கணநாதர் என்பவர் சீர்காழிப் பதியில் அந்தணர் குலத்தில் அவதரித்தார்..சீர்காழியில் கோயில் கொண்டுள்ள திருத்தோணியப்பருக்கு நாளும் அன்போடு தொண்டு செய்து வந்தார்.. தொண்டு செய்தலில் தேர்ச்சி பெற்றிருந்த இந்த தொண்டரை நாடி பலரும் தொண்டு பயில வந்தனர்..தன்னிடம் வந்த நந்தவனப் பணி செய்வோர், மலர் பறிப்போர்,மாலை கொடுப்போர், திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டு வருவோர், கோவிலை சுத்தம் செய்வோர், திருமுறை எழுதுவோர், வாசிப்போர் என்றுஅவரவர் குறை எல்லாம் தீர்த்து வைத்தார்..இவரது தொண்டில் தேர்ந்த சரியையார்களையும் உருவாக்கினார்..

இல்லறத்தில் வாழ்ந்த இவர், அடியார்களை வழிபட்டார்.. “ஆளுடைப் பிள்ளை_ என்று அழைக்கப்படும் “திருஞானசம்பந்தர்” அவர்களையும் அன்போடு நாளும் வழிபாடு செய்து வந்தார்.. இதன் காரணமாக, இவர் திருக்கயிலை மாமலையில் சேர்ந்து, சிவகணங்களுக்கு நாதனாகி பெறும் பேறு பெற்றார்..
இவர் “கணநாத நாயனார்” என்று சைவ சமயத்தவர்களால்மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்ந்தார்..
இவரது குருபூஜை நாள் பங்குனி, திருவாதிரை..
“கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்”-திருத்தொண்டத்தொகை..
பரம்பொருளின் சில கோயில்களை கடந்த சில நாட்களாக நான் தரிசனம் செய்து அவற்றில் சிலவற்றை வீடியோ பதிவுகள் எடுத்து வந்துள்ளேன்.. அவைகளை வரும் மார்ச் மாதம் முதல் வாரம்தோறும் எனது தெய்வீக பயணம் யூடியூப் சேனலில் வெளியிட்டுவருகிறேன்.. அன்பர்கள் அதனைக் கண்டு களித்து எனது சேனலை தொடர்ந்து சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்..