திதிகளின் விவரம் பற்றி இந்தப் பதிவில் நான் பதிவு செய்து வருகிறேன்.. அந்த வகையில் இன்று நான் பதிவுசெய்ய இருப்பது பஞ்சமி திதி பற்றி..
இந்த பஞ்சமி திதி, திதி வரிசையில் ஐந்தாவது திதியும் இருபதாவது திதியும் ஆகும்.. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 40 டிகிரி லிருந்து 60 டிகிரி ஆகும் வரை உள்ள சுக்லபட்ச பஞ்சமி திதியும் 228 இல் இருந்து 240 வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்ச பஞ்சமியும் ஆகும்..
ஆவணி மாத வளர்பிறை பஞ்சமி திதி கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றது இந்த நாளில் கருடனை வழிபடுவது சிறப்பானதாகும்..புரட்டாசி மாத வளர்பிறைப் பஞ்சமி திதி ரிஷி பஞ்சமி என இந்த நாளில் விரதம் இருந்து சப்தரிஷிகளை நோக்கி பெண்களால் அனுஷ்டிக்கக்கப்படுகிறது.. சிம்ம கிருஷ்ண பஞ்சமி என்பது ஆவணியில் வருகின்ற தேய்பிறை பஞ்சமி ஆகும்..
இனி பஞ்சமி திதி பற்றி வராக புராணத்தில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்..
இந்த சுக்ல பஞ்சமி திதியில் புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.. பாம்புகளுக்கு பால் ஊற்றி வணங்க வேண்டும்.. பஞ்சமியன்று தான் பிரம்மா எல்லா நாகங்களை அழைத்து அவற்றை பாதாள லோகத்திற்கு செல்லுமாறு கூறினார்..
மிகுதியான விஷத்தை உடைய அனந்தா, வாசுகி, பத்மா, மஹாபத்மா, குளிகா போன்ற பாம்புகளை பிரம்மனே படைத்தார்.. இந்தப் பாம்புகள் பிரம்மனின் படைப்புகளை பாழ் செய்தமையால் மிகுந்த கோபம் கொண்ட பிரம்மன் நாகங்களை நோக்கி”என் படைப்புகளை பெரிதும் வீணாக்கிய நீங்கள் உங்கள் தாயினாலேயே அழிக்கப் படுவீர்கள்”என்று சாபமிட்டார்.. இதைக் கேட்ட நாகங்கள் பிரம்மனை நோக்கி”அய்யனே!எங்களைப் படைத்த நீரே எங்களுக்கு இப்படி ஒரு குணத்தை கொடுத்தீர்கள் அந்த குணத்தினாலேயே நாங்கள் மக்களை கடிக்கின்றோம்..எங்களுக்கு விஷத்தன்மையை படைத்த நீங்கள் எங்களை ஏன் குறை சொல்கிறீர்கள்? நாங்கள் எப்படி பொறுப்போம்?”என்று கேட்டனர்..
இதைக் கேட்ட பிரம்மன் நாகங்களுக்கு தனி இடம் ஒதுக்கி தருவதாகவும் அவர்கள் அந்த இடத்தில் தங்கி இருந்தால் மனிதர்களுக்கும் நாகங்களுக்கும் சண்டை ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்..பாதாள லோகத்தின் ஐ ஏழு பிரிவுகளாக பிரித்து அதில் மூன்று பிரிவுகளில் நாகங்கள் தங்கள் இனத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்றும் கூறினார்..
பிரபஞ்ச உற்பத்தி பற்றி புராணங்களில் இடையே சில வேறுபாடுகள் உள்ளன..தேவர்கள் மனிதர்கள் அரக்கர்கள் மற்ற உயிரினங்கள் யாவும் பிரம்மனிடம் இருந்து தோன்றியவை என்று சில புராணங்களும்,காசியப முனிவர் மற்றும் அவரது மனைவியின் பிள்ளைகளே தேவர்கள் மனிதர்கள் அரக்கர்கள் மற்ற உயிரினங்கள் என்று சில புராணங்களும் கூறுகின்றன…
நாகங்களிடம் பிரம்மன் அடுத்த கல்பத்தில் காசிப முனிவருக்கும் அவன் மனைவி கத்ருவிற்கும் பிள்ளைகளாக பிறப்பார்கள் என்று கூறினார்.. காசிப முனிவர் தன் மனைவி கத்ருவின் விருப்பப்படியே அவள் நாகங்களை பெற்றெடுப்பாள் என்று வரமளித்தார்.. மற்றொரு மனைவியானவினதா விடம் அவள் விருப்பப்படியே இரண்டு பிள்ளைகள் பெறுவாள் என்றும் அவர்கள் கத்ருவின் பிள்ளைகளை விட பலம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் வரம் கொடுத்தார் கத்ருவிற்கு ஆயிரம் பாம்புகள்மக்களாக தோன்றினர் வினிதாவிடம் இரண்டு முட்டைகள் தோன்றின நெடுநாட்கள் முட்டையினின்று எதுவும் வெளிவராததால் பொறுமை இழந்த வினதா ஒரு முட்டையை உடைத்தாள்.. அதிலிருந்து அங்கஹீனம் உடைய ஒரு உருவம் வெளிவந்தது அருணா என்ற பெயருடைய அந்த உருவம் தன் தாயின் பொறுமையால் தன் உருவம் பாழ் பட்டது என்பதால் தன் தாய் கத்ருவிற்கு 500 ஆண்டுகள் அடிமைப்பட்ட கிடப்பாள் என்றும் அதன்பின் மற்றொரு முட்டையிலிருந்து வெளியே வரும் மகன் தன் தாயை விடுவிப்பார் என்றும் கூரினார்.. அதன் பின்பு ஆலயத்திற்குச் சென்று சூரியனுடைய தேர் பாகனாக ஆனார்..
இதற்கிடையில் வினதாவிடம் இருந்து தோன்றிய மற்றொரு முட்டையில் இருந்து பாதி பறவையும் பாதி மனிதனும் சேர்ந்த ஒரு உருவம் தோன்றிற்று அதற்கு கருடன் என்பது பெயர் பாம்புகளே தனக்கு இணையாக வேண்டுமென்று வரத்தினை இந்திரனிடமிருந்து பெற்று வந்தது கருடன் தன் தாயை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க விரும்பியது இதை அறிந்த பாம்புகள் தங்களுக்கு அமிர்தம் கொண்டு வந்து கொடுத்தால் அவரது தாயை விடுவிப்பதாக கூறினர்..கொடுப்பதற்கு பதிலாக சொரசொரப்பான விளிம்புகளை உடைய தர்ப்பைப் புல்லைக் கொடுத்து.. அதனாலேயே பாம்புகளுக்கு பிளவு ஏற்பட்டது.. இதன் காரணமாகவே பாம்புகளுக்கும் கருடனுக்கும் பெரும் பகை ஏற்பட்டது.. கருடமந்திரம் சொல்பவர்களை பாம்புகள் தீண்டுவதில்லை..
இனி அடுத்த திதிகள் பற்றி வரும் பதிவுகளில் தெரிவிக்கிறேன்
மீண்டும் சந்திப்போம்