கண்ணனுடைய அன்பிற்கு உகந்த நண்பர் அக்ரூரர்.. இவர் துவாரகையில் கண்ணனுடன் வசித்து வந்தார்..ஒரு சமயம் இவர் கண்ணனின் அந்தப்புரத்திற்கு சென்றபோது சத்தியபாமா மிகவும் துக்கத்துடன் தன்னை கண்ணன் மிகவும் அலட்சியப் படுத்துவதாக குறை சொன்னாள்.. இன்னும் ஒரு நாழிகைப் பொழுதிற்குள் தன்னை அவர் தேடி வராவிட்டால் உயிர் துறக்க போவதாக புலம்பினாள்..சத்தியபாமா சொன்னதை செய்பவள் என்பதை ஏற்கனவே அறிந்திருந்த அக்ரூரர் கண்ணனைத் தேடி கண்டுபிடித்து வர புறப்பட்டார்.. ஆனால் கண்ணனை கண்டுபிடிக்க முடியவில்லை.. எனவே தானே கண்ணனைப் போல வேடமிட்டு சத்யபாமாவின் முன் தோன்றி அவளை சமாதானம் செய்தார்.. பிறகு கண்ணனைத் தேடி பிடித்து விட்டார்.. அவரிடம் தான் செய்த தந்திரத்தை கூறினார்.. கண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது.. நீ பூலோகத்தில் பார்வையற்றவராக பிறப்பால் என்று சபித்துவிட்டார்.. சத்யபாமாவை பணிப் பெண்ணாக பிறப்பாய் என்று சாபமிட்டார்..
இருவரும் தங்களது தவறை உணர்ந்து வருந்தி கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டனர்.. கண்ணன் அவர்கள் மீது இரக்கம் கொண்டு நான் கொடுத்த சாபத்தை திரும்ப பெற முடியாது..இருப்பினும் உங்களை பூலோகத்தில் வந்து தடுத்தாட் கொள்வான் என்று அருளினார். கண்ணனின் சாபப்படி.அக்ரூரர் மதுரா நகரில் ஒரு குருடனாகப் பிறந்தார்..
காட்சி மாறுகிறது..
தாய் தந்தையரை இழந்த ஒரு சிறுவன் இருந்தான்.. அவனுக்கு பார்வையும் இல்லை.. அவனது உறவினர்கள் அவனை பாரமாக நினைத்து அடித்து விரட்டி விட்டனர்.. அவன் அழுது கொண்டே கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தான்..அப்படியே அவன் பக்கத்திலிருந்த காட்டுக்குள் நுழைந்து விட்டான்..கண் தெரிய வில்லையே தவிர பழக்கத்தினால் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு நடந்து செல்வான்.. கண் தெரியாததால் காட்டில் தனியாக இருப்பது அவனுக்கு பயமாக இல்லை.. எப்படியோ ஒரு கொட்டாங்கச்சியைத் தேடி கண்டுபிடித்து அதில் குச்சி நாண் எல்லாம் வைத்துக் கட்டி இசைக்கத் தொடங்கினான்..காலையில் மெதுவாக கிளம்பி அருகில் உள்ள கிராமத்திற்குச் செல்வான்.. எங்கேயோ எப்போதோ கேட்ட ஒரு நாமாவளி அவன் நினைவில் இருந்தது..”கிருஷ்ணா! கோவிந்தா! முராரே!”என்று பாடிக்கொண்டே வீடு வீடாக சென்று பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தான்.. வேண்டியது கிடைத்ததும் காட்டுக்கே வந்துவிடுவான்.. பொழுது போகாததனால் அந்த நாமாவளியையே விதவிதமாக பாடிக் கொண்டிருந்தான்.. பகவன் நாமத்தை பாடிப்பாடி அவனுக்கு நல்ல குரல் வளமும் வந்துவிட்டது.. இப்படியாக அவன் காலம் உருண்டோடியது.. வயதும் ஏறிக் கொண்டே இருந்தது..பெருமை அறியாமல் சொன்னபோதும் பகவான் நாமத்தினால் முகத்தில் ஒரு தேஜசும் வந்துவிட்டது..
ஒருநாள் சில வீரர்கள் அங்கு வந்தனர்.. அவர்கள் இவரையும் இவரது முகத்தையும் பார்த்ததும் விழுந்து வணங்கினர்..யாரோ எதிரே நிற்கிறார்கள் என்று உணர்ந்ததும் பழக்கத்தினால் கிருஷ்ணா என்றார்..
