சென்னை குன்றத்தூரில் சுப்பிரமணியசாமி கோயில் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே..அந்த கோயிலுக்கு செல்லும் வழியில் அடிவாரத்தில் ஸ்ரீ மகா விஷ்ணு ஊரகப் பெருமாள் என்ற பெயரில் அழகிய கோயிலில் எழுந்தருளியுள்ளார்..
நான் கடந்த 27 .12 .2020 அன்று குன்றத்தூரில் உள்ள வேலவனை தரிசிக்க சென்ற போது இந்த மாலவனையும் தரிசித்தேன்.

. கோயிலுக்கும் காஞ்சியிலுள்ள ஊரக பெருமாள் கோயிலுக்கும் ஒரு சம்பந்தம் உண்டு.. குலோத்துங்க சோழன் இந்தப் பகுதியை ஆண்டுவந்த போது அவனை ஒரு தோஷம் பற்றிக் கொண்டதுகொண்டது நிம்மதி இல்லாமல் தவித்தார் மன்னன்..எத்தனையோ பரிகாரம் செய்து பிரச்சனை தீரவில்லை
ஒருநாள் ஸ்ரீ மகாவிஷ்ணு மன்னனின் கனவில் தோன்றி”குலோத்துங்கா! நான் காஞ்சியில் ஊரக பெருமாளாக சேவை சாதிக்கிறேன் அங்கே வந்து நீ என்னைவணங்கினால் நீ நலம் பெறுவாய்” என்று சொன்னார். அவர் அவனது தோஷத்தை போக்கினார் பின்னர் ஊர் திரும்பிய மன்னன் அங்கே திரு ஊரகத்தானுக்குஎழுப்பினான்
பெருமாள் அவனுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற தோற்றத்துடன் காட்சி அளித்தார்.. எனவே அதேபோன்ற ஒரு விக்ரகத்தினை ஸ்தாபித்து அங்கே கோயில் கட்டினார்..

.சுவாமிக்கு திருவூரகப் பெருமாள் என்று பெயர் சூட்டினார் தாயார் பெயர் திருவிருந்தவல்லி.பொருள் இங்கு பிரகாரத்தில் லட்சுமணருடன் கூடிய கல்யாணராமர்சன்னதியும் ஆஞ்சநேயர் சன்னதியும் ஆண்டாள் சன்னதி தனியே உள்ளது
இந்த திருக்கோயில் காலை 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்..குன்றத்தூர் முருகன் கோவிலுக்குச் செல்லும் வாசகர்கள் தவறாது இந்த திருக்கோயிலில் தரிசனம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்