கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் அருகே “மணவாளநல்லூர்”என்னும் கிராமத்தில் அமைந்துள்ள “அருள்மிகு கொளஞ்சியப்பர்” திருக்கோயிலை தரிசனம் செய்தேன்..
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த இடம் அடர்ந்த காடாக கொளஞ்சி செடிகள் புதர்கள் மண்டி கிடந்தது.. அங்கே மேய்ச்சலுக்கு வந்த ஒரு பசுமாடு ஒரு இடத்தை தன் கால்களால் தேய்த்து பலி பீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் பால் சொரிந்தது…இதனை அது தினமும் செய்து வந்தது.. பொதுமக்கள், அதனை புனிதமாகக் கருதி, வெளியே எடுத்து, வழிபடத் தொடங்கினர்..அந்த உருவம் அடையாளம் இல்லாததால் அவருடைய தல வரலாறு என்ன என்று புரியாமல் இருந்த போது, அவர்களுக்கு விடை கிடைத்தது..
ஒரு சமயம், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லைக்கு மேற்கேயுள்ள தலங்களை தரிசித்தவாறு வந்தபோது, “விருத்தாசலம்”எனப்படும் “திருமுதுகுன்றத்திற்கு” வந்தார்.. இந்த ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டசுந்தரமூர்த்தி சுவாமிகள், இறைவனின் முதுமை பற்றி அறிந்து, அவரை பாடுதலால் பொன் பொருள் ஏதும் கிடைக்காது என்று முடிவு செய்து, தனது பயணத்தைதொடர்ந்தார்..இது புரிந்த ஈசன், அவரோடு விளையாட, தனதுமைந்தன் முருகனிடம் “சுந்தரர் எம்மை மதியாமல் செல்வதனால் அவரது பொருளை கவர்ந்து வரச்சொல்லி” பணித்தார்..முருகரும் அவ்வாறு அவர் பொருளை கவர்ந்து வந்தார்..அப்போது பதறிய சுந்தரரிடம்” நீ உன் பொருளை திரும்பப் பெற வேண்டும் என்றால் விருதாசலம் சென்று முறையீடு” என்று கூறி முருகரும் அனுப்பி வைத்தார்.. சுந்தரரும் அதை ஏற்று ஈசனிடம் வந்து நின்றார்.. ஈசன் “மதியாமல் சென்ற உனக்கு ஒரு பாடம் புகட்ட இவ்வாறு செய்தோம்” என்று கூறி அவரது பொன் பொருளை திரும்ப கொடுத்தார்..மனம் மகிழ்ந்த சுந்தரரும் மன்னிப்பு கேட்டு அந்த தலத்தின் பெருமானை பாடினார்..
சுந்தரர் மீது ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளநல்லூர்.. அதன்படி விருதாச்சலம் நகருக்கு மேற்கே பலி பீட உருவில் அமர்ந்திருப்பவர் அமர்ந்திருப்பவர் சாட்சாத் முருகப் பெருமான் என்றுஉறுதி செய்யப்பட்டது.. கொளஞ்சி செடிகளின் ஊடேயும் பசுவின் கொளம்புகளின் மூலம் வெளிப்பட்ட அவருக்கு “கொளஞ்சியப்பர்” என்ற திருநாமம் வழங்கப்பட்டது..
இங்கே,முருகப்பெருமான் வழக்கமான தமது அழகிய உருவம் அல்லாது ஒரு லிங்க வடிவமாக காட்சி தருகிறார் கையில் வேலுடன்.. இவர் சுயம்பு மூர்த்தி ஆவார்..

இந்த திருக்கோயில் விருத்தாசலம் நகருக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.. இந்த திருக்கோயில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இடைவிடாது திறந்திருக்கும் என்று அறியப்பட்டது..
வாசகர்கள் தென்தமிழ் நாடு செல்லும் வழியில் இந்த திருத்தலத்தை தவறாது தரிசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..