“சுவாமி எங்களை காப்பாற்றுங்கள்!”
“என்னப்பா என்னை காப்பாற்றவே யாரும் இல்லை.. நானே காட்டில் வந்து உட்கார்ந்து இருக்கிறேன்.. நான் எப்படி உன்னை நான் காப்பாற்றுவது?”
“சுவாமி நீங்க அப்படி சொல்ல கூடாது.. நாங்க பெரிய ஆபத்தில் இருக்கிறோம்.. உங்களை விட்டா வேற வழி இல்லை”
“என்ன ஆபத்து?”
“சுவாமி! நாங்க ராஜாகிட்ட வேலை பார்க்கிறோம்.. ராஜா ரொம்ப ஆசையா ஒரு அரபு குதிரையை வளர்த்து வந்தார்.. அந்த குதிரை எங்க பொறுப்பில் இருந்தது.. திடீர்னு இன்னைக்கு காலையில அந்த குதிரை காணாம போச்சு..கொண்டு வரவில்லை என்றால் எங்க ரெண்டு பேரின் தலையையும் வெட்டி விடுவேன் என்று அரசு உத்தரவு போட்டிருக்கிறார்.. நீங்கதான் காப்பாத்தணும்”
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?”
“சுவாமி! நாங்களும் காலையிலிருந்து தேடிட்டோம்.. அந்த குதிரையை கண்டுபிடிக்க முடியவில்லை.. நீங்க உங்க ஞான திருஷ்டியில் பார்த்து சொன்னா எங்க உயிர் தப்பிக்கும்”
அவர் சிரிச்சார்..”ஏம்பா! எனக்கு ஊன திருஷ்டியே இல்லை.. ஞான திருஷ்டிக்கு நான் எங்கே போவேன்?”
“சாமி நீங்க அப்படி சொல்ல கூடாது.. எப்படியாச்சும் சொல்லுங்க.. உங்களைப் பார்த்தாலே நீங்க பெரிய தபஸ்வி அப்படின்னு தெரியுது..”
“இது என்னடா வம்பா போச்சு?”தவித்தார் அவர்.. அவர்களோ விடுவதாயில்லை.. அவர்களிடம் இருந்து விடுபட்டால் போதும், எதையாவது சொல்லி அனுப்பி விடுவோம் என்று,”சரி! இங்க இருந்து நேரா கிழக்கால போங்க அங்க ஒரு ஆலமரம் இருக்கும்.. அப்புறம் திரும்பி வடக்கே போனால் அங்கே ஒரு குளம் இருக்கும்.. அந்தக் குளக்கரையில் ஒரு வேப்பமரம் இருக்கும்.. அதன் கிளையில் ஒரு காக்கா இருக்கும்.. அந்த காக்கா பறக்கும் திசையில் தொடர்ந்து போனா உங்க குதிரை கிடைக்கும்”என்று வாயில் வந்ததையெல்லாம் சொல்லி அனுப்பிவிட்டார்..
அவர்களும் “சரி ஸ்வாமி!மிக்க நன்றி”என்று சொல்லிவிட்டு வணங்கிச் சென்றார்கள்..
அவர் சொன்னதையே வாய்ப்பாடு மாதிரி சொல்லிக் கொண்டு அதே வழியில் சென்றார்கள்.. என்ன ஆச்சரியம்!!! நிஜமாகவே காகம் பறந்த திசையில் சென்றபோது அங்கே குதிரை மேய்ந்து கொண்டிருந்தது.. மறுபடி அவரைத் தேடிச் செல்ல நேரம் இன்றி இரவுக்குள் அரசவைக்கு போகலாம் என்று குதிரை அழைத்துக்கொண்டு அதனிடம் போனார்கள்..
குதிரைக்கு திரும்பக் கிடைப்பதற்கு மிகவும் மகிழ்ந்து எப்படி கிடைத்தது என்று கேட்க,இவர்களும் காட்டில் நடந்த விவரத்தை சொன்னார்கள்.. அரசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்..மறுநாள் காலை வீரர்களோடு அரசன் பெரிய பரிவாரங்களுடன் வெகுமதிகள் ஓடும்,அந்த கண் தெரியாத ஒரு முன் வந்து நின்றார்..
