ஹரி பரந்தாமன் என்று சொல்லப்படுகின்ற ஸ்ரீமன் நாராயணனின் பல திவ்ய நாமங்களின் பெருமைகள் பற்றி இந்த பதிவில் பார்த்து வருகிறோம்.. நாம் இதுவரை அவரது திருநாமங்களான கோவிந்தன் கேசவன் வாசுதேவன் தாமோதரன் மதுசூதனன் அச்சுதன் மாதவன் ரிஷிகேசன் ஜனார்தனன் ஆகிய திருநாமங்களும் பற்றி பார்த்துள்ளோம்.. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் திருநாமம் நாராயணன்..

நாராயணன் என்ற பெயர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 245 ஆவது பெயராக வருகின்றது.. விஷ்ணுவின் முக்கியமான 12 பேர்களில் இந்தப் பெயர் இரண்டாவதாகும்..இந்து சமயத்திலே கடவுளின் பெயர்களுக்கு ஆன்மீகச் சிறப்பு மிக்கதானப் பெயர்.. பிறப்பு இறப்பு போன்ற கோரமான விஷத்தின் தீண்டலைப் போக்க வல்ல பெயர் என்கின்றன புராணங்கள்..
“ஓம் நமோ நாராயணாய”
பன்னிரண்டு ஆழ்வார்களில் இரண்டாவது ஆழ்வார் பூதத்தாழ்வார் நாரணன் என்னும் சொல்லை கையாண்டு அதற்கு’அன்பின் அண்ணன்’என்று விளக்கமும் தருகிறார்..
“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா-ஏற்றினேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நான்”
இந்த நாராயணன் என்ற பெயருக்கு வடமொழியில் அளித்துள்ள விளக்கமானது யாரெனில்:
உள்ளதற்கெல்லாம் உறைவிடம் ஆகியவர்..’நர’என்றால் ஆன்மா.. அதனிலிருந்து உண்டானவை எல்லாம் ‘ நாரா’ எனப்படும்.. அவைகட்கு ‘அயனம்’ அதாவது இருப்பிடம்..எல்லாவற்றிலும் உள்ளிலும் வெளியிலும் நிறைந்திருப்பவர்.. ஆதலால் நாராயணன் என்றும் அழைக்கப்படுகிறார்..
இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால் ஆன்மாவில் இருந்து வெளி, வெளியிலிருந்து காற்று, காற்றிலிருந்து தீ, தீயில் இருந்து நீர், நீரிலிருந்து நிலம்-இதுதான் படைப்பு வரிசை.. இப்படி விளக்கம் பெற்று வெளியானதே இந்த உலகம்.. இது ஆன்மா என பொருள்படும்.. நரனில் இருந்து உண்டானதால் ‘நாரம்’. நாரத்தை இருப்பிடமாக கொண்டவர் நாராயணன்..
வெளி முதலிய ஐந்து பெரும் பூதங்களும் ஒன்றோடொன்று நன்கு கலந்து வெளித் தோற்றம் பெறும் முன்பாக தனித்தனியாக இருந்தன.. அவைகளுக்கு ‘காரணோதகம்’அல்லது’அப்ப’என்று பெயர்.. அந்த மூல தத்துவங்களில் உட்புகுந்து அவற்றை தன் இடமாகக் கொண்டு படைப்பை தொடங்கியவர் நாராயணன்..
ஆதிசங்கரர் நாராயண நாமத்தின் பெருமையை தன் தன் விஷ்ணு சகஸ்ரநாம உரையின் முன்னுரையில் பல மேற்கோள்களைக் எடுத்துக் கொண்டு விளக்குகிறார்.. அவைகளில் சில:
“. நீராடும் பொழுதும் மற்ற எல்லா செய்கைகளிலும்நாராயணனை நினைத்த மாத்திரத்தில் கூடாத செயல்கள் அனைத்திற்கும் பிராயச்சித்தம் ஆகின்றது.. அத்தனை சாத்திரங்களையும்திரும்பத் திரும்ப அலசி பார்த்தாலும் நாராயணனை எப்பொழுதும் தியானிப்பது ஒன்றே சிறந்ததாக ஏற்படுகிறது”
ஸ்ரீமத் பாகவதத்தை தொடங்கும்போதே சுகர் மகரிஷி அரசன் பரீக்ஷித்துக்கு சொல்கிறார்.. கருமங்களை சரிவரச் செய்தாலோ அல்லது யோகாப்பியாசத்தினாலோ அல்லது ஆன்மீக தொடர்பினால் எப்படி ஏற்பட்டாலும் ஒரு பிறப்பின் மேலோங்கிய பெருமை கடைசி மூச்சின் போது நாராயணனை நினைவு கூறுவது தான்..
ஒரு சுவையான செய்தி.. பகவானின் தத்துவங்களை ஆதி முதல் அந்தம் வரை எடுத்து அலசி இருக்கும்பகவத் கீதையின் 18 அத்தியாயங்களிலும் நாராயண என்ற சொல் வரவே இல்லை என்பது ஓர் அதிசயம்..
இனி வரவிருக்கும் பதிவுகள் இல் அடுத்த திருநாமங்களைப் பற்றி பார்ப்போம்
மீண்டும் சந்திப்போம்..