தொண்டை மண்டலத்திலே காஞ்சிபுரத்தில் பல்லவ குலத்தில் காடவர்கோன் என்பவர் வாழ்ந்து வந்தார்.. இவர் எந்த உயிர்களுக்கும் இம்மை மறுமையின்காடவர் கோன் பங்கங்களையும் முக்தியையும் அடைதல் வேண்டும் என்று விரும்பி பிரதேசங்களையும் தமக்கு அதீனப்படுத்தி சைவம் தழைத்தோங்கஅரசர்களும் பணிசெய்ய அரசாட்சி செய்து வந்தார்
சில காலம் போன பின் அரசாட்சி துன்பமாக உள்ளது என கருதி அதனை வெறுத்து அந்த பாரத்தை இறக்கி தம்முடைய புத்திரன் மேலேற்றி சிவ ஸ்தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து திருப்பணி செய்து ஒவ்வொரு திருவெண்பா பாடினார் இந்த பிரகாரம் நெடுங்காலம் திருத் தொண்டு செய்து கொண்டிருந்து சிவபதத்தை அடைந்தார்
இவர் கிபி 570 இலிருந்து கி.பி585 வரை ஆட்சி செய்து வந்துள்ளார்.. காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினை குறிக்கும் பொதுப் பெயராகும்.. இவரது முழுப்பெயர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்பதாகும்.. ஐயடிகள் என்னும் பெயர் ஐயனடிகள் என்பதன் மரூஉ ஆகும்.. இவர் காஞ்சிபுரத்தில் அரசாட்சி செய்து வந்த போது இவரை சிம்ஹாங்க, பாதசிம்ஹா, பஞ்சபாத சிம்ஹா என்று அழைக்கப்பட்டார்..மேலும் இவர் துறவரம் பூண்ட பொழுது தன் இரு மகன்களான சிம்ம விஷ்ணு மற்றும் பீமவர்மன்ஆகியோரில் மூத்தவனான சிம்மவிஷ்ணுவின் அரசன் ஆக்கியதாக வடமொழி கதை ஒன்று கூறுவதன் மூலம் சிம்ம விஷ்ணு பீமவர்மன் ஆகியோரின் தந்தை மூன்றாம் சிம்ம வர்மன் என்ற பல்லவ அரசரே ஐயடிகள் காடவர்கோன் என்று மாறினார்.. மேலும் ஐயடிகள் என்பதன் வடமொழி ஆக்கமே “பஞ்ச பாத”என்பதாகும்.
மன்னர்கள் எல்லாம் தனது ஆணை வழிநிற்கவும் வடமொழி தமிழ் மொழி ஆகியவற்றின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இந்த மன்னர்அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன் பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவ தலங்களையும் வழிபட்டு ஒவ்வொரு தலங்களுக்கும்நமக்கு இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன.. துறவுள்ளம் இப்பாடல்களில் இருக்க காணலாம்
இவர் ஐயடி காடவர்கோன் நாயனார் என்ற திருப்பெயரில் 63 நாயன்மார்களில் ஒருவராக விளங்குகின்றார்..
இவரது குருபூஜை நாள் ஐப்பசி மூல நட்சத்திரம்..