இறைவனை அடைய சரணாகதித் தத்துவம் என்கின்ற பிரபத்தி நெறி ஒன்றே சிறந்த வழி ஆகும் இறைவனே எனக்கு உன்னை தவிர வேறு யாருமே புகழ் இல்லை என்று உடலாலும் மனதாலும் உயிராலும் அவன் பாதங்களை பற்றிக் கொள்வது என்பதே சரணாகதி தத்துவத்தின் சாரம் ஆகும்..
” உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே”
இவ்வாறு நம்மாழ்வார் திருவாய் மொழியின் முதல் பாகத்திலேயே சரணாகதி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் பாடியுள்ளார்ஆழ்வார் தனது பாசுரத்தில் உயர்வற.உயர்நலம் என்று பகவானின் கல்யாண குணங்களை சிறப்பித்துள்ளார் பகவான் 19.கல்யாண குணங்களைக் கொண்டவன் அவற்றைப் பற்றிகுறிப்பாக பார்ப்பதே இந்த குறுந்தொடரின் நோக்கம்.
1. சௌசீல்யம்: பெரியவன் சிறியவன் என்று பேதம் ஏதுமின்றி எல்லோரோடும் இரண்டற கலந்து விடும்மேன்மையான குணம் சௌசீல்யம் என்று சொல்லப்படுகிறது..
2. வாத்ஸல்யம்: குற்றம் குறைகளுடன் தனது அடியார்கள் இருந்த போதிலும் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது இந்த குணம்.. தனக்கு அப்போது தான் பிறந்த கன்றை எந்த வித அருவருப்பு இல்லாமல் அதன் வழுவை ஆசையாய் பாசத்துடன் நக்கிக் கொடுக்கும் தாய்ப்பசு..அதனைப் போன்றே பெருமாள் தனது அன்பையும் பாசத்தையும் பொழிபவர்..
3.மார்த்தவம்:. அடியவர்கள் தன்னைப் பிரிந்து செல்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மாண்பு கொண்டவர்.
4. ஆர்ஜவம்: உடல் உள்ளம் வாக்கு ஆகியவற்றில் மாசு இல்லாத குணம் கொண்டவன்..
5. சௌஹார்த்தம: எப்போதும் எல்லோருக்கும் நன்மையே எண்ணும பரந்த குணம்..
6. ஸாம்யம்: ஜாதி குணம் ஆகியவற்றில் உயர்வு தாழ்வு கருதாமல் யாராக இருந்தாலும் தன்னைச் சரணாகதி என்று தஞ்சம் அடைந்தால் ஏற்றுக் கொள்ளும் குணம்..
7. காருண்யம்: துன்பப் படுபவர்களைப் பார்த்து இரங்கும் குணம்..
8. மாதுர்யம்: எதிரியின் மறுபக்கச் சிறப்பையும் மதித்துப் போற்றி தன்னைக் கொல்ல நினைக்கும் பகைவனுக்கும் இனியவனாக இருக்கும் குணம்..
9. ஔதர்யம்: பிரதிபலனாக எதையும் எதிர்பாராமல், கொள்ள கொள்ள குறையாமல் தனது அடியார்கள் வேண்டுவனவற்றை அருளுகின்ற குணம்..
10..காம்பீர்யம்: தன்னைச் சரணாகதி அடையும் அடியார்களுக்கு என்ன செய்ய போகிறார் என்று மற்றவர்களால் நினைத்துப் பார்க்க முடியாதபடி தன்னடக்கம் காட்டி எதிர்பாராத வகையில் அருள் புரியும் மகோன்னத குணம்..
மற்றவை அடுத்து…..
தொடரும்..