அவர் பயந்து போனார். அரசர் அவர் காலில் விழுந்து வணங்கி குதிரை கிடைத்து விட்டதையும் சொன்ன போது அவருக்கு நிம்மதி வந்தது..
அரசர் அவரை அழைத்துக்கொண்டு தன் அரண்மனைக்கு சென்றார்.. அந்த அரசனுக்கு சங்கீதத்தில் அபரிமிதமான ஆவல் இருந்தது.. இவளது பாடலைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார்.. அவர் பாடத் தொடங்கிய உடன் ஒரு அதிசயம் நிகழ்ந்தது..வீணையுடன் கலைவாணியும் ஜால்ராவுடன் விநாயகரும் வந்து அமர, தேவகன்னிகள் நாட்டியமாடினர்..மன மோகன வேணு கோபாலன் சங்கு சக்கரதாரியாக அங்கு வந்து அமர்ந்து அவரது பாட்டை கேட்டு மகிழ்ந்தார்.. காணக்கிடைக்காத அந்த காட்சியை அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்.. நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் கண்ணனும் இதர தெய்வங்களும் மறைந்து விட்டனர்.. அரசன் வேண்டிக்கொள்ள அவர் அரண்மனையிலேயே தங்கிமக்களுக்கு பக்தியை இசை மூலம் போதிப்பது ஆனார்.. அந்தப்புரத்தில் இருந்த மகாராணிகள் அரசவையில் தோன்றிய அற்புத காட்சி பற்றி கேள்விப்பட்டு தாங்களும் தனைப் பார்த்து இன்புற வேண்டும் என அரசனை வற்புறுத்தினார்கள்.. அதன்படியே அரசனும் அவரை அந்தப்புரத்திற்கு வரவழைத்து பாடும்படி கேட்டுக் கொண்டார்.. அந்தப்புர சபா மண்டபத்தில் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது..

அந்தக் காலத்தில் அந்தப்புரப் பெண்கள் கோஷா முறையில் முகத்தை மறைத்து ஆடை அணிந்து கொள்வார்கள்..பிற ஆண்களின் முன்னால் உட்கார மாட்டார்கள்..தவிர்ப்பதற்காகவே இந்த முறை கையாளப்பட்டது.. கச்சேரிக்கு அரசன் யாரையும் அழைக்கவில்லை.. பாடுபவருக்கு கண் தெரியாது.. எனவே அவரால் அந்தப்புரப் பெண்களை பார்க்க முடியாது என்பதால் எல்லா பெண்களும் முகத்தை மறைக்காமல் சாதாரணமாக மண்டபத்தில் வந்து அமர்ந்தார்கள்.. நிகழ்ச்சி துவங்கியது..அவர் பாட ஆரம்பித்ததும் அனைவரும் இசை இன்பத்தில் மெய்மறந்து முகத்தில் புன்னகை மலர அதிலேயே மூழ்கி விட்டனர்.. அந்தப் பெண்களின் கூட்டத்தில் கண்ணனால் சாபம் பெற்ற சத்யபாமாவும் பணிப்பெண்ணாக அமர்ந்து இசையைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தாள்.. இறைவன் தன் மாயையினால் சத்யபாமாவின் அடையாளம் தெரியும் படி செய்தார்.. உடனே அவர்”அம்மா தாயே! சத்யபாமா தேவியே! நீங்கள் எப்படி இங்கு வருவீர்கள்?”என்று கேட்டு பாட்டை பாதியிலேயே நிறுத்தினார்..
மன்னனுக்கு மிகுந்த ஆச்சரியம்.. கண்ணொளி தெரியாத இவருக்கு எப்படி கண்பார்வை வந்தது?கிருஷ்ணனின் மனைவியான சத்யபாமாவை இதுவரை பணிப்பெண்ணாகஏவல் புரியும் படி செய்து விட்டோமே என்று மிகவும் மனம் வருந்தி தங்களை மன்னிக்கும்படி வேண்டினான்.. அனைவரது வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீமன் நாராயணன் கருட வாகனத்தில் அங்கே தோன்றி அனைவருக்கும் காட்சி தந்தார்..
கண்ணனின் சாபத்தினால் மறுபிறவியில் குருடனாக பிறந்த அந்த மகான் தான் சூர்தாசர் என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.. அவருக்கு மீண்டும் கண் பார்வையை அருளினார்..