனக் கூறுகின்றனர்..”லலிதா சகஸ்ரநாமத்தில்”இருப்பது போல விஜயாவும், விமலாவும் பக்கத்து பக்கத்தில் இருந்து, அருளை வழங்கும் அருமையான திருவிடம் இதுவாகும்..
இனி அடுத்து வரும் பதிவுகளில் மற்ற சக்திபீடங்கள் பற்றி பார்ப்போம்
மீண்டும் சந்திப்போம்