ஹரி என்னும் பேரரவம்

ஸ்ரீமஹாவிஷ்ணு என்கின்ற பரம்பொருளின்பல திவ்ய நாமங்களை பற்றிய பெருமைகளை இந்த பதிவில் நான் அளித்து வருகிறேன்..அவ்வாறான பெயர்களில் இன்று நாம் பார்க்க இருப்பது ஸ்ரீதரன் என்கின்ற திருநாமத்தை பெருமைகளைப் பற்றி..

நமது இந்து சமயத்தில் ஒரு பிரிவான வைணவத்தில் உள்ள சமூகத்தினரிடையே ஸ்ரீதரன் என்ற பெயர் பரவலாக வழங்கும் பெயர்களில் ஒன்று..இந்த பெயர் ஸ்ரீ விஷ்ணுவின் பன்னிரு நாமங்களில் ஒன்பதாவது பெயராகும்..ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இந்த பெயர் 610 பெயராக வருகிறது அதில் ஸ்ரீகிருஷ்ணரை ஸ்ரீதர கிருஷ்ணா என்றும் ஸ்ரீதரா என்றும் பிதாமகர் பீஷ்மர் குறிப்பிட்டுள்ளார் இந்த பெயர் லக்ஷ்மி தேவியை திருமால் தனது நெஞ்சில் தாங்குபவர் என்பது பொருள் தேவி என்றால் எல்லா உயிர்களுக்கும் தாயாக இருப்பவள்..

மணிக்கு ஒளி போலவும் மலருக்கு ம ணம் போலவும் மதிக்கு நிலவு போலவும் அமுதத்திற்குசுவை போலவும் இயற்கையாக உள்ள தொடர்பினால் எப்போதும் லட்சுமியை சேர்ந்திருப்பவர் என்று பராசரபட்டர் உரை எழுதுகிறார்

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் எல்லாவைணவ நூல்களிலும் கடவுள் நாராயணனுக்கு லட்சுமி தேவியை மார்பில் தாங்குபவர் என்ற அடைமொழி இல்லாமல் இருக்காது.. உதாரணமாக

திருப்பாண் ஆழ்வார் இயற்றிய அமலனாதிபிரான் என்ற பாசுரத்தில் திருமகள் உறையும் மார்பை என்னை ஆட்கொண்டது என்கிறார் திருவுக்கும் திரு ஆகிய செல்வா என்று தொடங்கும் பாசுரத்தில் திருமங்கைஆழ்வார் திருமார்பா என்று வடமொழி பெயர் ஸ்ரீதர் அணை மொழிபெயர்க்கிறார் ஸ்ரீதரனைஅகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா என்றே சீதனம் என்ற சொல்லை விளக்குகிறார்

ஆழ்வார்கள் ஸ்ரீதரன் ஐ தமிழில் சிறிதரன் என்று குறிப்பிட்டுள்ளனர்..

விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு உரை எழுதிய பராசரபட்டர் தனதுகுண தர்ப்பணம் என்கின்ற நூலில் சீதன என்றதிருநாமத்திற்கு கீழ்க்கண்டவாறு உரை எழுதியுள்ளார்
எந்த ஒரு காரணமும் இன்றி தன்னுடைய பிரேமை என்பதன் அழகை எப்போதும் பெரியபிராட்டி அளித்தபடி உள்ளவன் அவளுடைய மேன்மைக்கு காரணமாக உள்ளவன்

ராமாயணம் அயோத்தியா காண்டம் (53-31) ந ச ஸீதா த்வயாஹீநா ந சாஹமபி ராகவ முஹுர்த்தமபி ஜீவாவ: ஜலாத் மத்ஸ்யாவிவ உத்த்ருதௌ- லக்ஷ்மணன் இராமனிடம்” உன்னை விட்டு நீங்கினாள் சீதையும் இல்லை நானும் இல்லை ஏனெனில் மீனில் போடுவது போன்று உன்னை விட்டுநீங்கினால் ஒரு முகூர்த்தம் மட்டுமே தாங்குவோம்

ஸ்ரீ விஷ்ணு புராணம் (1-9-144)- விஷ்ணோரேஷா அநபாயிநீ- அவள் எப்போதும் மஹாவிஷ்ணுவை விட்டு அகலாமல் உள்ளாள்..

இராமாயணம் யுத்த காண்டம் (121-19) – அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா- சூரியனை விட்டு அதன் கதிர்கள் எப்படி இருக்காதோ அது போன்று என்னை விட்டு சீதை இருக்க மாட்டாள்..

இராமாயணம் ஸுந்தர காண்டம் (21-15) – அநந்யா ராகவேணாஹம்- ராகவனை விட்டு நான் அகல மாட்டேன்..

ஹரி என்னும் திருநாமத்திற்கு உள்ள மற்ற பெயர்களின் பெருமைகளை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்..

பரந்தாமனின் சில கோயில்களை கடந்த சில நாட்களாக நான் தரிசனம் செய்து அவற்றில் சிலவற்றை வீடியோ பதிவுகள் எடுத்து வந்துள்ளேன்.. அவைகளை வரும் மார்ச் மாதம் முதல் வாரம்தோறும் எனது தெய்வீக பயணம் யூடியூப் சேனலில் வெளியிட உள்ளேன்.. அன்பர்கள் அதனைக் கண்டு களித்து எனது சேனலை தொடர்ந்து சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

மீண்டும் சந்திப்போம்

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: