பண்டைய சோழ வளநாட்டில் திருப்பெரும் மங்களம் என்ற ஒரு ஊர் இருந்தது..அந்த ஊர் தற்போதைய மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு தென் கிழக்காகவும், திருப்புன்கூர் என்ற ஊருக்கு அருகில் உள்ளது.. அந்த ஊரிலேயே சோழராஜா அவர்களிடத்தில் சேனாதிபதி தொழிலை பரம்பரை பரம்பரையாக செய்து வந்த ஏயர் குடியில் கலிக்காமர் என்பவர் தோன்றினார் இவர் திருப்புன்கூரில் உள்ள சிவாலயத்திற்கு அளவில்லாத திருப்பணிகள் செய்து வந்தார்..
இவ்வாறு இருக்கையில் இவர் சுந்தரமூர்த்தி நாயனார் சிவ பெருமானிடத்தில் பரவை நாச்சியார் இடத்தில் தூதாக அனுப்பிய சமாச்சாரத்தை கேள்விப்பட்டு மிகவும் வெம்பி மிகக் கோபித்து “நாயனை அடியான் ஏவம் காரியம் மிக நன்று இப்படி செய்பவன் தொண்டனாம்! இது என்ன பாவம்! பொறுக்கமுடியாமல் இதனை நான் கேட்டுக் கொண்டு உயிரோடு இருக்கின்றேனே”என்று வருந்தினார்..நாயனார் இடத்தில் இவருக்கு வெறுப்பு தோன்றியது.. நாயனாரின் பெருமையை இவருக்கு உணர்த்தவும் இருவருக்குமிடையே நட்பு ஏற்படுத்தவும் எண்ணினார்.. அதன் விளைவாக கலிக்காமர் உடலில் சூலை நோயை ஏற்படுத்தினார்..
கலிக்காமரும் இந்த நோயின் தாக்கத்தினால் மிகவும் அல்ல உற்றார்..இதுகுறித்து இறைவனிடம் வேண்ட அவர் ஒரு சீரிய தொண்டன் உன்னை வந்தடைந்து அதனை குணப்படுத்துவான் என்று அருளினார்.. அதே நேரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரிடமும் இறைவன் கலிக்காமரைப் பற்றி சொல்லி அவரது சூலை நோய் இருக்குமாறு பணித்தார்.. சுந்தரமூர்த்தி நாயனாரும் அவரை சந்திக்க புறப்பட்டார்..
சுந்தரமூர்த்தி நாயனார் தன்னைக் காண வந்து கொண்டிருக்கிறார் என்பதனை அறிந்து கலிக்காமர் அவர் வந்து என்னை குணப்படுத்துவதை விட நான் இறப்பதே மேல் என்று கூறி கத்தியால் தன் வயிற்றைக் கிழித்து தற்கொலை செய்து கொண்டார்.. இதனை அறிந்த அவரது மனைவியும் உடன் மரிக்கத் துணிந்தார்.. அதற்குள்ளாக சுந்தரமூர்த்தி நாயனார் வந்து இவரிடத்தில் கலிக்காமர் எங்கே என்று வினவியபோது அவர் உள்ளே படுத்திருக்கிறார் என்றும் அவர் நலமாக உள்ளார் என்றும் தெரிவித்தார்..வயிற்றிலிருந்து குடல் சரிந்து இறந்திருந்தார்.. இதனைக் கண்ணுற்ற சுந்தரமூர்த்தி நாயனார் தன்னால் ஏற்பட்ட இந்த விபரிதத்தினை தாங்க முடியாமல் தானும் இறந்து போக முடிவு செய்து கத்தியை எடுத்து தன்னைக் குத்திக் கொள்ள முயன்றார்..

அப்போதுஇறைவன் தோன்றி இருவரையும் காத்து அருளி இருவருக்கும் விவரத்தினை தெளிவுபடுத்தி அவர்களிடையே நட்பினை ஏற்படுத்தினார்..
அதன்பின் இருவரும் அதிக நட்புக்கு உள்ளவர்களாகி திருப்புன்கூர் போய் சுவாமி தரிசனம் செய்து செய்து வந்தார்கள்..சில நாட்கள் சென்ற பிறகு இருவரும் திருவாரூரை அடைந்தார்கள்.. அங்கே சாமி தரிசனம் அதன்பின் சுந்தரமூர்த்திநாயனாரிடம் அனுமதி பெற்று கலிக்காமர் தனது சொந்த ஊருக்கு வந்து திருத்தொண்டு செய்து கொண்டிருந்தார்.. பின்னர் சிவபதம் அடைந்தார்..
இவர் சோழ அரசர்களின் சேனாதிபதி பரம்பரையில் வந்த நாள் ஏயர்கோன் கலிக்காமர் என்று அழைக்கப்பட்டார்.. பின்னர் இவர் ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்று அழைக்கப்பட்டார்..
இவரது குருபூஜை ஆனி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது..