திதிகள் சொல்லும் சேதிகள் என்ற பகுதியில் இதுவரை பஞ்சமி வரை பார்த்தோம்.. இன்று நாம் பார்க்க இருப்பது சஷ்டி திதி.. சஷ்டி திதி என்பது 6 வது மற்றும் 21 ஆவது திதியும் ஆகும்.. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலானகோணம் 60 டிகிரி யில் இருந்து 72 டிகிரி வரை ஆகும் காலம் சுக்கில பட்ச சஷ்டி என்றும் 240 டிகிரியில் இருந்து 252 டிகிரி வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்ச சஷ்டி என்றும் கூறப்படுகிறது..
இந்து சமயத்திற்கு உரிய சிறப்புநாட்கள் பல திதிகளை அடிப்படையாகக் கொண்டு வருகின்றன.. சஷ்டி திதி முருகனுக்குரிய சிறப்பு நாளாகும்..
கந்தசஷ்டி ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியில் கொண்டாடப்படுகிறது..



விநாயகருக்கான கார்த்திகை சஷ்டி 21 நாட்கள் விரதம் நிறைவு பெறுகிறது அந்த நாள் மார்கழி வளர்பிறை சஷ்டி திதி ஆகும்..
இதுதவிர பாத்ரபத மாதத்தில் தேய்பிறை வருகின்ற சஷ்டி கபிலா சஷ்டி அனுசரிக்கப்படுகிறது.. இந்த நாள் சந்திரனின் சஞ்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.. இந்த நாளில் விருப்ப தெய்வத்திற்கும் பசுவிற்கும் பூஜை செய்தல் சிறப்பாகும்… பசுவிற்கு பற்கள் போல உணவு இடுதல் நன்மை தரும்..
இனி அடுத்த பதிவில் மீதமுள்ள திதிகளைப் பற்றி சிறு குறிப்பாக பார்ப்போம்
மீண்டும் சந்திப்போம்..